Published:Updated:

இனியொரு நிதி செய்வோம்!

இனியொரு நிதி செய்வோம்!
பிரீமியம் ஸ்டோரி
இனியொரு நிதி செய்வோம்!

இனியொரு நிதி செய்வோம்!

இனியொரு நிதி செய்வோம்!

இனியொரு நிதி செய்வோம்!

Published:Updated:
இனியொரு நிதி செய்வோம்!
பிரீமியம் ஸ்டோரி
இனியொரு நிதி செய்வோம்!

பெண்களுக்கான சேமிப்பு மற்றும் முதலீடு பற்றிய விழிப்பு உணர்வுக்காக, அவள் விகடன் மற்றும் நாணயம் விகடன் இணைந்து ‘இனியொரு நிதி செய்வோம்’ என்ற நிதி நிர்வாக நிகழ்ச்சியை சென்னை, அண்ணா சாலை பிஎஸ்என்எல் வளாகம் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி என இரு இடங்களில் மகளிர் தினத்தையொட்டி நடத்தின.

இனியொரு நிதி செய்வோம்!

பிஎஸ்என்எல் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சீஃப் ட்ரெயினர் குருராஜ், ‘‘சேமிப்பு, முதலீடு அல்ல. சேமிப்பில் பணம் பத்திரமாக இருக்கும். ஆனால் முதலீட்டில்தான் பணம் பெருகும். பெருகி வரும் பணவீக்கத்தைச் சந்திக்க சேமிப்பு போதாது, முதலீடுதான் வேண்டும். வருமான வரியைத் தவிர்க்க அவசர அவசரமாக முதலீடுகள் செய்வதைத் தவிர்த்து, நிதி ஆலோசகரின் உதவியோடு மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நல்ல பலன் தரும் நீண்டகால முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுங்கள். அதிக வட்டி என்று ஒரு நிறுவனம் ஆசைகாட்டினால் சந்தோஷப்படாதீர்கள்; சந்தேகப்படுங்கள்’’ என்று எச்சரித்தார்.

‘‘முதலீடு என்பது செல்வந்தர்களுக்கானது அல்ல, நடுத்தர மக்களுக்கு, முக்கியமாக பெண்களுக்கு அது எவ்வளவு முக்கியம், அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது தெளிவுற உணர்த்தப்பட்டது’’ என்றார் பிஎஸ்என்எல்-ன் சீஃப் ஜெனரல் மேனேஜர் கலாவதி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனியொரு நிதி செய்வோம்!

டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில், ஃபண்ட்ஸ் இண்டியா நிறுவனத்தின் ஹெட் ரிசர்ச் அனலிஸ்ட் வித்யா பாலா மற்றும் பிர்லா சன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்ஸின் மண்டல தலைவர் எஸ்.சுதிர், ‘‘ ‘இந்த வயசுல ஏன் சேமிக்கணும்? 30 வயசுக்கு மேல பார்த்துக்கலாம்’ என்ற எண்ணம் தவறு. வெகு சீக்கிரமே சேமிப்பு மற்றும் முதலீட்டை தொடங்கிவிட வேண்டும். தங்கம், நிலம் போன்ற முதலீடுகள் பெரிய அளவில் பலன் தராது. வங்கி, அஞ்சல்துறை, இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் இவற்றில், இப்போதைக்கு மியூச்சுவல் ஃபண்ட் சிறப்பான சாய்ஸ். நம்பிக்கைக்கு உரிய ஒருவர் மூலம் அந்த முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். ஸ்கீம்கள் பற்றி ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று மாணவிகளுக்கு விளக்கமாகப் புரியவைத்தனர்.

இனியொரு நிதி செய்வோம்!

மாணவி ரஜினி, ‘‘சம்பாதிக்கணும், நல்லா செலவு பண்ணணும்னு நினைச்சிருக்கேனே தவிர, சேமிப்பு பத்தி யோசிச்சதே இல்ல. இப்போ முதல் மாச சம்பளத்திலிருந்தே சேமிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்’’ என்று சொல்ல, மாணவி ஷாலினி, ‘‘சேமிக்கும் வழிகள், அதன் ப்ளஸ் மைனஸ்கள், சேமிச்ச பணத்தை பெருக்கும் தந்திரம்னு இன்னிக்கு நிறையக் கத்துக்கிட்டேன்’’ என்றார் உற்சாகத்துடன்.

பெண்கள் சுயமாக சம்பாதிக்கும் வாய்ப்புகள் பெருகிக்கொண்டே வரும் நிலையில், அவர்கள் நிதி நிர்வாகம் பற்றி அறிந்துகொள்ள வேண்டியதும் காலத்தின் அவசியம்!

கே.அபிநயா, ச.சந்திரமௌலி, படங்கள்:தி.ஹரிஹரன்