Published:Updated:

‘ஹோலி கவ்’... சிரிக்க, சிந்திக்க ஒரு புத்தகம் !

‘ஹோலி கவ்’...  சிரிக்க, சிந்திக்க ஒரு புத்தகம் !
பிரீமியம் ஸ்டோரி
‘ஹோலி கவ்’... சிரிக்க, சிந்திக்க ஒரு புத்தகம் !

‘ஹோலி கவ்’... சிரிக்க, சிந்திக்க ஒரு புத்தகம் !

‘ஹோலி கவ்’... சிரிக்க, சிந்திக்க ஒரு புத்தகம் !

‘ஹோலி கவ்’... சிரிக்க, சிந்திக்க ஒரு புத்தகம் !

Published:Updated:
‘ஹோலி கவ்’...  சிரிக்க, சிந்திக்க ஒரு புத்தகம் !
பிரீமியம் ஸ்டோரி
‘ஹோலி கவ்’... சிரிக்க, சிந்திக்க ஒரு புத்தகம் !

மாடு... சமீபத்தில் இந்தியாவில் இந்த வாயில்லா ஜீவனை வைத்து நடந்த அரசியலும், அமர்க்களங்களும் ஏராளம். மாட்டிறைச்சி, பசுவதை, ஜல்லிக்கட்டு என்று பல பரிமாணங்களில் பகடையாக்கப்பட்டது மாடு.

‘ஹோலி கவ்’...  சிரிக்க, சிந்திக்க ஒரு புத்தகம் !

இந்நிலையில், மாட்டை மையமாக வைத்து மேல்நாட்டில் இருந்து ஒரு புனைவுக் கதையை நகைச்சுவையோடு கலந்து கொடுத்திருக்கிறார் டேவிட் டுகோவ்னி. இவர் ஒரு ஹாலிவுட் நடிகர். பொதுவாக பிரபலங்கள் எழுதும் புத்தகங்களுக்கு வரவேற்பும், விமர்சனங்களும் இருக்கும். இவருக்கு விமர்சனங்கள் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தன. அதையும் தாண்டி இந்தப் புத்தகம் பேசப்படுவதற்குக் காரணம், எல்சி போவெரி. இவர்... இந்தப் புத்தகத்தின் ஹீரோ... இரண்டு கால்களில் நடக்கும் பசு (‘வில்லு’ படத்தில் வடிவேல் சண்டையிடுவாரே... அதே பசுதான்!). இவருடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் டாம் (இது விமானம் ஓட்டும் நெருப்புக்கோழி), இவர்களுடன் ஷாலோம் (ஒரு பன்றி). இதுபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களைக்கொண்ட ஒரு ஃபேன்டஸி கதைதான்... ‘ஹோலி கவ்’.

எல்சி... நியூயார்க்கில் இருக்கும் ஒரு சின்னப் பண்ணையில் வசிக்கும் பசு. சுதந்திரமாக மேய்ந்து திரிவதும், பால் கொடுப்பதும், எதிர்முனையில் இருக்கும் காளைகளைப் பற்றிக் கனவுகாண்பதும்தான் இதன் தினசரி நடவடிக்கைகள். ஒருநாள் எல்சி, ஜன்னல் வழியாக தொலைக்காட்சியைப் பார்க்க நேர்கிறது. அதில் வரும் காட்சிகள், எல்சியை அதிர்ச்சியில் உறையவைத்துவிட்டன. அவை, ஒரு பசுவதைக் கூடத்தில் நடக்கும் பசுவதைக் காட்சிகள்.

‘இந்தியாவில் பசு என்பது புனிதமானது. அதை யாரும் உண்ண மாட்டார்கள்’ என்ற தகவலையும் அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்க்கும் எல்சி, இந்தியாவுக்கு வர ஆயத்தமாகிறது. பன்றி ஷாலோம், எல்சியுடன் சேர்ந்துகொள்கிறது. அது இஸ்ரேல் செல்வதாகவும், வழியில் இறங்கிக்கொள்வதாகவும் சொல்கிறது. கடைசியாக அவர்களுடன் இணைந்துகொள்கிறது, நெருப்புக்கோழி டாம். அது, தான் துருக்கி நாட்டுக்கு செல்ல வேண்டும் என்கிறது. 

முதலில் மூவரும் துருக்கி செல்கின்றனர். அங்கு ஒரு ஜெட்டை திருடிக்கொண்டு இஸ்ரேல் செல்கிறார்கள். பின் அங்கிருந்து இந்தியா வருகிறார்கள். இந்தப் பயணத்தில் அவர்கள் நிறையக் கற்றுக்கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்கள். மனிதர்களின் தன்மையை அறிந்துகொள்கிறார்கள்.

எல்சி பேசும் வசனங்கள்தான், புத்தகத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.

“மனிதர்களாகிய நீங்கள் கோமாளிகள்!”

“மனிதர்கள் சுவர்களை அதிகம் விரும்புகிறார்கள். சக மனிதர்களைத் தவிர்க்கக் கட்டும் அந்த சுவர்களுக்குள் தாங்களே மாட்டிக்கொள்கிறார்கள்.’’

‘‘மனிதர்களை மிருகங்கள் என்று அழைத்து ஒருபோதும் அவமதிக்கமாட்டேன். ஏனென்றால், மிருகங்கள் மனிதர்களைவிட சிறந்தவை. மிருகங்கள் வாழ்வதற்காகக் கொல்கின்றன; கொல்வதற்காக வாழவில்லை.’’

‘‘பூமியைக் கழிவுகளும் மாசுபாடுகளும்தான் பாதிக்கும். வார்த்தைகளோ, நகைச்சுவைத் துணுக்குகளோ அல்ல.’’

- இப்படி புத்தகம் எங்கும் சிரிக்கவும், சிந்திப்பதற்குமான வசனங்கள் நிறைய.

டேவிட் ஆங்கில இலக்கியத்தில் மாஸ்டர் பட்டம் பெற்றவர். சிறந்த நடிகர். இந்தப் புத்தகத்தின் மூலமாக, மிருகங்கள் மீதான தனது அக்கறையை துடுக்காக வெளிப்படுத்தியுள்ளார். படிக்க வேண்டிய புத்தகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பா.நரேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism