நடிப்பு, சேவை, படிப்பு என பன்முக அடையாளங்களோடு கலக்கிக் கொண்டிருக்கிறார், ஸ்ரீதேவி. சன் டி.வி ‘கல்யாணப் பரிசு’, ஜி தமிழ் ‘அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்’ என்று சீரியல்களில் தினமும் நம்மைச் சந்திப்பவர்.

‘‘எங்கம்மா ரூபா, டப்பிங் ஆர்ட்டிஸ்ட். இப்போ சீரியல்களிலும் நடிச்சுட்டு இருக்காங்க. நான் பி.எஸ்ஸி படிச்சுட்டு இருந்தப்போ, தற்செயலா கிடைச்ச வாய்ப்பினால ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்துல தனுஷ் சாருக்கு தங்கச்சியா நடிச்சேன். அடுத்து எம்.பி.ஏ படிச்சுட்டு இருந்தப்போ சன் டி.வி-யில ‘செல்லமடி நீ எனக்கு’ சீரியல்ல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து தமிழ், தெலுங்கில் பல சீரியல்களில் கமிட் ஆனேன். நடுவுல ‘கிழக்கு கடற்கரை சாலை’ படத்தில் நடிச்சேன். மறுபடியும் சேனலுக்கே வந்துட்டேன்.

என்னோட டிகிரி லிஸ்ட் கொஞ்சம் கேளுங்க. பி.எஸ்ஸி., நியூட்ரிஷியன் அண்ட் டயடிக்ஸ் முடிச்சிட்டு, எம்.பி.ஏ., ஹெச்.ஆர் படிச்சேன். அடுத்து எம்.எஸ்ஸி., சைக்காலஜி முடிச்சுட்டு, எம்.ஏ., லிங்விஸ்டிக்ஸ் முடிச்சிருக்கேன். நெக்ஸ்ட் கிரிமினாலஜி சார்ந்த படிப்பை படிக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன். நடிப்பைத் தாண்டி, டெக்னிக்கலாவும் இப்போ பல விஷயங்களைக் கத்துட்டு இருக்கேன். தயாராகிட்டு இருக்குற ‘இரவில்’ என்ற படத்துல அசிஸ்டன்ட் டைரக்டரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். அப்ஸ் அண்ட் டவுன்ஸ் அதிகமா இருக்கிற மீடியா ஃபீல்டில், வாய்ப்பு குறையும் சமயத்துல என்னோட படிப்பு சார்ந்த துறைக்கு வேலைக்குப் போயிடலாம் என்பது பிளான்.

நடிப்பு, படிப்பைத் தாண்டி பிராணிகள் நல அமைப்பு ஒன்றில் வாலன்டியரா சேவை செஞ்சிட்டு இருக்கேன். இப்போ எங்க வீட்டுல நாலு நாய்கள், நிறைய பறவைகள்னு வளர்த்துட்டு இருக்கேன். வாழ்க்கை சந்தோஷமாவும், பிஸியாவும் போயிட்டு இருக்கு!’’

சூப்பர் கேர்ள்!

‘‘ஆரம்ப ஷோல அவ்ளோ திட்டு வாங்கினேன்!’’

நடிப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு... இரண்டிலும் துடிப்பு ஷபானா.

‘‘காஞ்சிபுரத்துல ப்ளஸ் டூ முடிச்ச டைம்ல, சன் மியூசிக் `விஜே’ ஆடிஷன் விளம்பரம் பார்த்து, சும்மா ட்ரை பண்ணினேன். செலக்ட் ஆகிட்டேன். ஆங்கரிங் பத்தி எதுவும் தெரியாம, முதல் ஷோல எனக்கு பயத்துல காய்ச்சலே வந்து, மூணு நாள் லீவ் எடுக்க வேண்டியதா போச்சு. மறுபடியும் வேலைக்கு வந்தா, ஆரம்ப ஷோல அவ்ளோ திட்டு வாங்கினேன். அப்புறம் வீட்டுல சின்சியரா ரிகர்சல் பண்ணி, போகப் போக செட் ஆகி, ஜாலியா ஷோ பண்ண ஆரம்பிச்சேன். ரெண்டரை வருஷம் சன் மியூசிக்ல ஆங்கரா வேலை பார்த்துட்டே, கரஸ்ல பி.பி.ஏ படிச்சேன். அந்த டைம்ல விக்ரமன் சாரோட ‘நினைத்தது யாரோ’ படத்துல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து சன் டி.வி-யில ‘தேவதை’ சீரியல்ல லீடு கேரக்டர் கிடைக்க ‘ப்ரியா’வா ரசிகர்களுக்குப் பிரியமாகிட்டேன். அதோட கலைஞர், இசையருவி சேனல்கள்ல ஆங்கராவும் இருக்கேன்.

எனக்கு டைரக்டர் ஆகணும்கிறது பெரிய ஆசை. அதுக்கான முயற்சிகளையும் பயிற்சிகளையும் எடுத்துட்டு இருக்கேன். இப்போ ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன். டைரக்டர் ஷபானா வில் மீட் யூ ஸூன்!’’

உங்க படத்துல நீங்களே ஹீரோயினா?!

``ஆணழகன் அர்ணவ் நடிகரான கதை!’’

‘யுகி மாதிரி ஒரு பிள்ளையோ, கணவனோ, மருமகனோ கிடைக்கணுமே’ என்று பெண்கள் ஏங்கும் ‘யுகேந்திரனாக’ சன் டி.வி-யின் ‘கேளடி கண்மணி’ சீரியலில் மகளிர் வாக்குகளை அள்ளிக்கொண்டிருக்கிறார் அர்ணவ்.

‘‘புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிதான் என் சொந்த ஊர். ஸ்கூல் படிச்சப்போ அஜித் சாரோட ‘நீ வருவாய் என’ ஷூட்டிங் பார்த்தப்போ ஆரம்பிச்சது சினிமா ஆசை. சென்னையில் பி.எஸ்ஸி., எம்.பி.ஏ படிச்சுட்டு... சுவிட்சர்லாந்து, மலேசியானு டெக்ஸ்டைல் பிசினஸ் செய்தேன். சினிமா கனவு அழைக்க, ஊருக்குத் திரும்பிட்டேன். அப்போ நான் ரொம்ப ஒல்லியா இருப்பேன். நண்பர் அட்வைஸ்படி `ஜிம்’முக்கு போக ஆரம்பிச்சு, அப்படியே அதுல இன்ட்ரஸ்ட் ஆகி, ‘மிஸ்டர் திருச்சி’, ‘மிஸ்டர் புதுக்கோட்டை’னு நிறைய பரிசுகள் வாங்கினேன். மாடலிங்குள்ள வந்து விளம்பரப் படங்களில் நடிச்சு, ஒருவழியா சன் டி.வி ‘சக்தி’ சீரியல் மூலமா நடிப்புக் கனவு ஆரம்பிச்சது. அந்த சீரியல்ல நடிச்சதுக்காக, கென்யா நாட்டின் ஸ்வாஹிலி (Swahili) யுனிவர்சிட்டி, கோயம்புத்தூர்ல நடந்த ஒரு ஃபங்ஷன்ல எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க. இப்போ சன் டி.வி-யில, ‘கேளடி கண்மணி’ சீரியல்ல, எல்லாருக்கும் பிடிச்ச ‘யுகி’யாகிட்டேன்.

‘தனி ஒருவன்’ படத்துல, நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நடிச்ச கேரக்டர்ல தெலுங்கு ரீமேக்ல, நான் நடிக்கப்போறேன். கடல் உணவுகள் பிசினஸ் செய்துகிட்டு எங்க ஊர்லயே இருக்கிற என் அப்பா, ‘வந்துருடா’னு கூப்பிட்டுக்கிட்டே இருக்கார். ‘நடிப்புல என் திறமையையும் வெற்றியையும் பதிவு பண்ணிட்டு, நிச்சயமா வந்துடுறேன்ப்பா’னு சொல்லிட்டே இருக்கேன்!’’

ஜொலிங்க மிஸ்டர்!

ஹேப்பி ஈவன்ட்ஸ்!

‘தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தை பிரமாண்ட மாக உருவாக்க ஒட்டுமொத்த திரையுலகையும் ஒன்றிணைத்திருக்கிறது தென்னிந்திய நடிகர் சங்கம். இதற்காக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கிரிக்கெட் போட்டி என கலக்கி வருகிறது. இதைப்பற்றி பேசிய நடிகர் சங்கத் தலைவர் நாசர்,

‘‘நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி மூலமா தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் கட்ட கணிசமான தொகையைத் திரட்டியிருக்கோம். இந்த கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றிருந்த சன் டி.வி-யில், கிரிக்கெட் போட்டியின் விளம்பரமா அமையும் வகையில் கடந்த சில ஞாயிறுகளா, சீனியர், ஜூனியர் நடிகர், நடிகைகள் உங்களை கலகலப்பாக்கின நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்பீங்க. அந்த ‘நட்சத்திர சங்கமம்‘, ‘கோலிவுட் கலாட்டா’ நிகழ்ச்சிகள் மாதிரி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூலமாக இது போன்ற சந்திப்புகள் தொடரும். ‘நட்சத்திர கிரிக்கெட்’டை தொடர்ந்து இன்னும் பல திரை கலைஞர்களின் சங்கம நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டிருக்கோம்’’ என்றார் சந்தோஷம் பொங்க!

வாங்க ஸ்டார்ஸ்!

ரிமோட் ரீட்டா, படங்கள்: ரா.வருண் பிரசாத்

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:ரூ 150

தலைமுறைப் பாலம்!

``சமீபத்தில் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான `நீயா, நானா’ நிகழ்ச்சியில் தமிழ் தாத்தா - பாட்டிகள் வெர்சஸ் பேரப்பிள்ளைகள் நிகழ்ச்சி அருமை! தாத்தா - பாட்டிகளின் அன்பு, பேரப்பிள்ளைகளின் பாசப்பிணைப்பு நகைச்சுவையோடு அருமையாக காட்டப்பட்டது. தாத்தா - பாட்டிகளுக்கு ஆங்கிலம் பேச சரியாக வரவில்லை என்றாலும் அதனை வெட்கச்சிரிப்போடும், சிணுங்கலுடனும் இருதரப்பினரும் அழகாக கூற... அதைக்காணும் நமக்கு சிரிப்பு பரிசாக கிடைத்தது’’ என்று உள்ளம் நெகிழ்ந்து பாராட்டுகிறார்... சென்னை, பெரம்பூரில் இருந்து பி.கே.பிரேமிகா.

இப்பிடி அசத்துறீங்களேம்மா!

``ஜீ தமிழ் டி.வி-யில் ஒளிபரப்பாகும் `சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் மறுபடியும் லட்சுமி ராமகிருஷ்ணன் விஜயம் செய்திருக்கிறார். முதல் இரண்டு நாட்கள், 2 புதுக்கோணங்களில் பிரச்னைகள் வர... தன் குடும்ப பிரச்னையாக எடுத்துக்கொண்டு மிக மிக அழகாகவும், நேர்த்தியாகவும் அவருக்கே உரிய பாணியில் நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தினார். என்னம்மா, இப்பிடி அசத்துறீங்களேம்மா!” என்று வியக்கிறார்... சென்னை, கே.கே.நகரில் இருந்து சத்யா.