ஒரு டஜன் யோசனைகள்!

குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் வரக்கூடிய உடல் பிரச்னைகள் மற்றும் அவற்றைத் தடுக்கக்கூடிய முறைகளை இந்த இதழ் `ஒரு டஜன் யோசனைகள்' பகுதியில் வழங்குகிறார்... சென்னை, மேத்தா மருத்துவமனையின் குழந்தைகள்நல மருத்துவர் எல்.கே.பிரேம்குமார்

1 தட்டம்மை

வெயில் காலத்தில் குழந்தைகள் வெளியில் விளையாடுவதால் தட்டம்மை பாதிப்பு எளிதில் ஏற்படவும், பரவவும் வாய்ப்புள்ளது. காய்ச்சல், இருமல், சளி, வாய்ப்புண் போன்ற அறிகுறிகளுடன் நோய் ஆரம்பிக்கும். வியர்க்குரு போன்று உடம்பு முழுவதும் தட்டையாய் பரவும். வீட்டு மருத்துவத்தைவிட, மருத்துவரை அணுகுவதே சிறந்தது. முன்னரே தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் நல்லது. இது வைரஸால் பரவும் நோய் என்பதால், அம்மை வந்த குழந்தையுடன் விளையாடும்போது மற்ற குழந்தைகளுக்கும் கிருமி பரவ வாய்ப்புள்ளது. எனவே, நோய் தீரும் வரை அக்குழந்தையை தனியாக வைத்திருக்கவும்.

ஒரு டஜன் யோசனைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2 முத்தாலம்மை

இது வியர்க்குரு போன்று உடல் முழுவதும் பரவி இருக்கும். பெரும்பாலான தாய்மார்கள் வியர்க்குரு என்று ஆரம்பத்தில் அஜாக்கிரதையாக இருந்துவிட்டு, பின்னரே மருத்துவமனை செல்வார்கள். உடலில் வியர்வைத்துளிகள் தங்காதவாறு தினமும் இரண்டு வேளை குளிக்கவைப்பது, காட்டன் ஆடைகள் அணிவித்துவிடுவது, தடுப்பூசி போன்றவை இதைத் தவிர்க்கச் செய்யும். இதுவும் எளிதில் பரவக்கூடியது.

3 சின்னம்மை

ஒரு டஜன் யோசனைகள்!

சின்னம்மை உடம்பில் முத்து முத்தாக சிறிய கொப்பளங்கள் போன்று தோன்றும். காய்ச்சல், உடல் வலி போன்றவற்றால் குழந்தை அழுதுகொண்டே இருக்கும். கொப்புளங்களை உடைத்துவிடுவது, சொறிந்துவிடுவது போன்றவை அவை உடல் முழுவதும் பரவுவதோடு அருகில் இருப்பவர்களுக்கும் பரவ வழிவகுக்கும். இந்த அம்மை வந்த குழந்தைகள் எதுவும் சாப்பிடக் கூடாது என்பதெல்லாம் மூடநம்பிக்கைகளே..! இந்நோயைப் பொறுத்தவரை உணவே மருந்து என்பதால், நிறைய பழங்கள், நீர்க்காய்கள் சாப்பிடக் கொடுக்கவும். இதற்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.

4 வாந்தி - பேதி

ஒரு டஜன் யோசனைகள்!

வெயில் காலத்தில் பெரும் பாலான குழந்தைகளுக்கு வாந்தி - பேதி ஏற்படும். இதற்குக் காரணம், உணவு. வெளியூர் செல்லும் இடங்களில் சுத்தம் இல்லாத தண்ணீர், உணவுகளை வாங்கிக் கொடுப்பது கூடாது. உணவு ஊட்டும்போது கைகளைச் சுத்தம் செய்ய மறக்க வேண்டாம். மிகவும் காரமான பொருட்கள் சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்க்கவும். முடிந்தவரை தண்ணீரைக் கொதிக்கவைத்துக் குடிக்கக் கொடுக்கவும்.

5 ஹீட் ஸ்ட்ரோக்

ஒரு டஜன் யோசனைகள்!

வெயிலில் விளையாடும் குழந்தைகள் எனர்ஜியை இழப்பது, சோர்வாவது, மயக்கம் அடைவது என அவதிப்படலாம். இவற்றைத் தடுக்க தண்ணீரில் சிறிது உப்பு, சர்க்கரை கலந்து அடிக்கடி குடிக்கக் கொடுக்கலாம். நீர்ச் சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் அவர்கள் உணவில் இடம்பெற வேண்டியது அவசியம்.

