Published:Updated:

ஹெச்.ஆர் இன்டர்வியூ... பயபுள்ளைங்க மைண்ட் வாய்ஸ்!

ஹெச்.ஆர் இன்டர்வியூ...  பயபுள்ளைங்க மைண்ட் வாய்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஹெச்.ஆர் இன்டர்வியூ... பயபுள்ளைங்க மைண்ட் வாய்ஸ்!

ஹெச்.ஆர் இன்டர்வியூ... பயபுள்ளைங்க மைண்ட் வாய்ஸ்!

ஹெச்.ஆர் இன்டர்வியூ... பயபுள்ளைங்க மைண்ட் வாய்ஸ்!

ஹெச்.ஆர் இன்டர்வியூ... பயபுள்ளைங்க மைண்ட் வாய்ஸ்!

Published:Updated:
ஹெச்.ஆர் இன்டர்வியூ...  பயபுள்ளைங்க மைண்ட் வாய்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஹெச்.ஆர் இன்டர்வியூ... பயபுள்ளைங்க மைண்ட் வாய்ஸ்!

ல்லூரிகளில் இது கேம்பஸ் இன்டர்வியூ நேரம். தீயாக வேலைசெய்து அரியர்கள் அகற்றி, இன்டர்வியூவில் `தீப்பொறி திருமுக’மாக ஒவ்வொரு ரவுண்டையும் தம் பிடித்துக் கடந்து முன்னேறி, ‘நாங்கள்லாம் யாரு?’ என மிதப்பில் அமர்ந்திருப்போம்... ஹெச்.ஆர். கேள்வி கேட்கிறவரை! கேள்விகள் ஆரம்பமானதும், நம் மைண்ட் வாய்ஸில் சில பல சூரிகளும், சந்தானங்களும் கடந்துபோவது நமக்கு மட்டுமே தெரிந்த சீக்ரெட். அதை இங்கே போட்டு உடைத்துவிடலாமா? கமான்... தெறிக்கவிட்ருவோம்!

ஹெச்.ஆர் இன்டர்வியூ...  பயபுள்ளைங்க மைண்ட் வாய்ஸ்!

ஹெச்.ஆர் (ரெஸ்யூமை புரட்டிக்கொண்டே): யுவர் குட் நேம் ப்ளீஸ்...

மைண்ட் வாய்ஸ்: அதான் ரெஸ்யூம்ல கொடுத்திருக்கோம்ல! ரொம்பத்தாண்டா பண்றீங்க..!

ஆக்சுவல் வாய்ஸ்: சரவணன் சார்.

ஹெச்.ஆர்: எங்க கம்பெனி பத்தி என்ன தெரியும்?

மைண்ட் வாய்ஸ்: உச்சி மண்டையில உஜாலா கொட்டற கம்பெனிதானேடா உன்னது?

ஆக்சுவல் வாய்ஸ் (மிகவும் பெருமையாக): வோர்ல்டு லெவல்ல டாப் 10 கம்பெனிகளில் இதுவும் ஒண்ணு சார்.

ஹெச்.ஆர்: நீங்க ஏன் இந்த கோர்ஸ் ச்சூஸ் பண்ணீங்க?

மைண்ட் வாய்ஸ்: அதுக்கான பதிலைத்தாண்டா நானும் தேடிட்டு இருக்கேன் பரங்கி மண்டையா... அவ்வ்வ்!

ஆக்சுவல் வாய்ஸ்: இது என்னோட இன்ட்ரஸ்ட், பேஷன், ஃப்யூச்சர் எல்லாமே சார்.

ஹெச்.ஆர்: கோடிங் போடுவீங்களா?

மைண்ட் வாய்ஸ்: இப்படியே கேள்வி கேட்டுட்டு இருந்த... இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னைய போடறேன்.

ஆக்சுவல் வாய்ஸ்: ஷ்யூர் சார். 

ஹெச்.ஆர்: ஏரியா ஆஃப் இன்ட்ரஸ்ட் பொயட்ரினு குறிப்பிட்டிருக்கீங்களே... எங்கே, ஒரு கவிதை சொல்லுங்க கேப்போம்.

மைண்ட் வாய்ஸ்: உஸ்ஸ்... இப்பவே கண்ணைக் கட்டுதே!

ஆக்சுவல் வாய்ஸ் (அசடு வழிந்துகொண்டே): பட்டப் பகலிலே பங்குனி வெயிலிலே என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலா! அடடே!

ஹெச்.ஆர்: ஸ்கூலிங் எல்லாம் பாய்ஸ் ஸ்கூல்ல முடிச்சிருக்கீங்க. காலேஜ்ல கோ.எட்... அந்த டிரான்ஸ்ஃபர்மேஷன் எப்படி இருந்தது?

மைண்ட் வாய்ஸ்: அது செம்ம ஃபீல் மச்சி!

ஆக்சுவல் வாய்ஸ் (கண்ணில் `ஹார்ட்டின்’ பறக்கும் ஸ்மைலியைக் கட்டுப்படுத்தியபடி):
யெஸ்... புது எக்ஸ்பீரியன்ஸ் சார். கேர்ள்ஸ் ரொம்பவே சப்போர்ட்டிவ்.

ஹெச்.ஆர்: உங்க ஃபேமிலி பத்தி சொல்லுங்க.

மைண்ட் வாய்ஸ்: அடேய், லகுட பாண்டி..!

ஆக்சுவல் வாய்ஸ்: அம்மா, அப்பா, அண்ணா... அண்ட் மீ சார். 

ஹெச்.ஆர்: சாலரி எவ்ளோ எதிர்ப்பார்க்கறீங்க?

மைண்ட் வாய்ஸ்: அய்யா தர்மராசா!

ஆக்சுவல் வாய்ஸ்: உங்கள் விருப்பம் சார்.

ஹெச்.ஆர்: லாஸ்ட் கொஸ்டீன். சப்போஸ் நீங்க இந்த இன்டர்வியூல செலக்ட் ஆகலைன்னா எப்படி ஃபீல் பண்ணுவீங்க?

மைண்ட் வாய்ஸ்: புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் இவன!

ஆக்சுவல் வாய்ஸ்: நம்பிக்கையோட அடுத்த கம்பெனிக்கு ட்ரை பண்ணுவேன் சார்.

ஹெச்.ஆர்: ஓகே... இன்டர்வியூ ஓவர். என்கிட்ட எதாவது நீங்க கொஸ்டீன் கேக்க விருப்பப்படுறீங்களா?

மைண்ட் வாய்ஸ்: உன்னை எல்லாம் யார்யா ஹெச்.ஆரா செலக்ட் பண்ணது?

ஆக்சுவல் வாய்ஸ் (மிகுந்த பயபக்தியுடன்): சார், நான் செலக்டடா சார்?

ஹெச்.ஆர் (சில நொடிகள் மௌனத்துக்குப் பின்): யெஸ்... யூ ஆர் செலக்டட்!

மைண்ட் வாய்ஸ்: அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு... வாடா வாடா வாடா நீ வாடா. இருந்தாலும், நிஜமாதான் சொல்றியா?

ஆக்சுவல் வாய்ஸ்: சார்ர்ர்ர்... தேங்க்யூ ஸோ மச்ச்ச்ச் சார்!

பொதுநலன் கருதி வெளியிடுவோர்... இன்டர்வியூவில் செலக்ட்டான அடிமைகள் சங்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ச.ஆனந்தப்பிரியா,ஓவியம்: பிரேம் டாவின்சி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism