செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 5

‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘காக்கா முட்டை’ படங் களில் தன் இயல்பான தோற்றம் மற்றும் எதார்த்தமான நடிப்பால் ஈர்த்தவர், ஐஸ்வர்யா ராஜேஷ். தன் டிரெஸ்ஸிங் ஸ்டைல் பற்றிப் பேசுகிறவரின் பேச்சில் எளிமையும் சிநேகமும்!

அழகுக்காக அக்சஸரீஸ்!

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 5

அக்சஸரீஸ்... எனக்கு சுத்தமா பிடிக்காது. புடவை கட்டினா மட்டும், அந்த அழகுக்காக சில அக்சஸரீஸ் போட்டுப்பேன்.

ஜீன்ஸ்தான் ஃபேவரைட்!

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 5

ஜீன்ஸ், டி-ஷர்ட்தான் என் ஆல்டைம்  ஃபேவரைட் டிரெஸ் பேட்டர்ன். அப்புறம்... நான் ஒரு ஷூ பைத்தியம். எப்போ ஷாப்பிங் போனாலும் நிச்சயமா ஒரு ஷூ வாங்கிட்டு வந்துடுவேன்.

ஆன்லைன் ஷாப்பிங்னா அலர்ட்!

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 5

இப்போ ஷாப்பிங்குக்கு நேரம் இல்லாம ஷூட்டிங்கில் ஓடிட்டு இருக்கிறதால, ஆன்லைன் ஷாப்பிங் பக்கம் தாவிட்டேன். அங்க விலையும், வெரைட்டீஸும் எனக்குப் பிடிச்சிருக்கு. பட், கொஞ்சம் அலர்ட்டா இருக்கணும். சம் டைம்ஸ் அளவு கலர்கூட மாறி வரும்.

மை இன்ஸ்பிரேஷன்ஸ்!

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 5

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு செலிப்ரிட்டீஸின் டிரெஸ்ஸிங் சென்ஸ் பிடிக்கும். அப்படி எனக்கு பிடிச்சது, நடிகை ரேவதியின் ஃபேஷன் பேஷன் (fashion passion). அவங்க காஸ்ட்யூமில் ஒரு சூப்பர்னஸ் இருக்கும். அதே மாதிரி, சமந்தாவின் டிரெஸ்ஸிங்கையும் ரசிச்சுப் பார்ப்பேன். 

சிம்ப்ளிசிட்டி தி கிரேட்!

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 5

எப்பவும் சிம்பிளா டிரெஸ் பண்றதைத்தான் விரும்புவேன். ஸ்க்ரீனில் எனக்கு அமைந்த கேரக்டர்களும் அப்படியே. சொல்லப்போனா, அந்த சிம்ளிசிட்டிதான் மக்கள் மனசுல ‘ஏய், நம்ம ஐஸ்வர்யா பொண்ணுப்பா’னு ஒரு எதார்த்த நெருக்கத்தைக் கொடுத்திருக்கு. அதிலும் ‘காக்கா முட்டை’ படத்தில் என் காஸ்ட்யூமை காட்டினப்போ, விழுந்து விழுந்து சிரிச்சேன். ஆனாலும், அதை விரும்பி ஏத்துக்கிட்டேன். அதுதான் அந்த கேரக்டரோட சக்சஸ். பெரிய பெரிய மீடியா நிகழ்ச்சிகளுக்குக்கூட, இயல்பாதான் போவேன். என் ஃப்ரெண்ட்ஸ்கூட, ‘என்னப்பா இவ்ளோ சிம்பிளாவா?’னு கேட்பாங்க. பட், அது எனக்குப் பிடிச்சிருக்கு. என்னோட காஸ்ட்யூம் டிசைனர் சத்யா, என் மனசுக்குப் பிடிச்ச, எனக்குப் பொருத்தமான ஆடைகளை டிசைன் செய்து தருவாங்க.

மிரர்தான் என்னோட ஜட்ஜ் !

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 5

ஷாப்பிங் போறதுனா, குஷி ஆகிடுவேன் நான். அதுக்காக, அரை நாள் முழுக்க கடையையே அலசி ஒரு டிரெஸ் எடுக்கிற டைப் இல்ல. கடைக்குப் போனதும், கண்ணுக் குப் பிடிச்ச ஒரு டிரெஸ்ஸை எடுப் பேன். ட்ரையல் பார்ப்பேன். அது என் உடம்புக்கும் ஃபிட் ஆச்சுன்னா... வாங் கிட்டு வந்துடுவேன். டிரெஸ்     பர்சேஸிங் கில் என் மனசும் மிரரும்தான் பெஸ்ட் ஜட்ஜஸ் எனக்கு. வேற யார் சொல்ற சஜஷன்ஸையும் கேட்க மாட்டேன்.

அட்ராசிட்டி வித் அலர்ட்னஸ்!

டிரெஸ்ஸிங் ரொம்ப சுவாரஸ்யமான விஷயம். அதே சமயத்தில் ரொம்ப கஷ்டமான விஷயமும்கூட. நல்லா இல்லைன்னா, யாரும் நம்மை மதிக்க மாட்டாங்க. அதிலும், ஒரு நடிகையா அதுக்கு எக்ஸ்ட்ராவா மெனக்கெட வேண்டியது அவசியம். ஃபேஷன் தளமான சினிமாவில் ஆஃப் ஸ்கிரீனிலும் காஸ்ட்யூமில் அட்ராசிட்டியா இருக்கறதோடு அலர்ட்டாவும் இருக்கணும்.

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 5

ஆகமொத்தம், ஒரு டிரெஸ் நம்மை அழகா காட்டுறதைவிட, நாமளும் அதை அழகா காட்டணும். அதாவது, அதை கான்ஃபிடன்டா, மெஜஸ்டிக்கா கேரி பண்ணிக்கணும். அப்போதான், நமக்கும் டிஸ்ரெஸுக்குமான கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும்!

இதுதான் நம்ம பாலிஸி!

அடுத்தவங்களுக்காக டிரெஸ் பண்றதைவிட, நான் எனக்காக டிரெஸ் பண்றதைத்தான் விரும்புவேன். அப்போதான் அதுல ஒரு அழகும் ரசனையும் வெளிப்படும். அது ஆட்டோமேட்டிக்கா மத்தவங்ககிட்டயும் வெல்கமிங் ரெஸ்பான்ஸை வாங்கிக் கொடுத்துடும். ஒருவேளை, ‘நாம இன்னிக்குப் போகப் போற இடத்துக்கு அவங்க, இவங்க எல்லாம் வருவாங்க... அதனால கிராண்ட் டிரெஸ்லதான் போகணும்’னு 30 ஆயிரம் ரூபாய் டிசைனர் சுடிதாரை போட்டுட்டுப் போனாலும், அதை நமக்குப் பிடிக்காமலோ, கம்ஃபர்ட்னஸ் இல்லாமலோ போட்டா... உண்மையில் அந்த இடத்தின் ஜோக்கர் நாமளா மாறிப்போய்டுவோம். அதனால, நான் போடுற டிரெஸ் முதல்ல எனக்கு எந்த காம்ப்ரமைஸும் இல்லாமப் பிடிக்கணும் என்பதுதான் பாஸ் நம்ம பாலிஸி.

பிடிக்கலைன்னா போட மாட்டேன்!

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 5

ஒரு டிரெஸை வாங்கிட்டு வந்ததுக்கு அப்புறம், ‘ஆஹா... இந்த த்ரீ ஃபோர்த் ஸ்லீவ் நல்லாயில்லையே’, ‘இந்த கலர் காம்பினே ஷன் ஃபீல் குட் ஆக இல்லையே’னு தோணுச் சுன்னா, எவ்வளவு விலை கொடுத்து வாங்கினதா இருந்தாலும், அதைப் போட மாட்டேன். வேற யாருக்காவது கொடுத்துடு வேன்.

வரலாறு முக்கியம் பாஸ்!

என்னோட ஃபேவரைட் டிரெஸ்களை, அது சைஸ் பத்தாம போனாலும், கலர் ஃபேடு ஆனாலும், ஒரு ஞாபகத்துக்காக பத்திரமா பீரோவுக்குள் வெச்சிக்குவேன். அப்படித்தான், சின்ன வயசுல எங்கப்பா எனக்கு வாங்கித் தந்த பட்டுப் பாவாடை ஒண்ணு இன்னும் என் வார்ட்ரோபில் பத்திரமா இருக்கு.

சு.சூர்யா கோமதி