Published:Updated:

பாடாப்படுத்துறாய்ங்களே..!

பாடாப்படுத்துறாய்ங்களே..!
பிரீமியம் ஸ்டோரி
News
பாடாப்படுத்துறாய்ங்களே..!

பாடாப்படுத்துறாய்ங்களே..!

ன்ன பாஸ் இன்ஜினீயரிங் படிச்சிருக்கீங்களா? அட, முன்னெல்லாம் ஊருக்கு ஒருத்தர் இருந்த காலம் போய் இப்ப வீட்டுக்கு ரெண்டு, மூணு இன்ஜினீயர்ங்க இருக்காங்கன்னு சொல்ற காலம் வந்துடுச்சே! வீட்டுல உள்ளவங்க சொல்லிட்டாங்களேன்னு விழுந்தடிச்சு படிச்சுட்டு, வர்றவங்க போறவங்ககிட்ட எல்லாம் திட்டு வாங்கிட்டு, ரெண்டு காதுகள்லயும் `ஒய் பிளட்... சேம் பிளட்’னு சொல்லிட்டு அசால்டா சுத்துறப் பசங்களே! வாங்க, ஒரு கப் காபி சாப்ட்டுகிட்டே நம்ம வேதனையை ஷேர் பண்ணிக்குவோம்.

பாடாப்படுத்துறாய்ங்களே..!

பக்கத்து வீட்ல ஆரம்பிச்சு தூரத்து சொந்தம் வரைக்கும் டிஃபால்ட்டா கேக்குற ஒரே கேள்வி... `தம்பி எந்த கம்பெனியில ப்ளேஸ்மென்ட் கிடைச் சிருக்கு?’ (இல்ல, தெரியாம தான் கேக்குறோம்... நான் பரீட்சைக்குப் போறப்ப `ஆல் தி பெஸ்ட்’ சொன்னீங் களா? இல்ல... ஒரு செமஸ்டருக்காச்சும் ஃபீஸ் கட்டினீங்களா?)

நாலு வருஷமும் நாக்கு தள்ளிக்கிட்டு, ஒருநாள்கூட லீவு கிடைக்காம காலேஜுக்குப் போயிட்டு இருப்போம். ஆனா, ஏதோ ஒரு நாள் தலைவலினு லீவ் போடக்கூடாதே... `என்னது... காலேஜுக்குப் போகலையா’னு ஷாக் அடிச்சு கேக்குறீங்களே நியாயமா இதெல்லாம்? (`சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்’னு எப்பவோ ஸ்கூல் டேஸ்ல லெட்டர் எழுதின ஞாபகம்).

`ஏண்டா, உன் வயசுப் பசங்க எல்லாம் வேலைக்குப் போகுதுங்க.. நீ மல்லாக்கப் படுத்துட்டு விட்டத்தைப் பாக்குறியே’னு அப்பா வந்து சவுண்ட் விடுறதும், அதுக்கு ‘கெக்கெபிக்கே’னு நம்ம தங்கச்சி சிரிக்குறதும் உலக வழக்கம்தான். ஆனா, இதெல்லாம் நம்ம வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வரும்போது நடக்கும் பாருங்க.. அதான் க்ளைமாக்ஸ் (திருவிழா சீஸன்ல மட்டும் வீட்லயே தங்கக்கூடாதுனு முடிவெடுக்க வைக்கிறதெல்லாம் நீங்கதானே!)

இப்பதான் எக்ஸாம் எழுதிட்டு வீட்டுக்குள்ள நுழைஞ்சிருப்போம். அதுக்குள்ள என்ட்ரன்ஸ் எக்ஸாம், சிவில் சர்வீஸ் எக்ஸாம்னு மளிகை சாமன் லிஸ்ட் மாதிரி சிலபஸ் லிஸ்ட் கொடுக்கிறதையும் ஏதாவது ஒரு வன்கொடுமை யில சேர்க்க சட்டம் இருக்கான்னு பாருங்க ஃப்ரெண்ட்ஸ் (அரியர் வைக்கிற பையனுக்கு எதுக்கு அம்பத்தெட்டு எக்ஸாம் லிஸ்ட்னு மைண்ட் வாய்ஸ் சொல்லுதே!)

`800 ஸ்கொயர் ஃபீட்ல வீடு கட்டணும். ரெண்டு பெட்ரூம், ஒரு ஹால், கிச்சன், கார் பார்க்கிங்னு பிளான் போட்டு குடுங்க தம்பி’னு பவ்யமா கேக்குறதுக்கு முன்னாடி `நான் சிவில் இன்ஜினீயரிங் இல்ல... மெக்கானிக்கல்’னு உங்களுக்கு எப்படி சொல்லி புரியவைப்பேன்? (மெக்கானிக்கல்னு சொன்னா மட்டும் விடுறீங்களா? ஓடாம ஓரங்கட்டுன டூவீலரை ரிப்பேர் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ண வேண்டியது!)

இதெல்லாம்கூட பரவாயில்ல. காலை யில எழுந்து ஒரு செல்ஃபி எடுக்குறது ஒரு குத்தமா? முகரை யைப் பாருன்னு நீங்க மைண்ட் வாய்ஸ்ல திட்டுறதெல்லாம் சத்தமாவே கேட்குதே! (ஒரு செல்ஃபிக்கும் வேலைக்கும் என்னய்யா சம்மந்தம்?)

 மு.சித்தார்த், பா.நரேஷ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz