Published:Updated:

ஹைபிரிட் சேலஞ்ச்... அசத்திய ஸ்டூடன்ட்ஸ்!

ஹைபிரிட் சேலஞ்ச்... அசத்திய ஸ்டூடன்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஹைபிரிட் சேலஞ்ச்... அசத்திய ஸ்டூடன்ட்ஸ்!

ஹைபிரிட் சேலஞ்ச்... அசத்திய ஸ்டூடன்ட்ஸ்!

ஹைபிரிட் சேலஞ்ச்... அசத்திய ஸ்டூடன்ட்ஸ்!

ஹைபிரிட் சேலஞ்ச்... அசத்திய ஸ்டூடன்ட்ஸ்!

Published:Updated:
ஹைபிரிட் சேலஞ்ச்... அசத்திய ஸ்டூடன்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஹைபிரிட் சேலஞ்ச்... அசத்திய ஸ்டூடன்ட்ஸ்!
ஹைபிரிட் சேலஞ்ச்... அசத்திய ஸ்டூடன்ட்ஸ்!

மீபத்தில் போபாலில் நடந்த பொறியியல் கல்லூரிகளுக்கான, தேசிய அளவிலான ‘ஹைபிரிட் சேலஞ்ச்’ எனப்படும் கார் வடிவமைப்புப் போட்டியில், இந்திய அளவில் மூன்றாவதாகவும், தமிழ்நாட்டு அளவில் முதலாவதாகவும் வந்து முத்திரை பதித்துள்ள மகிழ்ச்சி, சென்னை, ஆர்.எம்.கே இன்ஜினீயரிங் கல்லூரியின் மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல் டிபார்ட்மென்ட் மாணவர்களுக்கு!

ஹைபிரிட் சேலஞ்ச்... அசத்திய ஸ்டூடன்ட்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘சாதாரண கார், பெட்ரோலிலோ டீசலிலோ ஓடும். ஆனா, ஹைபிரிட் கார் பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் மூலமும் ஓடும். அந்த ஹைபிரிட் காரை டிசைன் செய்றதுதான் போட்டி. ஒவ்வொரு வருஷமும் ‘இம்பீரியல் சொசைட்டி ஆஃப் இன்னோவேட்டிவ் இன்ஜினீயர்ஸ்’ நடத்தும் ‘ஹைபிரிட் சேலஞ்ச்’ போட்டியில், இந்த முறை ‘சிறந்த புதுமைப் படைப்பு’ பிரிவில் பரிசைத் தட்டியிருக்கு... எங்களோட ‘ஹைபீரியன்ஸ் ஐஎன்சி' (Hyperions INC) டீம். ஒரு கல்லூரியைச் சேர்ந்த டீமில், 20 பேர்வரை இருக்கலாம். எங்க டீமில் 11 மெக்கானிக்கல் மாணவர்களும், 9 எலெக்ட்ரிக்கல் மாணவர்களும் களமிறங்கினோம்” என டீம் மேட்ஸ்களை அறிமுகம் செய்தார் சோமேஷ்.

‘‘இரண்டு ரவுண்டுகளா நடக்கும் போட்டியில், முதல் தகுதிச் சுற்றில் நாங்க வடிவமைத்த காரோட டிசைனை ஆராய்ந்தாங்க. இறுதிச் சுற்றில், அவங்க குறிப்பிட்டிருந்த வரையறைகளுக்கு இணங்க நாங்க காரை வடிவமைச்சிருக்கோமானு சரிபார்த்தாங்க. `ஐஐடி', `ஐஐஎஸ்சி,' `என்ஐடி'னு படா தொழில்நுட்பக் கல்லூரிகளை எல்லாம் வீழ்த்தி தகுதிச் சுற்றில் தேசிய அளவில் முதலிடம் பிடிச்சோம்” என சுராஜ் விரல்களில் ‘விக்டரி’ காட்ட,

ஹைபிரிட் சேலஞ்ச்... அசத்திய ஸ்டூடன்ட்ஸ்!

‘‘6.5 ஹெச்பி (HP) திறனும் 3,300 rpm திறனும் கொண்டதுநாங்க வடிவமைச்ச காரோட இன்ஜின். மேலும், உருவாக்கத் தில் நாங்க செய்த புதுமைகள்தான் எங்களுக்கு பரிசை உறுதிசெய்தது. உதாரணமா, ஸீட்பெல்ட் லாக் செய்தாதான் வண்டி `ஆன்' ஆகும். டீம் மெம்பர்ஸ் பிரவின், ராமகிருஷ்ணன், ரங்ஜூ, பிரமோத்னு பலரின் பங்கு இதில் முக்கியமானது. எங்க வெற்றிக்கான காரணமே, எங்க டீமோட ஒற்றுமைதான். வேலையை எங்களுக்குள்ள தெளிவா, திருப்தியா பகிர்ந்துகிட்டோம். எங்க சந்தேகங்களைத் தீர்க்க, இரவு பகலா எங்களுக்காக உதவிய மெக்கானிக்கல் துறையைச் சேர்ந்த, புருஷோத்தமன் சாருக்கு தேங்க்ஸ் நிறைய” என வெற்றிக்கான ரகசியத்தைச் சொன்னார் செந்தமிழ்ச் செல்வன்.

‘‘இந்த ஹைப்ரிட் வெஹிக்கிள் செய்ய எங்களுக்கு 2 லட்சம் ரூபாய் செலவானது. இது தனி ஒரு கார் செய்ய. இதுவே மொத்த உற்பத்தியாகும்போது தயாரிப்பு செலவு கணிசமா குறையும். பெட்ரோலின் தட்டுப்பாட்டாலும் அது ஏற்படுத்தும் மாசுத்தன்மையாலும் இனி வரும் தலைமுறையில் ஹைபிரிட் வெஹிகளுக்குதான் மார்க்கெட் இருக்கும். அதனால இதையே ஓரு தயாரிப்புத் தொழிலா செய்யும் எண்ணமும் இருக்கு’’ என வருங்காலத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் சரவணக்குமார்.

‘‘போட்டி நடந்த போபாலில் பல அணிகளுடன் பழகும் வாய்ப்பு அமைந்தது. அவங்ககிட்ட இருந்து நிறையக் கத்துக்கிட்டோம். எப்பவும் ஒரு விஷயத்தைக் கத்துக்க நம்மை ஓபனா வெச்சுட்டா, வெற்றிகள் வந்துட்டே இருக்கும்!’’

- மொத்த டீம் தந்த சக்சஸ் ஸ்டேட்மென்ட்!

குடோஸ் கைஸ்!

ச.ஸ்ரீராம் ரங்கநாத்