6 மஞ்சள்காமாலை

சுத்தமற்ற உணவு, தண்ணீரைக் குடிப்பதால் மஞ்சள்காமாலை ஏற்படும். குழந்தைகளுக்கு சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது, அதிகப்படியான வாந்தி, காய்ச்சல், வயிற்றுவலி போன்றவை இருந்தால், காலம் தாழ்த்தாமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். மஞ்சள்காமாலை குணமாக 10 நாட்கள் ஆகும். இந்நோயின்போது குழந்தைகள் தங்கள் எதிர்ப்பு சக்தியை பெருமளவு இழந்துவிடுவார்கள். அதை ஈடுகட்டும் விதமாக சத்துகள் நிறைந்த உணவுகளைக் கொடுக்கவும். தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது.

7 டைஃபாய்டு

ஒரு டஜன் யோசனைகள்!

அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவால் அதிகம் பரவும் நோய் இது. விட்டுவிட்டு காய்ச்சல் வருவது, தீராத வயிற்று வலி, பேதி போன்றவை டைஃபாய்டின் அறிகுறிகள். அவை தென்பட்டால் மருத்துவரை அணுகவும். வெளி உணவு, தண்ணீர் தவிர்ப்பது, ஈ, கொசு இல்லாமல் பார்த்துக்கொள்வது, உடனுக்குடன் சமைத்துச் சாப்பிடுவது போன்றவை தற்காப்பு நடவடிக்கைகள்.

8 வியர்க்குரு

வெயில் காலத்தில் வெப்பநிலை சர்வசாதாரணமாக 40 - 45 டிகிரியைத் தொடுகிறது. அப்போது உடலைக் குளிர்விக்க அதிகளவில் வியர்வை சுரக்கிறது. உடலைச் சுகாதாரமாகப் பராமரிக்காவிட்டால், வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். இதனால் வியர்க்குரு ஏற்படும். வெயில் காலத்தில் தினமும் இரண்டு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. வியர்க்குரு உள்ள இடங்களில் மருத்துவர் பரிந்துரைக்கும் காலமின் லோஷனைப் பூச, அரிப்பு குறையும். கோடையில் ஜீன்ஸ், ஃபேன்ஸி ஆடைகளைவிட, காற்றோட்டமான காட்டன் ஆடைகளே குழந்தை களுக்கு நல்லது.

9 நீர்க்கடுப்பு

ஒரு டஜன் யோசனைகள்!

கோடையில் சிறுநீர்க் கடுப்பு அதிகத் தொல்லை தரும். தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது போன்றவை இதற்கு முக்கியக் காரணங்கள். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால், சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர்ப் பாதையில் படிகங்களாகப் படிந்துவிடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. எனவே, குழந்தைகளுக்கு அடிக்கடி குடிக்கத் தண்ணீர் கொடுத்துக்கொண்டே இருக்கவும். சளிபிடிக்காத பட்சத்தில் வீட்டில் தயார் செய்யும் பழ ஜூஸ், மோர் கொடுக்கலாம். ஐஸ்கட்டிகள் தவிர்க்கவும்.

10 சரும நோய்கள்

ஒரு டஜன் யோசனைகள்!

வெயில் காலத்தில் வெளியேறும் அதிகப்படியான வியர்வையால், உடலில் ஈரம் தேங்கும் பகுதிகளில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் போன்ற சரும நோய்கள் தோன்றும்... கவனம்.

11 வேனல் கட்டிகள்

சருமத்தின் மூலம் வியர்வையாக வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியவில்லை எனில் தோலின் அடிப்புறத்தில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அந்த இடத்தைச் சுற்றி பாக்டீரியா தொற்றிக்கொள்ள, வீங்கிப் புண்ணாகிவிடும். இது குழந்தைகளுக்குத் தாங்கமுடியாத வலியை ஏற்படுத்தும். எனவே, வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு பவுடர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். கட்டியில் மஞ்சள், சோப்பு போன்றவற்றை குழைத்துப் போடுவது, கட்டிகளை உடைத்துவிடுவதை எல்லாம் தவிர்த்து, மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறவும்.

12 உணவில் கவனம்

ஒரு டஜன் யோசனைகள்!

வெயில் காலத்தில் எண்ணெயில் பொரித்த பண்டங் கள், கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகள், இனிப்புகள், க்ரீம் மிகுந்த பேக்கரி அயிட்டங்கள், சூடான, காரமான, மசாலா கலந்த உணவுகளை எல்லாம் குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டியது முக்கியம்.

சு.சூர்யா கோமதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism