Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

Published:Updated:
கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!

மல்டி  பெர்சனாலிட்டி  மீனாட்சி!

டிப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு, விளம்பர ஏஜென்சி, காஸ்ட்யூம் டிசைனிங், அக்சஸரீஸ் ஷோரூம் என்று பரபரப்பாக இருக்கிறார், மீனாட்சி.

கேபிள் கலாட்டா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘சின்ன வயசுல இருந்தே பிசினஸில் ஆசை. அதனால்தான் பி.பி.ஏ படிச்சுட்டு, விளம்பர ஏஜென்சி தொடங்கினேன். அதன் மூலமா இப்போ சன் டி.வி-க்கு விளம்பரங்கள் வாங்கிக்கொடுத்துட்டு இருக்கேன். இன்னொரு பக்கம், காஸ்ட்யூம் டிசைனிங்கும் செய்துகொடுத்துட்டு இருக்கேன். இந்த வேலைகளுக்கு நடுவுலதான் சின்னத்திரை வாய்ப்பு கிடைச்சது.

விஜய் டி.வி-யில என்னோட கம்பெனி சார்ந்த பிசினஸ் பேஸ்டு நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கச்சொல்லி என் ஃப்ரெண்ட் ஒருத்தவங்க வற்புறுத்த, `சரி, பார்க்கலாம்’னு ஆங்கரா துணிஞ்சு இறங்கினேன். அடுத்து, ஜெயா டி.வி, மெகா டி.வி, கேப்டன் டி.வி-னு நிறைய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன். அடுத்ததா, ஜெயா, சன்ல சீரியல் வாய்ப்புகளும் கிடைச்சது. குறிப்பா, சன் டி.வி யில ‘அழகி’, ‘பொம்மலாட்டம்’, ‘பைரவி’, ‘பொன்னூஞ்சல்’ போன்ற சீரியல்கள் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. இப்போ, சன் டி.வி ‘தேவதை’, ‘ரோமாபுரி பாண்டியன்’ போன்ற சீரியல்களில் நடிச்சுட்டு இருக்கேன். ப்ளஸ், சென்னையில் இயங்கும் இலங்கைத் தமிழர்களுக்கான `ஐபிசி சேனல்’ல நிகழ்ச்சித் தொகுப்பாளரா இருக்கேன். அப்புறம், டிரெஸ் டிசைனிங்... கூடவே, பெண்களுக்கான அக்சஸரீஸ் ஷோ ரூம் ஒண்ணை நடத்திட்டு இருக்கேன். வாழ்க்கை வேகமா நகர்ந்துட்டு இருக்கு!’’

லிஸ்ட் முடிஞ்சிருச்சா?!

‘‘திட்டியதில் வந்த உத்வேகம்!’’

புதுயுகம் சேனல் ‘சரிகம கம கம’ சீரியல் ரக்‌ஷிதா, இப்போ வெள்ளித்திரையிலும் மின்ன ஆரம்பித்திருக்கிறார்.

கேபிள் கலாட்டா!

‘‘இண்டஸ்ட்ரியில எல்லாரும் என்னை ‘மேகி’ன்னுதான் கூப்பிடுவாங்க. அப்போ நான் ஒரு பியூட்டிஷியன். அந்த நேரத்துல ஒரு சேனலின் ரியாலிட்டி ஷோவில் ரெண்டாவது பரிசு வாங்கின என் ஃப்ரெண்ட் ஒருத்தவங்க, திடீர்னு ஒரு செலிப்ரிட்டி மாதிரி தன்னோட நடத்தையை மாத்திட்டாங்க. அப்போதான், நானும் மீடியாவில் கலக்கணும்னு ஆசை வந்தது. பாலிமர் சேனல்ல ஒரு வாரம் ஒளிபரப்பான ஒரு சீரியல்ல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அந்த டைரக்டர், ‘இனிமே உங்களை நான் ஆக்டிங் ஏரியாவில் பார்க்கக்கூடாது’னு நான் சரியா நடிக்காததை சிம்பாலிக்கா சொல்லிக்காட்டினார்.

உடனே, ஒரு ஆக்டிங் கிளாஸ்ல சேர்ந்து பயிற்சி எடுத்தேன். பிறகு நிறைய நாடகங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். ‘நாளைய இயக்குநர்’ படங்கள் உட்பட பல குறும்படங்களில் நடிச்சேன். அப்படி நான் நடிச்ச ஒரு படத்தைப் பார்த்துட்டு, எனக்கு நடிப்பு வரலைன்னு சொன்ன அந்த டைரக்டர், போன் பண்ணி வாழ்த்தினார். ‘நீங்க திட்டினதுனால வந்த உத்வேகம்தான் சார்’னு அவருக்கு `தேங்க்ஸ்’ சொன்னேன்.

தமிழ் மட்டுமில்லாம, தெலுங்கு, இந்தியில நிறைய டெலிஃபிலிம்ஸ் பண்ணிட்டு இருந்தேன். புதுயுகம் சேனல் ‘சரிகம கம கம’ சீரியல் எனக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. சமீபத்துல ரிலீசான ‘பிச்சைக்காரன்’ படத்துல ‘திலகா’ என்ற கேரக்டரில் நடிச்சது, வெள்ளித்திரைக்கு ஒரு நல்ல ஸ்டார்ட் அப் ஆக இருக்கும்னு நினைக்கிறேன். தொடர்ந்து நிறைய படங்களில் நடிச்சுட்டு இருக்கேன்!’’

இப்ப யாராவது திட்றாங்களா... மேகி?!

டீச்சர் டு ஆங்கர்!

‘‘ஊட்டியில், படுகர் இனத்தில் பிறந்த பையன் நான்’’ என்று ஃப்ளாஷ்பேக்குடன் ஆரம்பித்தார், ராஜ் மியூசிக் சேனலின் ‘அன்புடன்’, ‘ஐ’ம் விஜே’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘ஆல் டைம் மியூசிக்’ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும், மற்றும் ராஜ் டி.வி-யில் சினிமா நட்சத்திர நேர்காணல்களில் கலக்கிக்கொண்டிருக்கும் வெங்கடேஸ்வரன்.

கேபிள் கலாட்டா!

‘‘டென்த் வரை ஊட்டி, அப்புறம் எம்.ஏ., பி.எட் முடிச்சது கோயம்புத்தூர்ல. நாலு வருஷம் ஒரு மெட்ரிக் ஸ்கூல்ல டீச்சரா வேலைபார்த்தேன். மனசுக்குள் ஆங்கர் ஆசை இருந்தது. ஆனாலும், முதலில் பொருளாதாரத்தில் என்னை நிலைநிறுத்திக்க ஆசிரியர் வேலையைக் கெட்டியா பிடிச்சுக்கிட்டேன். ஒரு கட்டத்தில், லோக்கல் சேனல்ல வேலைபார்த்த நண்பர் மூலமா அங்க பார்ட் டைம் ஆங்கரா சேர்ந்தேன். சில விளம்பரப் படங்களிலும் நடிச்சேன். ‘சென்னைக்கு போனா நல்ல ஃப்யூச்சர் இருக்கு’ என்ற அறிவுரை எனக்கும் தரப்பட, ஆக்டிங் மற்றும் டான்ஸ் கோர்ஸ்லாம் முடிச்சுட்டு, சென்னைப்பட்டினத்துக்கு வந்து இறங்கினேன்.

எங்க படுகர் இன மொழியான படுகா, வெறும் பேச்சு மொழிதான். தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம்னு நாலு மொழிகளை எழுதவும் படிக்கவும் கத்துக்கிட்டேன். ராஜ் மியூசிக் ‘ஐ’ம் விஜே’ ஆடிஷன்ல தேர்வாகி, ராஜ் டி.வி, ராஜ் மியூசிக்னு இப்போ நிகழ்ச்சிகள் செய்துட்டு இருக்கேன். நாலு ஷார்ட் ஃபிலிம்களிலும், ‘நீ நான் அவள்’ என்ற டெலிஃபிலிமிலும் ஹீரோவா நடிச்சிருக்கேன். பாக்யராஜ் சாரோட அசிஸ்டன்டான காவியன் சாரோட அறிமுகப் படத்துல செகண்ட் ஹீரோவா கமிட் ஆகியிருக்கேன். மீடியா வேலை ஒருபக்கம் இருந்தாலும், கவர்மென்ட் ஸ்கூல் பசங்களுக்கு பார்ட் டைமாக இலவச டியூஷன் எடுக்கணும் என்பது, என் ஆசை!’’

ஊட்டிக்காரர் மனசு பியூட்டி!

ரிமோட் ரீட்டா, படங்கள்: ப.சரவணகுமார், ரா.வருண் பிரசாத்

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:ரூ 150

வியப்பூட்டும் `ரியல் ஹீரோ'!

``டிஸ்கவரி சேனலில் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் `ரியல் ஹீரோ' நிகழ்ச்சி... பிரமாதமாக இருக்கிறது. காட்டில் தன்னந்தனியாக அனைத்து விளைவுகளையும் சமாளிக்கும் அந்த ஹீரோக்களின் திறனையும், எதைக்கண்டும் அச்சம் கொள்ளாத மன தைரியத்தையும் கண்டு வியந்தேன். அத்துடன் பொருத்தமான தமிழ் குரல் திறன் அமைந்துள்ளது நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கிறது. ஒரு த்ரில்லான இனிய அனுபவமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் நல்ல நிகழ்ச்சி'' என்று வியந்து பேசுகிறார் சென்னை, பெரம்பூரில் இருந்து பி.கே.பிரேமிகா.

மனம் கவரும் மேடை!

``வேந்தர் டி.வி-யில் ஞாயிறு இரவு ஒளிபரப்பாகும் `இது உங்க மேடை' நன்றாக உள்ளது. அதில் நடிகர் பாக்யராஜ் மிகவும் நியாயமான தீர்ப்புகளை சொல்கிறார். சமீபத்தில் `மனித நேய உறவுதான் பெஸ்ட்' என்று தீர்ப்பு சொன்னது பாராட்டுக்குரியது. சென்னை மழையின்போது கண்ணால் பார்த்த சில நிகழ்வுகளை உதாரணத்தோடு கூறியது அருமை! மேலும், நிகழ்ச்சியில் பேசிய ஒவ்வொருவருமே தன் வாழ்க்கையில் நடந்த உண்மைகளை உதாரணமாக காட்டி பேசியது யதார்த்தமாக இருந்தது'' என்று சிலாகிக்கிறார், நெல்லையில் இருந்து ஆர்.கற்பகபூமி

இனிமை... இளமை!

``சன் டி.வி. `சூரிய வணக்கம்' நிகழ்ச்சியில் மகளிர் தின நிகழ்ச்சியாக வாணி ஜெயராமின் பேட்டி ஒளிபரப்பானது. தன்னடக்கத்துடன் அவர் பேசியதே பாடுவது போலிருந்தது. அத்துடன் அவர் பாடிய அனைத்து பாடல்களையும் உருக உருக கேட்டு ரசித்தோம். அவரை பேட்டி கண்ட பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜாவும், பாரதி பாஸ்கரும் மாறி மாறி பாடல்களைக் கேட்க வாணி ஜெயராமும் அத்தனை பாடல்களையும் பாடியது அன்று போல் இன்றும் அத்தனை இனிமையாக, இளமையாக இருந்தது'' என்று பாராட்டுகிறார் சென்னை, கே.கே.நகரில் இருந்து கமலா.