Published:Updated:

‘ஆன்லைன்’ ஜுவல்லரி... அமெரிக்கா வரை கஸ்டமர்ஸ்!

‘ஆன்லைன்’ ஜுவல்லரி... அமெரிக்கா வரை கஸ்டமர்ஸ்!

‘ஆன்லைன்’ ஜுவல்லரி... அமெரிக்கா வரை கஸ்டமர்ஸ்!

‘ஆன்லைன்’ ஜுவல்லரி... அமெரிக்கா வரை கஸ்டமர்ஸ்!

‘ஆன்லைன்’ ஜுவல்லரி... அமெரிக்கா வரை கஸ்டமர்ஸ்!

Published:Updated:
‘ஆன்லைன்’ ஜுவல்லரி... அமெரிக்கா வரை கஸ்டமர்ஸ்!

ர்மிளா பிரியா... சென்னை, எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியின் இறுதியாண்டு கெமிக்கல் இன்ஜினீயரிங் மாணவி. ஷாரதா... சென்னை, செயின்ட் ஜோசப்’ஸ் பொறியியல் கல்லூரியின் இறுதியாண்டு கெமிக்கல்  இன்ஜினீயரிங் மாணவி. இவர்களின் பார்ட்னர்ஷிப் பிசினஸ்... ‘இன்பியூஸ்’ (INFUZE) ஆன்லைன் ஜுவல்லரி (https://www.facebook.com/infuzeideas/). அவர்களே சொல்கிறார்கள்... ஆல் டீட்டெயில்ஸ்!

‘ஆன்லைன்’ ஜுவல்லரி... அமெரிக்கா வரை  கஸ்டமர்ஸ்!

ஷாரதா: நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் டேஸ்ல இருந்து ஃப்ரெண்ட்ஸ். ரெண்டு பேருக்குமே கிராஃப்ட்டில் ஆர்வம். கிளாஸ் எதுவும் போகாம கூகுள், வீடியோஸ்னு க்வில்லிங் கிராஃப்ட் கத்துக்கிட்டோம்.

ஷர்மிளா: ஃப்ரெண்ட்ஸ் எல்லோ ரும் நாங்க செய்த க்வில்லிங் ஜுவல்லரி எல்லாம் ரொம்ப புரொஃபஷனலா இருக்குன்னு சொல்ல, பொழுதுபோக்கா ஆரம்பிச்சதை பிசினஸ் ஆக்கினா என்னனு ஒரு ஸ்பார்க். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சுட்டோம் ‘இன்பியூஸ்’ ஆன்லைன் ஜுவல்லரி. இப்போ எங்களுக்கு டெல்லி, கொச்சின்னு இந்தியா மட்டும் இல்லாம... துபாய், அமெரிக்காவரை கஸ்டமர்ஸ் இருக்காங்க. ஆரம்பத்துல ஃபேஸ்புக் மூலமாதான் விளம்பரப்படுத்தினோம். வாட்டர் ரெசிஸ்டன்ட், குவாலிட்டினு கஸ்டமர்களைத் தேடி வரவெச்சோம். இப்போ கஸ்டமைஸ்டு ஜுவல்லரீஸும் செஞ்சுத் தர்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஆன்லைன்’ ஜுவல்லரி... அமெரிக்கா வரை  கஸ்டமர்ஸ்!

ஷாரதா: ஆரம்பத்துல பேரன்ட்ஸ், எங்க படிப்பு என்னாகுறதுனு பயந்தாங்க. ஆனா, அங்கயும் நல்ல மார்க்ஸ் எடுத்து இங்கயும் நல்ல வருமானம் எடுத்ததும்... அவங்க ஹேப்பி அண்ணாச்சி! எங்க ஃப்ரெண்ட்ஸ்... எங்க பொருட்களை வாங்குறது, சரியில்லாததைச் சுட்டிக் காட்டுறது, எங்க ஃபேஸ்புக் பேஜ் ஷேர் பண்றதுனு... பெரிய சப்போர்ட்டா இருக்காங்க.

ஷர்மிளா: இப்போ நாங்க அடுத்த படியில் ஏறிட்டோம். ‘தக்‌ஷின்யா’ன்னு நான் டெரகோட்டா நகைகள் செய்ய, ‘நக்‌ஷத்ரா’ன்னு ஷாரதா மெட்டல், ஆன்டிக் நகைகள் செய்றா. இன்னொரு பக்கம், பேப்பர் க்வில்லிங்கில் ஜுவல்ஸ் மட்டுமில்லாம வீட்டு அலங்காரப் பொருட்கள், போட்டோ ஃப்ரேம்னு கலக்குறோம். பண்டிகை காலம், காதலர் தின, பெண்கள் தின கொண்டாட்டங்கள்னு சீஸனுக்கு ஏற்ற புராடக்ட்களை கொடுக்கிறதுதான் வெற்றிக்குக் காரணம். கிரீட்டிங் கார்ட்ஸ், ஸ்டேஷனரியில் இருந்து 3D பேப்பர் க்வில்லிங் கொண்டுவர்றது வரைக்கும் திட்டங்கள் ஓடிட்டு இருக்கு.

‘ஆன்லைன்’ ஜுவல்லரி... அமெரிக்கா வரை  கஸ்டமர்ஸ்!

ஷாரதா: ஆரம்பத்துல மாசம் 500 ரூபாயா இருந்த வருமானம், இப்போ 5,000 ரூபாய் ஆகியிருக்கு. கம்மல், டிசைனைப் பொறுத்து 50 முதல் 500 ரூபாய்வரை விலைபோகும். சமீபத்தில் துபாய்க்கு 50 தோடுகள் அனுப்பிருக்கோம். இதுல ஸ்பெஷல் என்னன்னா, எங்களோட ஆரம்பகால முதலீடு வெறும் 500 ரூபாய்தான். மூணே வாரத்துல அதைவிட மூணு மடங்கு சம்பாதிச்சுட்டோம். சம்பாதிக்கற பணத்தை பிசினஸ்ல போடுறோம். பேரன்ட்ஸ்கிட்ட பாக்கெட் மணி வாங்காம எங்க செலவுகளை நாங்களே பார்த்துக்கிறோம். கெத்துல!

ஷர்மிளா
: நாங்க படிக்கிற காலேஜ்லயே பேப்பர் க்வில்லிங், டெரக்கோட்டா ஜுவல்ஸ் வொர்க்‌ஷாப் நடத்தி, எங்க ஃப்ரெண்ட்ஸுக்கும் கற்றுக்கொடுத்தது, கிரேட் ஃபீல்!

சக்சஸ் கேர்ள்ஸ்!

தா.நந்திதா   படங்கள்:மா.பி.சித்தார்த் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism