Published:Updated:

படிச்சுட்டே கலக்கும் ஆங்கரிங் கேர்ள்!

படிச்சுட்டே கலக்கும் ஆங்கரிங் கேர்ள்!
பிரீமியம் ஸ்டோரி
படிச்சுட்டே கலக்கும் ஆங்கரிங் கேர்ள்!

படிச்சுட்டே கலக்கும் ஆங்கரிங் கேர்ள்!

படிச்சுட்டே கலக்கும் ஆங்கரிங் கேர்ள்!

படிச்சுட்டே கலக்கும் ஆங்கரிங் கேர்ள்!

Published:Updated:
படிச்சுட்டே கலக்கும் ஆங்கரிங் கேர்ள்!
பிரீமியம் ஸ்டோரி
படிச்சுட்டே கலக்கும் ஆங்கரிங் கேர்ள்!

‘‘அஞ்சு வருஷமா படிப்பு ஒரு பக்கம், ஆங்கரிங் மறுபக்கம்னு ஓடிட்டு இருக்கேன். இந்தப் பரபரப்பு எனக்குப் பிடிச்சிருக்கு!’’

படிச்சுட்டே கலக்கும் ஆங்கரிங் கேர்ள்!

- கலகலவென ஆரம்பிக்கிறார் `கீர்த்தி' என செல்லமாக அழைக்கப்படும் ஜெயா டி.வி ஆங்கர் கீர்த்தனா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படிச்சுட்டே கலக்கும் ஆங்கரிங் கேர்ள்!

‘‘சென்னைப் பொண்ணு நான். மிடில் கிளாஸ் ஃபேமிலி. அப்பா டிகிரி படிக்காததால, ரொம்ப கஷ்டப்பட்டு ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்தார். அதனால, எனக்கும், என் தம்பிக்கும் படிப்போட அவசியத்தைப் பத்திச் சொல்லிச் சொல்லியே வளர்த்தார். என்னை இன்ஜினீயரிங் படிக்கவைக்க எங்கப்பாவுக்கு ஆசை. எனக்கு மீடியா ஆசை. அப்பாவுக்கு சினிமா, சேனல் எல்லாம் பார்க்கக்கூடப் பிடிக்காது. ரெண்டு பேரும் ஒரு அக்ரிமென்ட் போட்டோம். ‘ஆர்ட்ஸ், சயின்ஸ் படிச்சா டபுள் டிகிரி முடிக்கணும்’னு அப்பா சொல்ல, ‘சரி, அந்த அஞ்சு வருஷமும் என்னை என் போக்கில் விட்டுடணும்’னு நான் அப்பாகிட்ட பிராமிஸ் வாங்கிக்கிட்டேன்.

படிச்சுட்டே கலக்கும் ஆங்கரிங் கேர்ள்!

ப்ளஸ் டூ முடிச்சதும், அண்ணா ஆதர்ஷ் காலேஜ்ல பி.எஸ்ஸி., கம்ப் யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன். அந்த நேரம் மயிலாப்பூர்ல இருக்கிற ‘அகாடமி ஆஃப் ரேடியோ ஸ்டடீஸ்’ல `ஆர்ஜே’ கான பயிற்சி வகுப்புக்கும் அப்ளை செய்தேன். இன்டர்வியூவில் செலக்ட் ஆகிட்டேன். காலேஜ்ல படிச்சுட்டே, பார்ட் டைமா ரேடியோ அகாடமியில ஆறு மாசம் டிரெயினிங் முடிச்சேன். ஒரு ஷோவுக்கான ஸ்கிரிஃப்ட் எழுத, ஷோவை நடத்த என்று அங்க நிறைய கத்துக்கிட்டேன். சீனியர் `ஆர்ஜே’க்களும் பயிற்சி கொடுத்தாங்க.

அந்த நேரம் இமயம் டி.வி-யில ஆங்கரா வாய்ப்பு கிடைக்க, எட்டு மாசம் வேலை செய்தேன். அங்க நிறைய செலிப்ரிட்டி ஷோக்களையும், சினிமா விமர்சன ஷோக்களையும் லைவ் ஆக செய்த அனுபவம், இந்த ஃபீல்டில் நம்பிக்கையோட என்னை கால் ஊன்ற வெச்சது. அடுத்து சன் மியூசிக் சேனலுக்கு ஷிஃப்ட் ஆனேன். அங்க என்னை ஊக்கப்படுத்த, நிறைய சீனியர்ஸ் கிடைச்சாங்க. தொடர்ந்து ஜெயா டி.வி-க்கு மாறி, இப்போ கடந்த நாலு வருஷமா ஆங்கரா செட்டிலாகிட்டேன்.

படிச்சுட்டே கலக்கும் ஆங்கரிங் கேர்ள்!

நான் அஞ்சு வருஷமா படிச்சுட்டே, பார்ட் டைம் ஆக ஆங்கர் வேலை பார்க்கிறது பெருமையா இருக்கு. இப்பவும் எங்கப்பாவுக்கு இந்த மீடியா வேலை பிடிக்கல. ஆனா, நான் படிப்பிலும் சூப்பரா ஸ்கோர் செய்றதால ‘மகளே உன் சமத்து’னு விட்டுட்டு இருக்கார். இப்போ அதே காலேஜ்ல எம்.எஸ்ஸி.,  ஃபைனல் இயர் படிக்கிறேன். எப்பவும் என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸில் இருந்து புரொஃபசர்ஸ் வரை எனக்கு ஊக்கம் அளிப்பவங்களா இருந்திருக்காங்க. அதனாலதான் படிப்பையும் வேலையையும் பேலன்ஸ் செய்ய முடியுது.

ஆரம்ப நாட்கள்ல, அடுத்த நாள் ஷூட்டுக்கான டிரெஸ்ஸைப் போட்டுப் பார்த்து, முந்தின நாளே கண்ணாடி முன்னாடி ரிகர்சல் பார்த்துப்பேன். இப்போ எல்லாம் எனக்கு ரெக்கார்டிங்கைவிட லைவ் ஷோதான் பிடிக்குது எனும் அளவுக்கு இதில் எக்ஸ்பர்ட் ஆயாச்சு. இப்போ ஜெயா டி.வி யில நார்மல் மற்றும் ஸ்பெஷல் செலிப்ரிட்டி ஷோக்களையும், ஜெயா மேக்ஸ்ல நிறைய லைவ் நிகழ்ச்சிகளையும் ஆங்கரிங் பண்ணிட்டு இருக்கேன். காலேஜ், படிப்பு, ஷோவுக்கான பேக்கிரவுண்ட் வொர்க், ஷோஸ்னு இப்படி பரபரப்பா இயங்கிட்டு இருக்கிறது சுவாரஸ்யமா இருக்கு. காலேஜுக்கு அடிக்கடி லீவ் போட வேண்டி இருக்கும். அட்டெண்டன்ஸ் பிலோ ஆவரேஜ் போகாத அளவுக்குப் பார்த்துப்பேன்.

படிச்சுட்டே கலக்கும் ஆங்கரிங் கேர்ள்!

எங்க காலேஜோட பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் அவார்டான ‘டாக்டர் சென்னா ரெட்டி விருது’, இந்த வருஷம் எனக்கு! அதோட இப்போ நான் ‘சென்னை டர்ன்ஸ் பிங்' (Chennai turns Pink) அமைப்பின் பிராண்ட் அம்பாஸடராகவும் இருக்கேன்.

படிச்சுட்டே கலக்கும் ஆங்கரிங் கேர்ள்!

பார்த்தீங்களா... இதான் ஆங்கரின் பிரச்னையே. விட்டா பேசிட்டே இருப்போம். சரி, ஒரு மெசேஜ் சொல்லி முடிச்சிக்கலாம். படிச்சிட்டே சம்பாதிக்கிறது கெத்தான அனுபவம். காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் எல்லாருமே சாயங்காலம் பக்கத்துவீட்டு குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுக்கிறதில் இருந்து பார்ட்டைம் ஜாப், பிசினஸ் வரை ஏதாச்சும் ஒரு விஷயம் செய்து பாருங்க. அந்த அனுபவம் உங்களுக்கு இந்த சமுதாயத்துல வாங்கித் தர்ற அங்கீகாரமும், மரியாதையும் பெருசா இருக்கும். ஸ்டே என்கேஜ்டு!’’

உங்களிடமிருந்து விடைபெற்றவர், கீர்த்தி!

கு.ஆனந்தராஜ், படங்கள்:எம்.உசேன்