அறிவிப்புகள்
Published:Updated:

'ஹாட்' சம்மர்... 'கூல்' ஸ்டார்ஸ்!

'ஹாட்' சம்மர்... 'கூல்' ஸ்டார்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
'ஹாட்' சம்மர்... 'கூல்' ஸ்டார்ஸ்!

கோடை குறிப்புகள்

'ஹாட்' சம்மர்... 'கூல்' ஸ்டார்ஸ்!

பிரபல நடிகைகள், கோடையை எப்படிச் சமாளிக்கிறார்கள்?! கேட்டோம்... 

ரம்யா நம்பீசன்

'ஹாட்' சம்மர்... 'கூல்' ஸ்டார்ஸ்!

‘‘சம்மர்னா, நான் சன்ஸ்க்ரீனிடம் சரண்டர். பெரும்பாலான பெண்கள்அப்படித்தான்னாலும், அதில் பலர் தங்களோட ஸ்கின் டைப்புக்கு ஏற்ற சன்ஸ்க்ரீனைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தாம, ஏதோ ஒரு சன்ஸ்க்ரீனை அப்ளை செஞ்சுக்கிறாங்க. அது தப்பு. நம்ம ஸ்கின் டைப்புக்கு என்ன மாதிரியான சன்ஸ்க்ரீன் பயன்படுத்தணும்னு பியூட்டிஷியனிடமோ, மருத்துவரிடமோ ஆலோசிச்சுட்டு அதன் அடிப்படையில்தான் அதைத் தேர்ந்தெடுக்கணும். சம்மர்ல உடலை டிஹைட்ரேட் ஆகவிடாம தண்ணீர் குடிச்சுட்டே இருப்பேன், இப்பவும் பாட்டில் பாட்டிலா குடிக்கிறேன். சிலருக்கு இந்த வெயில் காரணமே இல்லாம கோபம், டென்ஷன்னு அவங்க மூடை டிஸ்டர்ப் பண்ற அளவுக்குப் படுத்தும். அதுக்கு யோகா பெஸ்ட் சாய்ஸ். அதைத்தான் நான் ஃபாலோ பண்றேன்!’’

சிருஷ்டி டாங்கே

'ஹாட்' சம்மர்... 'கூல்' ஸ்டார்ஸ்!

‘‘இந்த சம்மருக்கு, சிங்கப்பூருக்கு பறந்து வந்திருக்கா சிருஷ்டி! யெஸ்... ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ்கூட சிங்கப்பூரை என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். யாருக்காச்சும் சம்மர் வெக்கேஷனுக்கு ஒரு நல்ல ஸ்பாட் சொல்லணுமா? மாலத்தீவு போயிட்டு வாங்க... சூப்பரா இருக்கும். அப்புறம், கோடையிலும் சருமத்தை `குளோ' குறையாமல் பார்த்துக்க, முதல் வழி தண்ணீர். அழகு, ஆரோக்கியம் ரெண்டுக்கும் அது கைகொடுக்கும் தோஸ்து... டூ இன் ஒன்! பொதுவா, சம்மர்ல வேலை எதுவும் இல்லைன்னா, நான் வீட்டை விட்டு வெளியேற மாட்டேன். ஆனா, அதிகாலையில் மட்டும் பீச்சுக்குப் போய் சன்லைட்டை கிஸ் பண்றது எனக்கு ரொம்பப் பிடிக்கும்!’’

சாய் பல்லவி

'ஹாட்' சம்மர்... 'கூல்' ஸ்டார்ஸ்!

‘‘இப்போ நான் ஜார்ஜியா நாட்டில் மெடிசின் படிச்சுட்டு இருக்கேன். இங்கயும் வெயில் ஆரம்பிச்சாச்சு. பொதுவா, நான் மேக்கப்புக்கு `நோ' சொல்ற பொண்ணு. வெளியில் கிளம்பும்போது அதிகபட்சமா சன்ஸ்கிரீன் அப்ளை பண்ணுவேன் அவ்ளோதான். சில நேரங்களில் அதையும் மறந்துட்டுப் போயிடுவேன். கடலை மாவு, பயத்த மாவுதான் எப்பவும் என் முகத்துக்கு! அதை தயிர் அல்லது ரோஸ் வாட்டரில் கலந்து அப்ளை செய்வேன். இப்போகூட ஊர்லயிருந்து அம்மா கொடுத்து விட்ட கடலை மாவு, பயத்த மாவு, ரோஸ் வாட்டர் எல்லாம் பேக்கில் தூங்குது. ஆனா, அதைக் கலந்து அப்ளை செய்யக்கூட நேரமில்லாம படிச்சுட்டே இருக்கேன். சம்மர்னு இல்லை... எப்பவுமே நிறையத் தண்ணீர் குடிப்பேன். நான் 99 பர்சன்ட் வாழ்வதே பழங்கள்லதான். ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ் கூட இருக்கும்போதுதான் சப்பாத்தி, ரைஸ் எல்லாம். வேற எங்க இருந்தாலும் ஒன்லி ஃப்ரூட்ஸ். நம்ம ஊர்ல இருந்தா நம்ம ஊர்ப் பழங்கள். இப்போ ஜார்ஜியாவுல கிடைக்கிற சீஸனல் பழங்கள்தான் இந்தக் கோடையில் இருந்து என் ஸ்கின்னைக் காப்பாத்துது!’’

ஆனந்தி

'ஹாட்' சம்மர்... 'கூல்' ஸ்டார்ஸ்!

‘‘சம்மர்னாலே எனக்கு ஆந்திராவில் இருக்கும் என் அத்தை வீடுதான் ஞாபகம் வரும். எல்லா சம்மர் வெக்கேஷனும் அங்கதான். ‘கயல்’ படம் எடுத்த சமயம், ஒரு கோடை. ரொம்பக் கஷ்டமா இருந்தது. ஆனா, நடிகைன்னா அதையெல்லாம் பார்க்க முடியாதே..! சன்ஸ்க்ரீன், மேக்கப் எல்லாம் போட்டுட்டு ‘இதோ வர்றேன் மிஸ்டர் சன்’னு கிளம்ப வேண்டியதுதான். ஆனா, ஷூட் இல்லைன்னா, வீட்டை விட்டு வெளியேற மாட்டேன். ஷூட் இல்லாத நாட்களில், என் ஸ்கின்னுக்கும் காஸ்மெடிக்ஸ்ல இருந்து முழு விடுதலை. ஒன்லி ஹெர்பல்தான். அம்மா பியூட்டிஷியன் என்பதால, கேரட் பேக், ஆயில் பாத்னு நேச்சுரல் ஹெர்பல் ட்ரீட்மென்ட்ஸ் நடந்துட்டே இருக்கும். ஆனா, கோடையா இருந்தாலும் சரி, மழையா இருந்தாலும் சரி... சாப்பாட்டுல மட்டும் எப்பவும் எந்தக் கட்டுப்பாடும் வெச்சுக்க மாட்டேன். ஃபாஸ்ட் ஃபுட், கூல்டிரிங்ஸ்னு பிடிச்சதை சாப்பிடுவேன். டயட்னா என்னன்னே எனக்குத் தெரியாது. ஸோ, இந்த சம்மர்லயும் சூப்பரா சாப்பிட்டுட்டுதான் இருக்கேன்!’’

கே.அபிநயா