Published:Updated:

நீயும் பொம்மை... நானும் பொம்மை!

நீயும் பொம்மை... நானும் பொம்மை!
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் பொம்மை... நானும் பொம்மை!

நீயும் பொம்மை... நானும் பொம்மை!

ஹாலிவுட் பிரபலங்களில் ஆரம்பித்து கோலிவுட் பிரபலங்கள் வரை எல்லோரையும் ஒரே இடத்தில் கூட்டி வைத்து விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ ஹரிசரண். ’விளையாடாதீங்க பாஸ்... இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு’ என்று கேட்கிறீர் களா? அப்படியென்றால், அப்படியே யூ டர்ன் அடித்து அவர் வீட்டுக்குப் போனால், நாம் அசந்துப் போகப் போவது நிச்சயம். நாம் ஏற்கெனவே சொன்ன பிரபலங்கள் எல்லோரும் செராமிக் பொம்மைகளாக ஜொலிக்கிறார்கள். அத்தனை பொம்மைகளுக்கும் உயிர் இருப்பது போலவே உணர முடிகிறது.

ஸ்ரீ ஹரிசரண்... பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, `மை க்யூட் மினி' (MY CUTE MINI) என்கிற பெயரில் செராமிக் பொம்மைகள் தயாரிக்கும் கம்பெனியை உருவாக்கி, அதை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

நீயும் பொம்மை... நானும் பொம்மை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தட் சூப்பர் மேன், ஸ்ரீ ஹரிசரணிடம் பேசினால்...

“நான் ஆரம்பத்துல இன்டீரியர் டிசைன் ப்ராஜெக்ட்டுகளும், கல் சிற்பங்களும் செஞ்சுட்டு இருந்தேன். அதுக்கப்புறம் சாஃப்ட் செராமிக்கின் மேல ஆர்வம் வந்தது. எங்க புரொஃபசரோட குழந்தையைத்தான் முதல் முதலா மினியேச்சரா டிசைன் பண்ணேன். அந்தக் குழந்தையோட பிறந்த நாளுக்கு அதை பிரசன்ட் பண்ணப்ப புரொஃபசர் ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதுக்கப்புறம் கிடைச்ச ஊக்கத்துல என் டீமை பெருசாக்கி இதை பிசினஸா மாத்தினேன்.

இப்ப என்னையும் சேர்த்து 8 பேர் இருக்கோம். இந்தியாவின் பல்வேறு மெட்ரோக்களில் இருந்தும் ஆர்டர்கள் வருது. ஒரு பொம்மைக்கு 4 வாரங்கள் டைம் கேட்போம். பர்த் டே, வெட்டிங் டே, லவ் வருக்கு என பல்வேறு வகை விழாக்களுக்கு நாங்கள் பொம்மைகள் செய்து தருவோம். ஆவரேஜா ஒரு பொம்மை 7 இன்ச்சில் இருந்து 1 அடி வரையிலான உயரத்தில் இருக்கும். அளவைப் பொறுத்து அதன் வெயிட் 300 கிராம் வரை இருக்கும். ஆர்டரின் மூலம் வரும் பணம்தான் முதலீடு. ஒரு மாதத்துக்கு 150-200 ஆர்டர்கள் வரும்.

நீயும் பொம்மை... நானும் பொம்மை!
நீயும் பொம்மை... நானும் பொம்மை!

வெளிநாடுகளில் 3-டி செல்ஃபி எடுப்பார்கள். அதில் மொத்த உடம்பையும் ஸ்கேன் செய்வார்கள். ஆனால், வெளிநாட்டு முறைப்படி மெஷின் மூலம் செய்யாமல் கையால் செய்யும்போது நம்மால் பல விஷயங்களை நம் கற்பனைக்கு ஏற்ப அழகூட்ட முடியும். உழைப்புக்குத் தகுந்த மாதிரி
கீ-செயினுக்கு 2,000 ரூபாயும், முழு பொம்மைக்கு 4,350 ரூபாயும் சார்ஜ் பண்றோம்.

நம்ம முகத்தை கண்ணாடியில பாக்குறப்ப லைட்டா ஒரு வெட்கம் பூக்கும்ல... அதே வெட்கம்தான் கஸ்டமர்களை மினியேச்சர்களா செய்யும்போதும் அவங்க முகத்துல தெரியணும். அந்த வெட்கத்தை கஸ்டமர்ஸ் முகத்துல பார்க்கும் போதுதான் ’சக்சஸ்’ என்று காலரைத் தூக்கி விட்டுக்கொள்வோம்’’ என்கிறார் பொம்மையைப் போலவே தலையை ஆட்டிக்கொண்டு!

வாங்க... ஒரு பொம்மை உலகத்துக்குப் போயிட்டு வரலாம்!

 மு.சித்தார்த், படங்கள்:   மா.பி.சித்தார்த்