`செம கிளியர்’ ஹன்னா!

ஃபேஷன் ஷோக்களில் பூனை நடை நடக்கும் அழகிகளைப் பார்த்து, அவர்கள் போட்டிருக்கும் டிரெஸ் எல்லாம் எங்கு கிடைக்கும், என்ன விலை இருக்கும்னு யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா? யார்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிறதுனு குழப்பமா இருந்தா, ஷாம்பெயின் லைஃப் ஸ்டைல் (www.cham pagnelifestyleblog.com) என்கிற வலைதளத்துக்குப் போகலாம். குறைந்த விலையில காலத்துக்கு ஏற்ற மாதிரி ஃபேஷன் ஆடைகள், நகைகள், மேட்சிங் கைப்பை, ஷூ வரைக்கும் ஐடியாஸ் அள்ளித் தெளித்திருக்கிறார் இந்த பிளாக்கின் உரிமையாளர் ஹன்னா. பிளாக் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சூப்பரான டிப்ஸ் கொடுக்கும் ஹன்னாவின் பின்னூட்டங்கள் செம கிளியர். அப்புறம் என்ன... பட்ஜெட்டுக்கு ஏத்த டிரெஸ்ஸை செலக்ட் பண்ணலாமே!

மாடல்களை ஏங்க வைக்கும் கிறிஸ்டினா!

`ஃபேஷன் உலகுக்கு கிறிஸ்டினா ஒரு பெஞ்ச் மார்க்’ என்று சிலிர்க்கிறார்கள் மாடல் உலகத்தினர். யார் இந்த கிறிஸ்டினா என்று கேட்டால் இவர்தான் அந்த மாடல்களுக் கெல்லாம் டிரெஸ் டிசைனர். சர்வதேச விருதைகளை எல்லாம் அலேக்காக தட்டிச் செல்லும் கிறிஸ்டினாவின் ஆடைகள் ஃபியூஷன் வகையைச் சேர்ந்தவை. கிளாசிக் பகல் நேர ஆடைகளுடன் இரவு நேர ஆடைகளை இணைத்து வடிவமைப்பதே கிறிஸ்டினாவின் ஸ்டைல். ஒரு போட்டின்னு வந்துட்டா அங்க கிறிஸ்டினா டிசைனரானு தெரிஞ்சுட்டு போறது நல்லதுதானே மாடல்ஸ்?!

நம்பிக்கை நாயகி நடாலியா!

ஆறு வயதில் நடந்த விபத்து ஒன்றில் கீழே விழுந்த நடாலியா சியாமின் இளமைப் பருவம் அவரை வீல்சேருக்கு கடத்தியது. அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்த நடாலியாவை ஓவர் வெயிட் என ரிஜக்ட் செய்ய, மீண்டும் மனம் தளராமல் போராடி மாடலுக்கான இடத்தை தற்போது தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் இந்த ஃபீனிக்ஸ் பெண்மணி. ஆஸ்திரேலியாவின் டாப் மாடல்கள் லிஸ்ட்டில் இருக்கும் இவர் `ஃபாரெவர் 21’ (FOREVER 21) நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸடர். இவங்க வயசு ஒண்ணும் ரொம்ப அதிகமெல்லாம் இல்ல. ஸ்வீட் சிக்ஸ்டீன் ஒன்லி!

ஹேருக்கு கேர்!

சல்லி ஹெர்ஷ்பர்கர்... லாஸ் ஏஞ்சல்ஸ் கொடுத்த டாப் ஹேர் ஸ்டைலிஸ்ட்! ஹாலிவுட்டின் உச்சத்தில் இருக்கும் மாடல்கள், ஹீரோயின்கள், டைரக்டர்கள் அனைவருக்கும் சல்லிதான் ஹேர் ஸ்டைலிஸ்ட் சாய்ஸ். `24கே’ எனப்படும் தனது சிகை அலங்கார நிறுவனத்தால் தொழிலில் பல மைல்கற்களை எட்டியிருக்கும் சல்லி, தான் தயாரிக்கும் அனைத்து முடி சார்ந்த பொருட்களையும் பெர்சனலாக சோதனை செய்து பார்த்துவிட்டுதான் விற்பனைக்கு அனுப்புகிறாராம். ‘கேரிங் நல்லது’னு புரியவெச்சுட்டீங்களே சல்லி!

தா. நந்திதா