வெயில் சீஸன் தொடங்கும்போதே மேங்கோ சீஸனும் தொடங்கி, இப்போது கொடிகட்டிப் பறக்கிறது. கடைகளில் மாங்காய், மாம்பழங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போதே சுவைக்கத் தூண்டும். அவற்றைப் பயன்படுத்தி புதுப் புது அயிட்டங்களை செய்யும்போது, கொண்டாட்டத்துக்கு கேட்கவே வேண்டாம்! தன் கற்பனையையும், சமையல் திறனையும் பயன்படுத்தி... மனதைக் கொள்ளைகொள்ளும் மேங்கோ ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர்.

மாம்பழ பாப்டி

தேவையானவை:

மாம்பழம் - ஒன்று
கடலை மாவு, கோதுமை மாவு - தலா 10 டீஸ்பூன்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
நெய் - தேவையான அளவு
ஏலக்காய்த்தூள், கேசரி கலர் - தலா ஒரு சிட்டிகை
முந்திரி - 10
பால் - ஒரு டீஸ்பூன்

செய்முறை: வெல்லத்துடன் அது மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து சூடாக்கி, ஒரு கொதி வந்த பின் இறக்கி வடிகட்டவும். மாம்பழத்தின் தோல், கொட்டையை நீக்கி விழுதாக அரைக்கவும். வெறும் வாணலியில் கடலை மாவு, கோதுமை மாவை தனித்தனியே லேசாக வறுக்கவும். முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் மாம்பழக் கூழ், பால், ஏலக்காய்த்தூள், கேசரி கலர், வெல்லக் கரைசல், கடலை மாவு, கோதுமை மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). இதனுடன் தேவையான அளவு நெய் விட்டு மேலும் கிளறி, நன்கு பொங்கி வரும் பதத்தில் இறக்கி, நெய் தடவிய தட்டில் சேர்த்து சமப்படுத்தி, ஆறிய பின் வில்லைகள் போட்டு, மேலே முந்திரியைப் பதித்துப் பரிமாறவும்.

மாம்பழ காளன்

தேவையானவை:

மாம்பழம் - ஒன்று
தயிர் - அரை கப்
தேங்காய் - ஒன்று (துருவவும்)
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: மாம்பழத்தின் தோல், கொட்டையை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும். தயிரை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

மாம்பழத் துண்டுகளுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பிறகு, தயிரைக் கடைந்து ஊற்றி ஒரு கொதி விடவும். பின்னர் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

மாங்காய் - வெள்ளரி பச்சடி

தேவையானவை:

மாங்காய், வெள்ளரி - தலா ஒன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று
தயிர் - ஒரு கப்
எண்ணெய், கடுகு - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: தேங்காய்த் துருவலுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். மாங்காய் - வெள்ளரியை தோல் சீவி துருவவும். ஒரு பாத்திரத்தில் தயிர், மாங்காய் - வெள்ளரி துருவல், உப்பு, அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

மாம்பழம் - தேங்காய்ப்பால் டிலைட்

தேவையானவை:

கனிந்த மாம்பழம் - ஒன்று
தேங்காய்ப்பால் - அரை கப்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
ஐஸ்கட்டிகள், சர்க்கரை - தேவைக்கேற்ப

செய்முறை: மாம்பழத்தை தோல் சீவி, கொட்டை நீக்கி சிறிய துண்டு களாக்கவும். பிறகு மிக்ஸியில் அரைத்துக் கூழாக்கவும். ஒரு பாத்திரத்தில் மாம்பழக் கூழ், ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பரிமாறும்போது, மாம்பழக் கலவையை சிறிய கிண்ணத்தில் ஊற்றி, மேலே ஐஸ் கட்டிகளை சேர்த்துப் பரிமாறவும்.

மாம்பழ ஐஸ்க்ரீம்

தேவையானவை:

மாம்பழம் - ஒன்று
மில்க் கிரீம் - ஒரு கப்
சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை: மாம்பழத்தின் தோலை சீவி சிறிய துண்டு களாக்கவும். மிக்ஸியில் மாம்பழத் துண்டுகள், சர்க்கரை, மில்க் கிரீம் சேர்த்து நுரை வர அடித்து பாப்சிகல் மோல்டுகள் அல்லது குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி மூடி, ஃப்ரீசரில் இரவு முழுவதும் வைத்து மறுநாள் எடுக்க... மாம்பழ ஐஸ்க்ரீம் ரெடி!

குறிப்பு: குல்ஃபி, பாப்சிகல் மோல்டு இல்லாதவர்கள் சிறிய பிளாஸ்டிக் கப்பில் ஊற்றி நடுவே ஐஸ் குச்சியை வைத்து ஃபிரீசரில் வைத்து எடுக்கலாம்.

மாங்காய் ரசம்

தேவையானவை:

மாங்காய் - ஒன்று
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா ஒன்று
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, கடுகு,
பெருங்காயத்தூள், நெய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: மாங்காயின் தோல், கொட்டையை நீக்கிவிட்டு சிறிய துண்டு களாக்கி மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின் விழுதாக அரைக்கவும். பூண்டுடன் மிளகு, சீரகம் சேர்த்து தட்டி எடுக்கவும். பாத்திரத்தில் அரைத்த மாங்காய் விழுதுடன் தட்டிய பூண்டு விழுது, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து, அடுப்பில் வைத்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும். கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாயை நெய்யில் தாளித்து சேர்த்துக் கலக்கவும். சுத்தம் செய்து, நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவி பரிமாறவும்.

மாங்காய் - கொத்தமல்லி சட்னி

தேவையானவை:

பச்சை மாங்காய் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - ஒரு கப்
புளி - கொட்டைப்பாக்கு அளவு
எண்ணெய், கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: மாங்காயை தோல் சீவி, துருவவும். புளியை சிறிதளவு நீரில் ஊறவிடவும். கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்யவும். மாங்காய்த் துருவல், பச்சை மிளகாய், உப்பு, புளி, கொத்தமல்லித்தழையை மிக்ஸியில் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு சட்னியாக அரைக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சட்னியுடன் சேர்த்துப் பரிமாறவும்.

எம்.உசேன்