Published:Updated:

ஸ்க்ரீன் ஷாட்!

ஸ்க்ரீன் ஷாட்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்க்ரீன் ஷாட்!

ஸ்க்ரீன் ஷாட்!

ஸ்க்ரீன் ஷாட்!

ஸ்க்ரீன் ஷாட்!

Published:Updated:
ஸ்க்ரீன் ஷாட்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்க்ரீன் ஷாட்!

சோஷியல் மீடியாஸ்ல கண்ணுல பட்ட கலர்ஃபுல் க்ளிக்ஸ் இங்கே!

ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!

காளையன் @Aruns212

'மூஞ்சியப் பாரு' என்று திட்டியவுடன், குழந்தை எந்த சலனமுமின்றி நமது முகத்தைப் பார்ப்பது அழகியல் வகையைச் சார்ந்தது ஆகும்.

சௌமியா @sowmya_16

வளர்ச்சி அடைய அடைய தோல்வியை தாங்கி கொண்டால் மட்டும் போதாது, பிறரின் விமர்சனங்களையும் தாங்கி கொள்ள வேண்டும்..

கலைலலிதா @KalaiLalitha

காதலென்ன திரவமா? யாரைக் கேட்டாலும் நிரம்பி வழிகிறதென்கிறார்களே?!

Lady Nandhu @Nandhuism

எந்த டிரெஸ்ஸ போடலாம்ன்னு முடிவெடுக்கிற துக்குள்ள... எவ்வளவு ரீவைண்ட் பட்டன்ஸ்... கடைசியா இந்த டிரெஸ் எப்படி போட்டோம்னு யோசிக்கிறதுக்குள்ள...

Vigneswari Suresh @VignaSuresh 

வேலைக்கு போகும் அம்மாக்களுக்கு, 'தூக்கம்' கூட ஹாலிடே ப்ளானில் வருகிறது.

பிரியமுடன் துரோகி @Dhrogi 

பிரியமானவர்கள் உணவு பரிமாறும்போது அவர்கள் பசிக்கும் சேர்த்து சாப்பிட வேண்டியதாக இருக்கிறது

ஸ்க்ரீன் ஷாட்!

வாழ்க்கையில் எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்...

1.மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2.ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3.உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்துக்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்துகொள்ளாதீர்கள்.

5.
முடிந்தவரை கடன்களைக் கட்டிவிடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்திவிடுங்கள்.

6.விடியும் முன்னால் எழுந்துவிடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்துவிடுங்கள். முடிந்தால் தவிர்த்துவிடுங்கள்.

8.எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9.நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

11.வாரம் மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ... பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14.
அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15.மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16.உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17.
குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18.மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியலிடுங்கள்.

19.
மற்றவர்களைப் பேசவிடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20.உங்கள் நேரத்துக்கும், மற்றவர்கள் நேரத்துக்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21.உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ, நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22.உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிராதீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

24.தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவது தான் எதிர்காலத்துக்காக சேர்க்கும் சொத்துக்கள்.

25.    உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்

பின்பற்றுங்கள்…வெற்றிபெறுங்கள்!

தொகுப்பு: பொன்.விமலா, கார்த்தி ச.ஆனந்தப்பிரியா, தா.நந்திதா