‘‘நான் ஒரு ஐ.டி கம்பெனியில வேலை பார்க்கிறேன். கிராஃப்ட் மேல இருக்கிற ஆர்வத்தால கிடைக்கும் நேரங்களில் கைவினைப் பொருட்கள் செய்றதோட, கிராஃப்ட் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறேன். இப்போ உங்களுக்குக் கற்றுத்தரப்போவது, ஹேண்ட் பேக் மேட் ஆஃப் பழைய ஜீன்ஸ். அப்போ, இனி உங்க வார்ட்ரோப்ல இருக்கும் சைஸ் சரியில்லாமல் போன... ஜிப், பட்டன் அறுந்து போன ஜீன்ஸுக்கு எல்லாம் புது வாழ்க்கை வந்தாச்சுதானே?!’’ என்று சிரிக்கும் சென்னையைச் சேர்ந்த சங்கீதா பிரகாஷ், பயிற்சி அளிப்பதில் மும்முரமாகிறார்...

தேவையான பொருட்கள்:

‘‘பழைய ஜீன்ஸ் பேன்ட் - 1, குண்டூசி - 10, சிறிய ஊசி - 1, நூல் (பேன்ட் கலரில்), இன்ச் டேப், நெக் டை (விரும்பும் வண்ணத்தில்), டெகரேட்டிவ் லேஸ் - தேவையான அளவு, கத்தரிக்கோல், ஃபெவிக்கால், சாக்பீஸ்.

செய்முறை:

படம் 1: பயன்படுத்தாத ஜீன்ஸ் பேன்ட்டின் இடுப்புப் பகுதியில் இருந்து கால் பகுதி ஆரம்பிக்கும் இடம் வரை இன்ச் டேப்பால் படத்தில் காட்டியுள்ளபடி அளக்கவும்.

படம் 2: அந்த உயரத்தை வலது, இடதுபுறங்களில் சாக்பீஸால் மார்க் செய்யவும்.

படம் 3: சாக்பீஸ் மார்க்கில் கத்தரிக்கோலால் வெட்டவும். மீதமுள்ள கால் பகுதியை எடுத்துவைக்கவும்.

படம் 4: அளவு சற்று மாறுபட்டு உயரம் சிறிதும் பெரிதுமாக இருந்தால், சமமாக வெட்டவும்.

படம் 5: ஜீன்ஸை உட்புறமாகத் திருப்பவும்.

படம் 6: வெட்டிவைத்துள்ள ஜீன்ஸின் அடிப்பகுதியில் அளவு மாறாமல் இருக்க, கீழிருந்து 1 செ.மீ இடம் விட்டு குண்டூசியால் படத்தில் காட்டியுள்ளபடி குத்தி வைக்கவும்.

படம் 7: ஜீன்ஸின் அடிப்பகுதியை ஊசியால் தைக்கவும்.

படம் 8: ஜீன்ஸை மீண்டும் வெளிப்புறமாகத் திருப்பினால், பேக்கின் `பேஸ்' ரெடி.

படம் 9: வெட்டிவைத்துள்ள கால் பகுதியில், படத்தில் காட்டியுள்ளபடி ஒரு துண்டினைக் கத்தரிக்கவும்.

படம் 10: அதை ஜடைபோல பின்னி அடிப்பகுதியில் முடிச்சுப்போடவும்.

படம் 11: அதேபோன்று மற்றொரு ஜடையும் பின்னிக்கொண்டால், பேக்கின் கைப்பிடி தயார்.

படம் 12: பேக்கின் பேஸில் இந்தக் கைப்பிடிகளைக் கோப்பதற்கு ஏதுவாக முன்புறம் இரண்டு துளைகள், பின்புறம் இரண்டு துளைகள் செய்துகொள்ளவும்.

படம் 13: துளைகளின் வழியாக கைப்பிடிகளைக் கோத்து எடுக்கவும்.

படம் 14: கைப்பிடியில் முடிச்சிட்டு மீதமிருக்கும் துணியைக் கட் செய்துவிடவும்.

படம் 15: பேன்ட்டில் பெல்ட் கோக்கும் இடத்தில் நெக் டையினைக் கோக்க, அது டிரெண்டி லுக் தரும்.

படம் 16: விருப்பம்போல டெக்கரேட்டிவ் லேஸால் பேக்கை டிசைன் செய்யவும்.

படம் 17: ஃபேஷனபிள் ஹேண்ட் பேக் ரெடி. இதைக் கடையில் கொடுத்து `ஜிப்' வைத்து தைத்துவாங்கவும்.

``இனி எந்த ஓல்டு ஜீன்ஸும் வேஸ்ட் இல்லை, ஆர்ட்!’’ என்று கலகலப்பாக சொல்லி முடித்தார் சங்கீதா.

சு.சூர்யா கோமதி மாடல்: மஞ்சு படங்கள்:சொ.பாலசுப்ரமணியன், ஆர்.வருண் பிரசாத்