Published:Updated:

எல்லாம் பயமயம்!

எல்லாம் பயமயம்!

எல்லாம் பயமயம்!

எல்லாம் பயமயம்!

எல்லாம் பயமயம்!

Published:Updated:
எல்லாம் பயமயம்!

வ்வொருவருக்கும் சில குறிப்பிட்ட விஷயங்களுக்கு பயம் இருக்கும். சிலருக்கு அது வித்தியாசமாகவும், இன்னும் சிலருக்கு அது விநோதமாகவும் இருக்கும். அச்சத்தை ‘ஃபோபியா’ என்று அழைக்கும் மனநல மருத்துவ உலகம், ஒவ்வொரு அச்சத்துக்கும் பிரத்யேகப் பெயர்கள் வைத்திருக்கிறது. அதில் சில சுவாரஸ்யமான `ஃபோபியா'க்களின் அறிமுகம் இங்கே...

எல்லாம் பயமயம்!

ஸ்கோபோஃபோபியா (Scopophobia)

‘அவங்க நம்மளைப் பார்க்கிறாங்களோ’, இவங்க எல்லாம் என்னைப் பார்த்துடுவாங்களே’ என்று பயப்படுவதற்குப் பெயர், ஸ்கோபோஃபோபியா. இந்த ஃபோபியா உடையவர்கள், வீட்டைவிட்டுக்கூட வெளிவரத் தயங்குவார்கள். கூட்டமான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால், வியர்த்துக்கொட்டி, இதயம் படபடவென அடித்து, திணறித் திண்டாடுவார்கள்.

(பல தமிழ் படங்கள்ல ஹீரோ இப்படி இருந்துதானே, அப்புறம் ஒரு ஆக்‌ஷன் ஸீன்ல விஸ்வரூபம் எடுக்கிறாரு?! அதனால இந்த ஃபோபியா இருக்கிறவங்களும் பின்னாளில் ஹீரோவாக வாய்ப்பிருக்கா?! டவுட்டு!)

அகோராஃபோபியா (Agoraphobia)

சாலையைக் கடக்கப் பயப்படுவது... அகோராஃபோபியா. அன்று செமஸ்டர் எக்ஸாமே இருந்தாலும், தனியாக ரோட்டைக் கிராஸ் செய்ய வேண்டும் என்றால், லீவு போட்டுவிடுவார்கள் இவர்கள். ‘எதிர்பக்கம் இருக்கிற கடையில போய் பால் பாக்கெட் வாங்கிட்டு வா’ என்பதுதான், உலகத்தில் இவர்களைப் பயமுறுத்தும் உச்சபட்ச வார்த்தைகள். ஒருவேளை போயேதான் தீரவேண்டும் என்றால், அந்தப் பயணத்துக்கு (!) ரூம்போட்டு யோசிக்கும் அளவுக்கு, சாலையைப் பாதுகாப்பில்லாததாக உணர்வார்கள்.

(இப்படி ஒரு பொண்ணு கிடைச்சாதானே ‘யாரந்த முயல்குட்டி...’னு பாட்டுப் பாட முடியும்?!)

அப்லுடோஃபோபியா (Ablutophobia)

‘குளிக்கணுமா... அய்யோ...’ என்று முகம் சுளித்துச் சிணுங்கும் கண்மணீஸ்... கங்கிராட்ஸ். குளிக்கவோ, தண்ணீரில் பொருட்களைச் சுத்தம் செய்யவோ ஏற்படும் காரணமற்ற பயம்தான், அப்லுடோஃபோபியா. பொதுவாக, இது ஆண்களைவிட பெண்களுக்குதான் அதிகம் இருக்கிறது என்கின்றன ஆய்வுத் தகவல்கள்.

(பெண்ணின மானத்தை பப்ளிக்கில் இப்படியா போட்டு உடைப்பது?!)

ஃபிலோஃபோபியா (Philophobia)

காதல், கல்யாணம், நட்பு என எந்த உறவுடனும், யாருடனும் பத்தடி தள்ளியே நிக்கிற மக்காஸ்... உங்களின் பிரச்னை, ஃபிலோஃபோபியா. சுத்தி இருப்பவர்கள் எல்லாம் காதலித்து ‘தள்ளிப் போகாதே’ என்று ஃபீலுடன் பாடிக்கொண்டிருக்க, உங்களின் நிலைமையை நினைத்தால் ஒரே வருத்தம்ஸ்தான்.

(இந்தப் பிரச்னைக்கு ஏதாச்சும் தாயத்து கிடைக்குமா?!)

சோம்னிஃபோபியா (Somniphobia)

‘தூக்கத்தில் கெட்ட கனவு வந்துவிடுமோ’, ‘தூங்கும்போது நம்மை யாராவது தாக்கிவிடுவார்களோ’ என்றெல்லாம் பதறி தூக்கத்தைத் தொலைக்கும் பாவ ஜீவன்களைப் பிடித்திருக்கும் பிரச்னை, சோம்னிஃபோபியா. இவர்களுக்கு ‘குட் நைட்’ சொல்ல முடியாது பாவம்! 

(ஆத்தி... இப்படியெல்லாமா பயப்படுவாங்க?!)

கீட்டோஃபோபியா (Chaetophobia)

தலை வாரும்போது, ‘முடி கொட்டுதே’ என்று கண்ணீர் வடிப்பவர்கள் பலர். ஆனால், கீட்டோஃபோபியா உள்ளவர்கள் தலை சீவவே பயப்படுவார்கள். கூந்தல் மற்றும் உடலின் பிற இடங்களிலும் இருக்கும் முடியைக் கண்டாலே இவர்களுக்கு ஒருவித பயம் ஏற்படும்.

(வழுவழுனு மொட்டை அடிச்சிருங்க!) டிசைடோஃபோபியா (Decidophobia)

‘வாழ்க்கையின் சின்ன முடிவில் இருந்து பெரிய முடிவுவரை ஒவ்வொன்றுக்கும் ரூம் போட்டு யோசிக்கும் சிந்தனையாளர்களே... உங்களுக்கு இருக்கும் பிரச்னையைதான் டிசைடோஃபோபியா என்கிறார்கள். மேலும், முடிவை எடுப்பதில் குழப்பத்துடன் எடுத்த முடிவு குறித்த பயமும் உங்களைப் பிடித்துக்கொள்வதாகச் சொல்கிறார்கள்.

(யாரெல்லாம் அது... கை தூக்குங்க!)

பின்குறிப்பு: ‘இதெல்லாம் சும்மா உதாரு. இப்படி எல்லாம்கூட பயம் இருக்குமா?’ என்கிறீர்களா? இப்படி யாரையும், எதையும் நம்பாமல் பயப்படுவதும் ஒரு ஃபோபியாதான். அதைப் பற்றி நீங்களே கூகுளாண்டவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோ.இராகவிஜயா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism