‘‘ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் எடுத்தும், இரண்டு இலக்க லட்சங்களில் பயமுறுத்தும் கல்விக் கட்டணங்களால் மருத்துவப் படிப்பில் இருந்து பின்வாங்கும் மாணவக் குடும்பங்கள் பல. ஆனால், தெற்கு ஆசியாவிலேயே மருத்துவக் கல்வியிலும், மருத்துவ ஆராய்ச்சியிலும் முதன்மைத் தரம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளான எய்ம்ஸ் (AIIMS - All India Institute of Medical Sciences) கல்லூரிகளில், மிக மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்பு படிக்கலாம்!’’

- பரவலாக அறியப்படாத, பெற்றோர் மனதில் பால்வார்க்கும் தகவலைச் சொன்னார், டாக்டர் முத்துக்கனி. விருதுநகர் மாவட்டத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, சாதாரண பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து, இன்று டெல்லி, எய்ம்ஸில் டி.எம்., நியூராலஜி படித்துக்கொண்டிருக்கிறார், முத்துக்கனி.

தமிழகத்தில் இருந்து அதிக மாணவர்கள் எய்ம்ஸில் கல்வி வாய்ப்பு பெற வேண்டும் என்ற அக்கறையில், முத்துக்கனி தந்த தகவல்கள் இங்கே...

எய்ம்ஸில் சேர தகுதி நிர்ணயம் என்ன?

ப்ளஸ் டூ-வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்ற பாடப்பிரிவுகளைப் படித்திருக்க வேண்டும். 17 வயது பூர்த்தியாகி இயிருக்க வேண்டும். ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற பொதுப்பிரிவு மற்றும் `ஒபிசி’ பிரிவைச் சேர்ந்த மாணவர்களும், 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

நுழைவுத் தேர்வு எப்படி அமையும்?

ஒவ்வொரு கல்வியாண்டும் மே மாதம் நடத்தப்படும் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு மே 29-ம் தேதி நடக்கவிருக்கிறது. காலை 9 மணி முதல் 12.30 மணிவரை, மதியம் 3 மணி முதல் 6.30 மணிவரை என இரண்டு ஷிஃப்ட்டுகளாக ஆன்லைன் தேர்வு நடைபெறும். இரண்டு ஷிஃப்ட்டுகளில் நடைபெறுவதால் கேள்விகள் ஒரே தளத்தில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய நார்மலைசேஷன் முறை பின்பற்றப்படும்.

நுழைவுத் தேர்வு வினாத்தாள் ஆங்கிலம், இந்தியில் இருக்கும். 200 அப்ஜெக்டிவ் டைப் வினாக்களில், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளில் தலா 60 வினாக்களும், ஜி.கே மற்றும் ஆப்டிட்யூடில் சேர்த்து 20 வினாக்களும் கேட்கப்படும். ஒரு வினாவுக்கு ஒரு மதிப்பெண். ஒவ்வொரு தவறான விடைக்கும் நெகட்டிவ் மதிப்பெண்கள் (.33) குறைக்கப்படும்.

நுழைவுத் தேர்வுக்கு தயாராக ஆலோசனைகள்..!

எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற எட்டாம் வகுப்பில் இருந்தே தயாராக வேண்டும் என்ற பூச்சாண்டி எல்லாம் எதுவும் இல்லை. பதினொன்றாம் வகுப்புத் தொடக்கத்தில் இருந்து பாடங்களை முழுமையாகப் படித்தால் போதுமானது. கடந்த ஆண்டுகளின் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு வினாத்தாள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சுயதேர்வு எழுதி பயிற்சி பெறலாம். கேரள மாநிலப் பள்ளிகளில், பாடத்திட்டத்துடன் சேர்த்தே எய்ம்ஸ் உள்ளிட்ட பல தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் வழங்குகிறார்கள். அம்மாநிலத்தில் இருந்து அதிக மாணவர்கள் எய்ம்ஸில் சேர இதுவே காரணம். தமிழகப் பள்ளிகளும், மாணவர்களை நுழைவுத் தேர்வுகளுக்கும் சேர்த்து தயார்படுத்தினால் நமக்கும் இது சாத்தியமாகும்.

