Published:Updated:

ஆர்ட் ப்ளஸ் நேச்சர் = `ஆர்ச்சர்’!

ஆர்ட் ப்ளஸ் நேச்சர் = `ஆர்ச்சர்’!
பிரீமியம் ஸ்டோரி
ஆர்ட் ப்ளஸ் நேச்சர் = `ஆர்ச்சர்’!

ஆர்ட் ப்ளஸ் நேச்சர் = `ஆர்ச்சர்’!

ஆர்ட் ப்ளஸ் நேச்சர் = `ஆர்ச்சர்’!

ஆர்ட் ப்ளஸ் நேச்சர் = `ஆர்ச்சர்’!

Published:Updated:
ஆர்ட் ப்ளஸ் நேச்சர் = `ஆர்ச்சர்’!
பிரீமியம் ஸ்டோரி
ஆர்ட் ப்ளஸ் நேச்சர் = `ஆர்ச்சர்’!

கார்க் அக்சஸரீஸ்  பிசினஸில் கலக்கும் கண்மணிகள்...

கேஷா வசந்த், ஷிவானி படேல்... இந்த இரண்டு பெண்களின் அசத்தல் பிசினஸ்... ‘ஆர்ச்சர்’ (Arture). ‘கார்க்’ (cork) எனப்படும் மரப்பட்டை மூலப்பொருட்களில் இருந்து பர்ஸ், ஹேண்ட்பேக் உருவாக்கும் டிசைனர்ஸ்.

ஆர்ட் ப்ளஸ் நேச்சர் = `ஆர்ச்சர்’!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘நான் சென்னை, எம்.ஓ.பி. வைஷ்ணவா காலேஜ்ல பி.காம் மார்க்கெட்டிங் படிச்சிட்டு, இப்போ டென்வர் பல்கலைக்கழகத்துல எம்.எஸ்., மார்க்கெட்டிங் படிச்சிட்டு இருக்கேன்’’ என்று கேஷா கைகுலுக்க, ‘‘நான் சென்னை, `நிப்ஃட்’-ல ஆக்சஸரி டிசைன் முடிச்சிருக்கேன்’’ என்கிறார் ஷிவானி.

ஆர்ட் ப்ளஸ் நேச்சர் = `ஆர்ச்சர்’!

``அது என்ன ஆர்ச்சர்..?’’ என்றால், ‘‘ஆர்ட் ப்ளஸ் நேச்சர் (Art+Nature)’’ என்று கண்சிமிட்டிச் சொல்கிறார்கள் இந்த பிசினஸ் பார்ட்னர்ஸ். ‘‘ஃபேஷனை, ஓர் உயிரை விலையாகக் கொடுத்து உருவாக்க வேண்டாம் (Fashion does not have to come at the price of life) என்பதுதான் எங்களோட நோக்கம். அதனாலதான், எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காமல் எடுக்கக்கூடிய மூலப்பொருளான, `கார்க்’கில் பர்ஸ், வேலட் மற்றும் ஹேண்ட்பேக்குகளை உருவாக்குறோம். `கார்க்’கை தமிழ்ல தக்கை அல்லது நெட்டினு சொல்லலாம். பொதுவா, லெதர், சின்தடிக், சணல்னு இவையெல்லாம்தான் இதுவரை பைகளுக்கான மெட்டீரியலா இருந்தது. ஆனால், `கார்க்’கில் ஹேண்ட்பேக் செய்யும் எங்களோட புது முயற்சி, இந்தியாவிலேயே முதல் முயற்சி’’ எனும் தோழிகள், கார்க் பைகளின் சிறப்புகளைச் சொன்னார்கள்.

ஆர்ட் ப்ளஸ் நேச்சர் = `ஆர்ச்சர்’!

‘‘யூரோப்பில் இருந்துதான் மூலப்பொருட்கள் வருது. அங்கதான் கார்க் தொழில் நிறுவனங்கள் அதிகம். கார்க், ரோல்களா வரும். எந்த மரத்தையும் வெட்டத் தேவையில்லை, மரங்களின் பட்டைகள்தான் எடுக்கப்படும். அது ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் வளர்ந்துடும். குறைந்த எடை, வாட்டர் புரூஃப், ஆன்ட்டி ஃபங்கல், சுற்றுச் சூழலுக்கு தீங்கில்லாததுனு கார்க் பேக்குகளின் தனித்தன்மைகள் நிறைய! லெதர் பைகள் சாதாரணமாகவே எடைகொண்டதா இருக்கும். அதில் மேலும் பொருட்களை வைக்கும்போது, இன்னும் கனமாயிடும். ஆனா, கார்க் பேக்குகள், பர்ஸ்கள் எடையில் ரொம்ப லேசானது என்பதோட, லெதரின் விலையிலேயே கிடைக்கும்.

ஆர்ட் ப்ளஸ் நேச்சர் = `ஆர்ச்சர்’!

உலகத்துல கார்க் மூலம் உருவாக்கப்படும் எல்லா பொருட்களிலும் கொஞ்சமாச்சும் லெதர் கலந்திருக்கும். ஆனா, நாங்க, 100% ப்யூர் கார்க் ஆக செய்றோம். இதைத் தொடும்போது கிடைக்கும் சாஃப்ட்னஸ், ரொம்ப ஸ்பெஷல். இதுவரை நாங்க உருவாக்கியுள்ள 13 டிசைன்களில், ஒவ்வொரு ஸ்டைலையும் 3 கலர் பேஸ்களில் செய்திருக்கோம். டிசைன் செய்த பிறகு, வெளியாட்களைக் கொண்டு, அதை தயாரிச்சிடுவோம். ஒரு பர்ஸ் செய்து முடிக்க 4-5 மணி நேரம் வரை ஆகும். ஹேண்ட்பேக் செய்ய, ஒரு நாள் தேவைப்படும்’’ என்று கேஷா சொல்லும்போது,  ‘ஆர்ச்சர்’ தொடங்கி அரை ஆண்டு ஆவதற்குள் அவர்கள் உலகம் முழுக்கப் பேசப்படுவதற்கான காரணம் புரிகிறது.

ஆர்ட் ப்ளஸ் நேச்சர் = `ஆர்ச்சர்’!

‘‘2015 நவம்பர் மாதத்தில்தான் ‘ஆர்ச்சர்’ பிறந்தது. முதலீட்டுக்கு பாதித்தொகை, எங்க பெற்றோர் தந்தாங்க. மீதித்தொகை, க்ரவுட்-ஃபண்டிங் மூலம் திரட்டினோம். அதாவது, இது நன்கொடை இல்ல. ‘ஆர்ச்சர்’ வெப்சைட்டில் தங்களுக்குப் பிடிச்ச டிசைனைத் தேர்ந்தெடுத்து, ஆர்டரின் பேரில் முதலீடு செய்யும் வகை. எங்களுடைய சாம்பிள்களையும், மேக்கிங் வீடியோவையும் வெப்சைட்டில் அப்லோடு செய்வோம். அதைப் பார்த்தே ஆர்டர் புக்கிங் ஆரம்பிச்சிடும். சில மால்களிலும் இதை அறிமுகப்படுத்தி வர்றோம்’’ என்கிறார் ஷிவானி, கண்களும் பேச..!

அட்டகாசம்... ‘ஆர்ச்சர்’ கேர்ள்ஸ்!

மு.சித்தார்த், படங்கள்:மா.பி.சித்தார்த்