Published:Updated:

மாஸ் காட்டலாம்... மாஸ் கம்யூனிகேஷனில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாஸ் காட்டலாம்... மாஸ் கம்யூனிகேஷனில்!
மாஸ் காட்டலாம்... மாஸ் கம்யூனிகேஷனில்!

மாஸ் காட்டலாம்... மாஸ் கம்யூனிகேஷனில்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மாஸ் கம்யூனிகேஷன் என்கிற படிப்பு  பல்வேறு துறை களின் கலவை. ஃபிலிம் டெக்னாலஜி பற்றி மட்டும் இல்லாமல், அதில் மேற்கொள்ள வேண்டிய ஆராய்ச்சி களைப் பற்றியும், திரைப்படங்களின் முக்கியத்துவம் பற்றி யும் இந்தப் படிப்பில் தெரிந்துகொள்ளலாம். சினிமா துறையில் நுழைய விரும்பும் பெரும்பாலானோர்  விஸ்காம் படிப்பை தேர்வு செய்வார்கள். இந்தப் படிப்பில் இருந்து சற்று வித்தி யாசம் காட்டும் மாஸ் கம்யூனிகேஷன் என்று சொல்லக்கூடிய மாஸ்காம் பற்றிப் பேசு கிறார் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெரோஸ் கான்.

மாஸ் காட்டலாம்... மாஸ் கம்யூனிகேஷனில்!
மாஸ் காட்டலாம்... மாஸ் கம்யூனிகேஷனில்!

சிலபஸ்

இதை நான்கு வகைகளாக பிரித்துக்கொள்ள லாம். முதல் வகை கம்யூனிகேஷன் (தொடர்பு, தத்துவங்கள், அறிஞர்களின் கருத்து); இரண்டாவது வகை ஃபிலிம் அண்ட் பாப்புலர் மீடியாஸ் (டி.வி, ரேடியோ, ஆன்லைன் சோஷியல் மீடியா); மூன்றாவது வகை திரைப்படங்களைப் பற்றி பிரத்யேகமாகப் படிப்பது (திரைப்படம் சார்ந்த ஆய்வுகள், பட ரிவ்யூ, க்ரிட்டிசிஸம், புரட்சி முதலானவை பற்றி பேசுவது); நான்காவது வகை புரொடக்‌ஷன், ஒரு பத்திரிகை அல்லது சேனல் எப்படி இயங்குகிறது (ஜர்னலிஸ்ட், எடிட்டர் ஆகியோரின் வொர்கிங் ஸ்டைல்).
இவை தவிர்த்து,  மீடியா லா அண்ட் எத்திக்ஸ், டிசைன் மற்றும் கிராஃபிக்ஸ், கம்யூனிகேஷன் ரிசர்ச், ரேடியோ ஜர்னலிசம், டி.வி ஜர்னலிசம் ஆகிய சில பாடங்களும் அடக்கம்.

மாஸ் காட்டலாம்... மாஸ் கம்யூனிகேஷனில்!
மாஸ் காட்டலாம்... மாஸ் கம்யூனிகேஷனில்!

கல்லூரிகள்

பாரதியார் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்), சென்னை பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய அரசு கல்லூரிகளிலும், லயோலா, எஸ்.ஆர்.எம், சத்யபாமா, எம்.சி.சி, நியூ காலேஜ் ஆகிய சுயநிதிக் கல்லூரிகளிலும் `மாஸ்காம்’ கோர்ஸைப் படிக்க முடியும். இதில், சென்னை பல்கலைக்கழகம் முன்னோடியாக விளங்குகிறது.  இங்கு அதிக கிளப் ஆக்டிவிட்டீஸும், வெளிநாட்டு பேராசிரியர்களை வைத்து செமினார்களும் அடிக்கடி நடத்தப்படுகின்றன.

விண்ணப்பம்

டி.வி, ரேடியோ, பத்திரிகை, ஆன்லைன் ஜர்னலிசம் ஆகிய இவற்றுள் எந்த மீடியாத் துறையில் ஆர்வம் கொண்டிருந்தாலும் `மாஸ்காம்’ ஏற்ற படிப்புதான். ப்ளஸ்-2 முடித்தவுடன் யு.ஜி (UG) சேர்ந்துவிடலாம். இதற்கு இன்ஜினீயரிங் கவுன்சலிங் போன்ற வழிமுறைகள் கிடையாது. இதுவும் சோஷியாலாஜி என்ற துறைக்குள்தான் வரும்.

மாஸ் காட்டலாம்... மாஸ் கம்யூனிகேஷனில்!
மாஸ் காட்டலாம்... மாஸ் கம்யூனிகேஷனில்!

வாய்ப்புகள்

ரிப்போர்டர்ஸ் (கிரவுண்ட் லெவல் வொர்க்கிங்), ஜர்னலிஸ்ட்ஸ் (கொஞ்சம் ஆராய்ச்சி செய்து எழுதுவது), வீடியோகிராஃபர்கள், எடிட்டர்கள், பி.ஆர்.ஓ என்று சொல்லக்கூடிய பப்ளிக் ரிலேஷன் ஆபீஸர்கள் ஆகிய வேலைகளுக்குப் போகலாம். இன்று கார்ப்பரேட் நிறுவனங்களில் `பி.ஆர்.ஓ’களுக்கு அதிக தேவை இருக்கிறது. நல்ல திறமை இருப்பவர்களுக்கு அவர்களின் திறமைக்கேற்ற ஊதியமும் காத்திருக்கிறது.

மு.சித்தார்த், படங்கள்: மா.பி.சித்தார்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு