Published:Updated:

ஃபேஸ்புக்கில் கேம்... வந்துடுச்சு ஆப்பு!

ஃபேஸ்புக்கில் கேம்...  வந்துடுச்சு ஆப்பு!
பிரீமியம் ஸ்டோரி
ஃபேஸ்புக்கில் கேம்... வந்துடுச்சு ஆப்பு!

ஃபேஸ்புக்கில் கேம்... வந்துடுச்சு ஆப்பு!

ஃபேஸ்புக்கில் கேம்... வந்துடுச்சு ஆப்பு!

ஃபேஸ்புக்கில் கேம்... வந்துடுச்சு ஆப்பு!

Published:Updated:
ஃபேஸ்புக்கில் கேம்...  வந்துடுச்சு ஆப்பு!
பிரீமியம் ஸ்டோரி
ஃபேஸ்புக்கில் கேம்... வந்துடுச்சு ஆப்பு!

ல வேலைகளுக்கு இடையே  நம்மவர்கள்  பலரும் அவ்வப்போது, ஃபேஸ்புக்கின் ஆஸ்தான கேம்களான கேண்டி க்ரஷ் சாகா, கிரிமினல் கேஸ், கிச்சன் ஸ்க்ராம்பிள், ஃபார்ம் வில்லே என்று விளையாடுவதும் இங்கு கள்ள நடைமுறைதான். யாருக்கும் தெரியாமல் சீக்ரெட்டாக ஆடும் இந்த ஆட்டத்துக்கு, இப்போது வந்துவிட்டது ஆப்பு!

ஃபேஸ்புக்கில் கேம்...  வந்துடுச்சு ஆப்பு!

‘சார்... உங்க எம்ப்ளாயி ஃபேஸ்புக்ல இப்போ கேம் விளையாடிட்டு இருக்கார்’ என்று நம் பாஸுக்கு காட்டுக்கொடுக்கும் காரியத்தைச் செய்யத் தொடங்கியிருக்கிறது... ஃபேஸ்புக்!

‘அய்யய்யோ... உடல் மண்ணுக்கு உயிர் ஃபேஸ்புக்குக்குன்னு வாழ்ந்துட்டு இருக்கோமே...’ என்று பதறுகிறீர்களா? என்ன செய்ய, அதே ஃபேஸ்புக்தான் இப்போது உங்களின் ஸ்பை ஆகியிருக்கிறது.

என்ன மாற்றம், முன்னேற்றம், மண்டையடி அது?! அதாவது, வேலைபார்த்த (!) களைப்பு போக ஃபேஸ்புக்கில் கேம் ஓபன் செய்தால், ஆன்லைனில் இருக்கும் உங்களின் நண்பர்களுக்கு சாட் லிஸ்ட்டில் உங்கள் பெயருக்குப் பக்கத்தில் ஒரு ஜாய் ஸ்டிக் சிம்பல் வரும். அந்த சிம்பலை கவனிப்பவர்கள், உங்கள் பெயரின் மீது மவுஸ் கர்ஸரைக் கொண்டுபோனால் போதும்... ஆய்வறிக்கைதான்.

உதாரணமாக, உங்கள் பெயர் ராகுல் ராய் என்று வைத்துக்கொள்வோம். உடனே, `Rahul Roy Playing Candy Crush Saga’ என்று காட்டும். இப்போது ஒருவேளை ஆன்லைனில் உங்கள் பாஸ் இருக்கிறார் என்றால், அவ்வளவுதான். இந்த நோட்டிஃபிகேஷன் அவரின் பார்வைக்கும் போகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபேஸ்புக்கில் கேம்...  வந்துடுச்சு ஆப்பு!

‘அதெல்லாம் சரி, நான்தான் `சாட்’-ஐ க்ளோஸ் பண்ணிடுவனே..?’ என்கிறீர்களா? ஆம்... ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், சாட் ஆன்லைன் கட் செய்துவிட்டால், உங்கள் பெயர் மேலே வராது. அதனால் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் ’அச்சோ மறந்துட்டேனே’ என ஃபீலிங் பாடுபவராக இருந்தால் கொஞ்சம் கஷ்டம்தான்.

இந்த `ஆப்’பில் ஒரு பெரிய நன்மையும் இருக்கிறது. யாருக்கு என்றால்... சின்சியராக வேலைசெய்பவர்களுக்கு.

‘காலையில இருந்து மாங்கு மாங்குனு வேலை செஞ்சுட்டு இருக்கேன். டீ பிரேக்குக்கூட போகல. ஆனா, பக்கத்துல ஸீட்ல ஒருத்தன், காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் ஃபேஸ்புக்லயே பொழுதைக் கரைச்சுட்டுப் போற இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா..?’ என்ற புலம்பலில், வெதும்பலில் இருந்த சின்சியர் வொர்க்கர்ஸுக்கு எல்லாம், இது சியர்-அப் செய்திதானே!

ஃபேஸ்புக்ல ஜாலியா ரவுசு பண்ணலாம்னு பல வேலைகளை சைலன்ட்டா பாக்குறவங்களுக்கு உஷார்னு சொல்லதான் இந்த தகவலே!

ஒரு டவுட்டு... இந்த மார்க் ஸக்கர்பெர்க் நல்லவரா, கெட்டவரா நியாயமாரே!

ஷாலினி நியூட்டன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism