Published:Updated:

நானோ டெக்னாலஜி... எதிர்காலம்!

நானோ டெக்னாலஜி...  எதிர்காலம்!
பிரீமியம் ஸ்டோரி
நானோ டெக்னாலஜி... எதிர்காலம்!

நானோ டெக்னாலஜி... எதிர்காலம்!

நானோ டெக்னாலஜி... எதிர்காலம்!

நானோ டெக்னாலஜி... எதிர்காலம்!

Published:Updated:
நானோ டெக்னாலஜி...  எதிர்காலம்!
பிரீமியம் ஸ்டோரி
நானோ டெக்னாலஜி... எதிர்காலம்!

நானோ டெக்னாலஜி... இயற்பியல், வேதியியல், பொறியியல், மின்னியல், மருத்துவம் என எல்லா தளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் துறை. நானோ டெக்னாலஜி படிப்புகள், அவை அள்ளித்தரும் வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களைத் தருகிறார், திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்ப கல்லூரியின் `நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையி’ன் இயக்குநர் டாக்டர் வி.ராஜேந்திரன்.

நானோ டெக்னாலஜி...  எதிர்காலம்!

நானோ டெக்னாலஜி (Nano Technology) என்றால் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நானோ டெக்னாலஜி...  எதிர்காலம்!

ஒரு பொருளின் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் அளவைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பமே, நானோ டெக்னாலஜி. தொழில்துறையில் இருந்து மருத்துவத்துறை வரை, நானோ தொழில்நுட்பம் பல துறைகளிலும் நீக்கமற பயன்படுத்தப்படுகிறது. எனவேதான், அதற்கான வேலை வாய்ப்புகளும் பெருகியவண்ணம் உள்ளன.

நானோ டெக்னாலஜி...  எதிர்காலம்!

கல்வித் தகுதி

நானோ டெக்னாலஜி...  எதிர்காலம்!

ப்ளஸ் டூ-வில் கணிதம் - உயிரி யல் அல்லது கணித அறிவியல், கணினி அறிவியல் பிரிவில் படித்த மாணவர்கள், 4 வருடப் படிப்பான பி.டெக்., நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (B.Tech., Nano Science & Technology) படிக்க விண்ணப்பிக்கலாம்.

கல்லூரிகள்

நானோ டெக்னாலஜி...  எதிர்காலம்!

இந்தியாவைப் பொறுத்த வரையில் ஒரு சில கல்லூரி களிலேயே இளநிலை மற்றும் முதுநிலை நானோ டெக்னாலஜி படிப்புகள் வழங்கப்படுகின்றன. நொய்டா, அமிதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் நானோ டெக்னாலஜி, தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இளநிலை நானோ டெக்னாலஜி படிப்பை வழங்குகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சில சுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும் B.Tech நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பயிற்று விக்கப்படுகிறது. கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில், பி.எஸ்.ஸி., ஃபிசிக்ஸ் - நானோ டெக்னாலஜி படிப்பு வழங்கப் படுகிறது. கோவை, அண்ணா பல்கலைக்கழகம், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், வேலூர், வி.ஐ.டி. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் முதுநிலை நானோ டெக்னாலஜி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

நானோ டெக்னாலஜி...  எதிர்காலம்!

மேற்படிப்பு

நானோ டெக்னாலஜி...  எதிர்காலம்!

நான்கு வருடப் படிப்பான பி.டெக் நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி முடித்தவர்கள் முதுநிலைப்படிப்பான எம்.டெக்., நானோ டெக்னாலஜியில் சேரலாம். அதற்கு TANCET  (Tamilnadu common Entrance Test) நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்தத் துறையில் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கும் (Ph.D) விரிவான தளம் உள்ளது.

வேலைவாய்ப்பு

நானோ டெக்னாலஜி...  எதிர்காலம்!
நானோ டெக்னாலஜி...  எதிர்காலம்!

மருத்துவத்துறை, அறிவியல், சுற்றுப்புறச்சூழல், தகவல் தொடர்பு, பிரின்ட்டிங் டெக்னாலஜி, உணவியல் என்று எல்லா துறைகளிலும் நானோ டெக்னாலஜியின் தேவை நாளுக்கு நாள் நிறைந்தும் வளர்ந்தும் வருவதால், இந்தப் படிப்புக்கு பல்துறை வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும், வருங்காலத்தில் நானோ படிப்பை வழங்கும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் எண் ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்ப தால், பேராசிரியர், ஆய் வாளர்கள் பணிகளுக்கும் பிரகாசமான வாய்ப்புகள்   உள்ளன.

நானோ டெக்னாலஜி...  எதிர்காலம்!
நானோ டெக்னாலஜி...  எதிர்காலம்!

நானோ... எதிர்காலத் தின் ஏணி!

ச.ஆனந்தப்பிரியா,படம்:சூ.நந்தினி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism