Published:Updated:

தல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா?!

தல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா?!
பிரீமியம் ஸ்டோரி
தல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா?!

தல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா?!

தல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா?!

தல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா?!

Published:Updated:
தல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா?!
பிரீமியம் ஸ்டோரி
தல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா?!
தல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா?!

‘புலி’க்கும் ‘வேதாளத்’துக்கும் மரண கலாய் மீம்ஸ் உலவவிட்டு கடுப்பேற்றுவதில் இருந்து, ட்விட்டர் ட்ரெண்டிங்கில் நீயா, நானா என முட்டிக்கொள்வதுவரை, அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையே நடக்கும் பனிப்போர் உலகம் அறிந்ததே! அதேபோல, தல, தளபதி ரசிகைகளும் சுடிதார் ஸ்லீவ்களை மடித்துவிட்டுக்கொண்டு களமாடுவார்களா?! (உலக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை பாருங்க?!) அவர்களிடம் கேட்டோம்...

தல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுப்ரஜா

தல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா?!

‘‘அமர்க்களம் படம் பார்த்ததில் இருந்து நான் தல ரசிகை ஆகிட்டேன். ‘பில்லா’ படம் வந்தப்போ பக்தையாவே மாறிட்டேன். ‘மங்காத்தா’வுக்கு அப்புறம் நான் ‘தல டிஃபன்ஸ் ஃபோர்ஸ்'ஸின் தலைவியாவே ஃபார்ம் ஆகிட்டேன்னு நினைக்கிறேன். வாட்ஸ்அப், ஃபேஸ்புக்னு எங்கேயும், எப்போவும் சுப்ரஜாவா இருக்கிறதைவிட, தல ரசிகையாதான் இருப்பேன். யாராச்சும் `தல'யைக் கலாய்ச்சா, செம்ம டென்ஷன் ஆகிடும். ஸ்டேட்டஸ் போடுறவங்களுக்கு ரிப்ளை ஸ்டேட்டஸ், மீம்ஸ் போடுறவங்களுக்கு பதில் மீம்ஸ்னு இறக்கி ஆன் தி ஸ்பாட்ல அட்டாக் பண்ணுவேன். யார்கிட்ட..? தல ரசிகை பாஸ்!’’

அபர்ணா

தல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா?!

‘‘எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து நான் தளபதி ரசிகை. அவரோட டான்ஸுக்கு நான் டை ஹார்டு ஃபேன். கோயம்புத்தூர் ஸ்லாங்ல ‘ணா’போட்டு அவர் பேசினா, மனசுல விசிலடிக்கும். பசங்க அளவுக்கு பொண்ணுங்க தல - தளபதி சண்டை போடுறதில்லைன்னாலும், போடாமலும் இல்ல. எங்கிட்ட யாராச்சும் தளபதியைக் கலாய்ச்சுப்  பேசினா, பதிலுக்கு அவங்களையும், அவங்களோட ஃபேவரைட் ஹீரோவையும் கழுவி ஊத்துவேன். `வாட்ஸஅப்'-ல யாராச்சும் வம்புக்கு இழுத்தா, அவங்க போன் ஹேங்க் ஆகிற அளவுக்கு ஸ்மைலியா அனுப்பி கடுப்பேத்துவேன்!’’

மோனிஷா

தல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா?!

‘‘சின்ன வயசுல இருந்தே விஜய்யைப் பிடிக்கும். ஆனா, தீவிர ரசிகை எல்லாம் கிடையாது. சில மாசங்களுக்கு முன்னாடி ‘தெறி’ ஷூட்டிங் ஸ்பாட்ல அவரைப் பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்ஸ்கிட்ட அவர் அவ்ளோ பணிவா நடந்துக்கிட்டதைப் பார்த்தப்போ, ‘தளபதிடா’னு மனசுல ஸ்பார்க் அடிக்க, இப்போ நானும் அதிதீவிர விஜய் ரசிகை. ஆனா தல - தளபதி ஃபேன்ஸ் சண்டைகளுக்குள்ள எல்லாம் நான் போறதில்லை. ஃபேஸ்புக்ல தல - தளபதி ஃபேன்ஸ் சண்டை லிங்க்களை எல்லாம் கண்டுக்காம ஸ்க்ரோல் செய்து போயிட்டே இருப்பேன். அதேபோல, `வாட்ஸ்அப்'-ல தல - தளபதி குரூப்களுக்கு இடையில் சண்டை நடக்கும்போதும், நான் அந்த குரூப்பை மியூட் செய்துடுவேன்!’’

