அறிவிப்புகள்
Published:Updated:

பசித்த வயிறுகள்... பரிமாறும் உள்ளங்கள்!

பசித்த வயிறுகள்... பரிமாறும் உள்ளங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பசித்த வயிறுகள்... பரிமாறும் உள்ளங்கள்!

சேவை

பசித்த வயிறுகள்... பரிமாறும் உள்ளங்கள்!

‘‘மூன்று வருடங்களுக்கு முன், சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் உணவை வீணாக்குவதைத் தவிர்ப்பது பற்றி இளம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொண்டிருந்தபோது, ‘கல்யாண மண்டபங்கள்ல எவ்ளோ உணவு வேஸ்ட் ஆகுது... அதை எப்படித் தவிர்க்கிறது?’ என்று ஒரு சின்னப் பெண் கேட்ட கேள்விதான், ‘நோ ஃபுட் வேஸ்ட்’ அமைப்பின் துவக்கம்’’ என்கிறார், அமைப்பின் உறுப்பினர் பாலாஜி... விசேஷங்கள், கேன்டீன்கள், ஹோட்டல்கள் என்று உணவு வீணாகும் இடங்களில் இருந்து அவற்றைப் பெற்றுச் சென்று உணவுத் தேவையில் இருப்பவர்களுக்கு கொடுக்கும் ‘நோ ஃபுட் வேஸ்ட்’ அமைப்பின் செயற்பாட்டாளர்.

‘‘ ஸ்பபைஸ் (Spice) என்ற ஃபவுண்டேஷனின் ஓர் அங்கம்தான், ‘நோ ஃபுட் வேஸ்ட்’ அமைப்பு. இந்த ஃபவுண்ேஷனில், ஏழை மாணவர்களின் படிப்புக்கு நிதி திரட்டுவது, கழிப்பறைகள் கட்டித் தருவது, குப்பைகளை மறுசுழற்சி செய்வது என்று 9 அமைப்புகள் செயல்படுகின்றன. இதை நிறுவிய பத்மநாபனுடன் 12 இளைஞர்கள் கைகோத்து  ஒவ்வொரு சேவைக்குப் பொறுப்பேற்று பார்த்துக் கொள்கிறோம்.

பசித்த வயிறுகள்... பரிமாறும் உள்ளங்கள்!

‘நோ ஃபுட் வேஸ்ட்’ அமைப்பின் பணிகளை, கடந்த ஒன்றரை வருடங்களாக கோயம்புத்தூரில் வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். இப்போது சென்னை, ஹைதராபாத், டெல்லி போன்ற இடங்களிலும் தொடங்கியிருக்கிறோம் விசேஷங்களில் மீதமாகும் உணவுகளை அளிக்க, பசியுடன் இருப்பவர்களை கண்டடைய முடியாதவர்கள், எங்களைத் தொடர்புகொள்ளலாம். அந்த உணவுகளைப் பெற்று, அது உண்ணக்கூடிய வகையில் இருக்கிறதா என்று சோதித்துவிட்டு, அருகில் உள்ள இல்லங்கள், நடைபாதைவாசிகள் என்று அதை நாங்கள் விநியோகிப்போம்.

உதாரணமாக, ஒரு கல்யாண மண்டபத்தில் மீதமான உணவுகள் குறித்து எங்களுக்குத் தகவல் வந்தால், அவற்றை எங்கள் பாத்திரங்களில் பெற்றுக்கொண்டு, எங்கள் வண்டி மூலமே உணவு தேவைப்படுவோருக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள் விநியோகித்துவிடுவோம்’’ என்கிறார் பாலாஜி. இந்த அமைப்புக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும், பல விருதுகளும் கிடைத்திருக்கின்றதன.

பசித்த வயிறுகள்... பரிமாறும் உள்ளங்கள்!

‘‘கோயம்புத்தூர் எங்களுக்குப் பரிச்சயமான இடம். அதனால் எங்கெங்கு, யார் யாருக்கு உணவுகளை விநியோகிக்கலாம் என்பதை நன்கறிவோம். கடந்த ஒரு மாதமாகத்தான் சென்னையில் செயல்பாட்டை ஆரம்பித்திருக் கிறோம் என்பதால், இப்போதைக்கு கிண்டி ஏரியாவில் மட்டும் உணவு சப்ளை செய்துவருகிறோம். எல்லா ஏரியாக்களையும் கவர் செய்ய 6 வண்டிகளையும், அதற்கான ஸ்பான்ஸர்களையும் ஏற்பாடு செய்துவருகிறோம். விரைவில் சென்னை முழுக்க எங்கள் அமைப்பு செயல்படும்.

பசித்த வயிறுகள்... பரிமாறும் உள்ளங்கள்!

நாங்கள் உணவு எடுத்துச் செல்லும்போது, சில இடங்களில் மிஞ்சிவிடும்; சில இடங்களில் பற்றாக்குறையாக இருக்கும். சிறிதளவு மிஞ்சினால் அவற்றை இன்னும் சிலரைத் தேடி விநியோகித்துவிடலாம். ஆனால், பற்றாக்குறையாகிவிட்டால்தான் சங்கடமாகி விடும். அதனால், இல்லங்கள், காப்பகங்கள், நடைபாதைக் குடும்பங்கள் என்று உணவை எடுத்துச் செல்லவிருக்கும் இடத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை, வண்டியில் உள்ள உணவு ஈடு கட்டிவிடுமா என்று முடிந்தவரை பேலன்ஸ் செய்யப் பார்ப்போம்'' எனும் பாலாஜி,  இந்தச் சேவையில் மற்றவர்களும் பங்கேற்பாளராக செய்ய வேண்டியதைக் குறிப்பிட்டார்.

பசித்த வயிறுகள்... பரிமாறும் உள்ளங்கள்!

‘‘உங்கள் வசிப்பிட சுற்றுப்புறத்தில் உணவுத் தேவை இருப்பவர்களை எங்களின் கவனத்துக்குக் கொண்டுவர மற்றும் உங்கள் வீட்டு விசேஷங்களில் வீணாகும் உணவுகளை எங்கள் அமைப்பிடம் ஒப்படைக்க ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் `HUNGER MAPPING' என்ற எங்களின் `ஆப்'பின் மூலம் தெரியப்படுத்தலாம். 9087790877 என்ற தொலைபேசி எண், www.nofoodwaste.in என்ற வலைதள முகவரியிலும் எங்களை அணுகலாம். கிடைக்கும் உணவை பசித்தவர்களுக்கு கொண்டு சேர்ப்பத்தில் மட்டும் இல்லை எங்கள் வெற்றி... உணவு பற்றிய விழிப்பு உணர்வு எல்லோருக்கும் வேண்டும் என்பதிலும்தான்! கோயம்புத்தூரில் ஒரு பள்ளியில் தினமும் சுமார் 50 கிலோவாக வேஸ்ட்டாகிக் கொண்டு இருந்த உணவுகளை, நாங்கள் அங்கு ஒரு மாதம் அவேர்னஸ் கொடுத்து 9 கிலோவாக குறைத்தோம். சேவை செய்ய வேண்டுமென்ற ஆர்வம் இல்லாதவர்கள்கூட தேவையான உணவை மட்டும் தேர்ந்தெடுப்பதும்... தேர்ந்தெடுத்ததை  வீணாக்காமல் சாப்பிடு வதும்... `நோ ஃபூட் வேஸ்ட்'டின் முதல் படி!’’ என்கிறார் பாலாஜி துடிப்புடன்.

கிரேட் கோயிங்!

கே.அபிநயா, படங்கள்:ச.சந்திரமௌலி