
ஃபேஷன் டெக்னாலஜி மாணவர் களின் பிரத்யேகமான திறமைகளை வெளிக்கொணரும் விதத்தில் அவர்களுக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக ஃபேஷன் ஷோ நடத்தி வருகிறது ‘ஃபேஷன் ஸ்டூடன்ட் அசோஸியேஷன்’ என்னும் அமைப்பு. இந்த அமைப்பின் தலைவர் அருள்மொழி பேசும்போது,


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சென்னை மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த அமைப்பை உருவாக்கினோம். சென்னையைச் சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து 35 மாணவர்கள் இந்த ஃபேஷன் ஷோவுக்கான தங்களது பிரத்யேக ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்தனர்’’ என்றார்.

ஃபேஷன் ஷோவில்... வெஸ்டர்ன் உடைகளான மிடி, வெயிஸ்ட் கோட் போன்ற வெஸ்டர்ன் ஆடைகளுடன், வளையல், நெத்திச்சுட்டி போன்ற அணிகலன்களையும் சேர்த்து அணியும் `இண்வெஸ்டோ’ டிசைன் பார்க்க நேர்த்தியாக இருந்தது.

ஆப்பிரிக்க ஆதிவாசிகளின் உடைகளை, தற்காலத்துக்கு ஏற்றது போல மாடர்னாக வடிவமைத்த ’ஜிப்ஸி’ ஆடை பார்ப்பவர்களை ஈர்க்கும் விதமாக இருந்தது.

கேரள பாரம்பர்ய உடையை பறைசாற்றும் வகையில் அமைந்த ’ஸ்வர்ணா’ என்னும் டிசைன் அனைத்து வயதினரும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இது போன்ற பல ஆடை வகைகள் பேஷன் டெக் மாணவர்களாலேயே டிசைன் செய்யப்பட்டு இருந்தது நிகழ்ச்சியின் ஹைலைட். நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து டிசைனர்களுக்கும் விகடன் சார்பாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பா.அபிரக்ஷன், பி.நிர்மல்,படங்கள்:ச.பிரசாந்த்