`கிரிக்கெட்தான் பார்ப்பேன்’ என்று தம்பி அடமாக நிற்க... `நியூஸ்தான் பார்ப்பேன்’ என்று அக்கா பிடிவாதம் பிடிக்க... இருவரின் ரிமோட் சண்டை உச்சத்தை நோக்கி உயர்ந்தது.

`அது என்ன... நீ மட்டும் வித்தியாசமா நியூஸ் சேனல் பாக்குறே... பொதுவா கேர்ள்ஸ் இப்படி நியூஸ் பாக்க மாட்டாங்க தெரியுமா? அவங்களுக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரமாச்சே!’ என்று தம்பி சொன்னதும், கோபம் பொங்கத் துவங்கிவிட்டது அக்காவுக்கு.

`முதல்ல வாயை மூடுடா! அதென்னடா பாய்ஸ் மட்டும்தான் அரசியல் நியூஸெல்லாம் தெரிஞ்சுக்கணுமா?’ என்று கொதித்த அக்கா,

`சாப்பிடுற சாப்பாட்டுல ஆரம்பிச்சு, படிக்குற படிப்பு, போடுற டிரெஸ், இம்போர்ட், எக்ஸ்போர்ட்னு எல்லாத்துலயும் அரசியல் இருக்கு. இந்த எல்லாத் துறைகள்லயும் கேர்ள்ஸும் வேலை பாக்குறாங்க. ஆனா, அந்தத் துறைகள்ல ஒளிஞ்சிருக்குற அரசியலைப் பத்தி நாங்க தெரிஞ்சுக்க கூடாதா? ஓட்டுப் போடுறதோட கடமை முடிஞ்சிருச்சுனு ஒதுங்கிப் போயிட்டே இருக்கணுமா? `அரசியலா... இது பெண்களுக்கு சம்பந்தம் இல்லாத நியூஸ்’னு காலகாலமா சொல்லிட்டிருக்கிறதையே... நீயும் சொல்ல ஆரம்பிச்சுட்டே! அரசியலைப் பத்தி நாங்க முடிவு செய்துக்குறோம். அட்லீஸ்ட், இப்படியெல்லாம் மட்டம் தட்டி பேசறதையாவது மொதல்ல நிறுத்துறீங்களா?’ என வெளுத்து வாங்கிவிட்டார்.

அக்காவின் கோபம் எல்லை மீறுவதை உணர்ந்த தம்பி... `இந்தாங்க எதிர்கால எம்.எல்.ஏ... ரிமோட்டைப் புடிச்சுக்கோங்க!’ எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.

தேர்தல் கால அரசியல் செய்திகளை அசை போட்டுக்கொண்டிருந்தபோது, தன் உறவினரின் வீட்டில் நடந்த இந்த ரிமோட் சண்டையைக் கோடிட்டு என்னிடம் பேசினார் நண்பர்.

சரிவிகித உணவுதான் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும். `இது வேண்டாம்... அது வேண்டாம்’ என நாம் ஒதுக்க ஒதுக்க, உடலுக்கு நோய்களே வந்து சேரும். இதேபோலத்தான் பல்துறை அறிவை ஒவ்வொருவரும் பெருக்கிக்கொள்ளும்போது, அரசியல் அறிவும் அதில் சேர்ந்தே இருப்பதுதானே நல்லது..!

பெண்களை மிகமுக்கிய ஓட்டு வங்கியாக வைத்துதான் காலகாலமாக வெற்றியை அறுவடை செய்துகொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள். அப்படியிருக்க, `அரசியல்ல பெண்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லை’ என்று சொல்லிச் சொல்லியே அவர்களை இன்னும்கூட ஓரமாக உட்கார வைத்துக்கொண்டிருப்பது சரிதானா?

உரிமையுடன்,

ஆசிரியர்