கட் ஆஃப் விவரங்கள்...

எய்ம்ஸில் கட் ஆஃப் மதிப்பெண் முறை பின்பற்றப்படுகிறது. இதன் அடிப்படையில் குறைந்தபட்சமாக பொதுப்பிரிவினர் 50%, `ஒபிசி’ பிரிவினர் 45%, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 40% எடுக்க வேண்டும்.

கட்டணம் எந்தளவுக்குக் குறையும்..?

மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரி என்பதால், எய்ம்ஸில் கட்டணம் மிகக் குறைவு. கட் ஆஃப் தரவரிசையில் முதலில் வரும் மாணவர் களுக்கு ஆண்டுக் கட்டணமாக 1,628 ரூபாய் வசூலிக்கப் படுகிறது. விடுதி வாடகை உள்ளிட்ட கட்டணம், 4,228 ரூபாய் வசூலிக்கப்படும். கட்டணத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மாறுதல் ஏற்படுத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை என்ன?

எய்ம்ஸில் சேர, www.aiimsexams.org என்ற ஆன்லைன் முகவரி மூலமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினர் மற்றும் `ஓபிசி’ மாணவர்களுக்கு 1,000 ரூபாய், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மாணவர்களுக்கு 800 ரூபாய், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கட்டணத்தை ஆன்லைனிலோ, பாரத ஸ்டேட் பாங்க் வங்கிகளில் சலான் மூலமாகவோ செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும்போது, ஆங்கிலமா, இந்தியா என தேர்வு எழுதப்போகும் மொழியைக் குறிப்பிட வேண்டும்.

எய்ம்ஸின் தேர்வுமையங்கள் தமிழகத்தில் இருக்குமா?

நிச்சயமாக! தமிழகத் தில் சென்னை, கோயம் புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் எய்ம்ஸ் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். உங்கள் இருப்பிடத் துக்கு அருகில் உள்ள மையத்தை, விண்ணப்பத்திலேயே தேர்வுசெய்து கொள்ளலாம்’’ என்று தகவல்களை விரிவாகவும் தெளிவாகவும் தந்த முத்துக்கனி,

‘‘திறமை உள்ள மாணவர்கள், பொருளாதாரக் காரணங்களால் இனி மருத்துவக் கனவைக் கைவிட வேண்டிய தில்லை. அவர்களை மருத்துவர் ஆக்கும், ஏணியாக இருக்கும் எய்ம்ஸ்!’’ - நம்பிக்கை நிரம்பத் தந்து முடித்தார்!

சு.சூர்யா கோமதி படங்கள்:எம்.உசேன்

எய்ம்ஸின் இட ஒதுக்கீடு!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மொத்த இடங்கள் 72. இதில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 11 இடமும், பழங்குடியினருக்கு 5, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 19, பொதுப் பிரிவினருக்கு 37 இடம் என இட ஒதுக்கீடு அளிக்கப்படும். போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தலா 100 இடங்கள் உள்ளன.

எய்ம்ஸில் முதுநிலைப் படிப்பு!

எய்ம்ஸில் முதுநிலைப் பிரிவில் 55 துறைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற, இளநிலைப் பாடங்களைத் தெளிவுறக் கற்பதே மிகவும் முக்கியம். இட ஒதுக்கீடும், கட்டணமும் இளநிலையில் இருந்து சிறிது மாறுபடும்.

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு!

``வெளிநாட்டில் மருத்துவம் படிக்க உங்கள் குழந்தைகளை அனுப்புகிறீர்கள் என்றால் முதலில் அந்தக் கல்லூரி பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிதானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

சில வெளிநாட்டுக் கல்லூரிகள் அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கையைவிட அதிகமான மாணவர்களை சேர்க்கின்றன. இது உங்கள் வீட்டு பிள்ளைகள் படித்த படிப்பு செல்லுபடியாகாத நிலைக்கு வழிவகுக்கும்.

வெளிநாட்டில் மருத்துவம் படித்து இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற வேண்டுமாயின் மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா நடத்தும் அனுமதித் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க இடம் வாங்கி தருவதாக சொல்லும் தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்'' என்று அக்கறையுடன் கூறுகிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.