ப்ரீத்தி மாளவிகா

தல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா?!

‘‘எனக்குத் தல, தளபதி ரெண்டு பேரோட படங்களும் பிடிக்கும்;  ரிலீஸ் அன்னிக்கே தியேட்டர்ல ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்துபோய் அமர்க்களமா பார்த்துடுவேன். ஆனா, தலயா, தளபதியானு கேட்டா... தலதான்! ‘காதல் மன்ன’னா வலம்வந்த ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ்லயும் சரி, சால்ட் அண்ட் பெப்பர் மாஸ் லுக்கில் அள்ளும் செகண்ட் இன்னிங்ஸ்லயும் சரி... தலயை அடிச்சுக்க ஆள் இல்ல! ‘மங்காத்தா’ல வைபவை பின்னாடி உட்கார வெச்சிட்டு பைக் ஸ்டன்ட் காட்டுவாரு பாருங்க... ப்பா! முதுகில் அத்தனை ஆபரேஷனுக்கு அப்புறமும் நிமிர்ந்து நிக்கிற சுயம்பு... தல! அவர் திரையுலகில் பலருக்கும் செய்ற உதவிகள் பத்தின செய்திகள் வெளியவராமப் பார்த்துக்கிற ஜென்டில்மேன். இப்படி விஜய், அஜித் ரசிகைகள் சண்டையில அடிச்சுப் பேச எங்களுக்கு ஆயிரம் பாயின்ட்ஸ் இருக்கும்!’’  

ரோஹிணி

தல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா?!

‘‘கத்தி படத்துல அனிருத் பிஜிஎம்-க்கு நடந்து வருவாரு பாருங்க தளபதி... காணக் கண் கோடி வேணும். ‘கில்லி’ படத்துல வேற எந்த ஹீரோ நடிச்சிருந்தாலும் அந்த மாஸ் இருந்திருக்காது. விஜய் படங்கள் ஃப்ளாப் ஆகும்போது வருத்தத்தைவிட, எதிர் அணி கூடாரத்தை நினைச்சு எக்கச்சக்கமா டென்ஷன் ஆகும். ஆனா, அடுத்து ஒரு ஹிட் கொடுத்து அவங்களை எல்லாம் தூக்கி அடிச்சிடுவோம்ல! தல, தளபதி ரசிகர்கள் மட்டுமில்ல... ரசிகைகளும் எதிரும் புதிருமாதான் எப்பவும் நிப்போம். ஆனா, கொஞ்சம் மைல்டா முடிச்சிக்குவோம்!’’

ரதி மீனா

தல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா?!

‘‘நான் தியேட்டர்ல பார்த்த முதல் அஜித் படம், ‘மங்காத்தா’. ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா, தல இன்ட்ரோ ஸீன்ல தியேட்டரே அதிருது. அந்த நொடியில் இருந்து நான் தல ஃபேன் ஆகிட்டேன். அப்புறம் தல பத்தின நியூஸ்களைப் படிச்சப்போ, அவர் ஒரு நல்ல ஆக்டர் மட்டுமில்ல, நல்ல மனிதரும்னு புரிஞ்சது. ஃபேஸ்புக்ல தல படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தா... லைக், கமென்ட், ஷேர்னு தல ரசிகையா என் கடமையை சின்சியரா செஞ்சிடுவேன். அதே நேரம் மீம்ஸ் வந்தா, இடத்தைக் காலி பண்ணிடுவேன். எங்க `தல'யைப்போல எனக்கும் வெட்டிப்பேச்சு பிடிக்காது. சமயங்கள்ல, தலயும், தளபதியும் ஃப்ரெண்ட்ஸா இருக்கிற மாதிரி ஏன் நாங்களும் கைகுலுக்கிக்கக் கூடாதுனும் தோணும். என்ன, ஃப்ரெண்ட்ஸ் ஆகிடலாமா?!’’

தா.நந்திதா, ஜெ.விக்னேஷ், படங்கள்:பா.அபிரக்‌ஷன்