
டியர் டீன் ஏஜ் கேர்ள்ஸ்! உங்க ஹேண்ட் பேக்ல என்ன இருக்குன்னு யாராச்சும் கேட்டா உடனே அதை திறந்து காட்டும் தைரியம் எத்தனை பேருக்கு இருக்கு? பஸ் டிக்கட்ல ஆரம்பிச்சு ஏ.டி.எம்-ல எடுத்த ஸ்டேட்மென்ட் வரைக்கும் குப்பையை சேர்த்து வெச்சிருக்கீங்களா?
இங்கே... ட்ராவல் டைம்ல என்னவெல்லாம் அவசியம் இருக்கணும்னு தெரிஞ்சிக்கலாம்.
• செல்போன் சார்ஜர் ரொம்ப முக்கியம். நீண்ட தூர பயணமாக இருந்தால் `பவர்பேங்க்' எடுத்துச் செல்லலாம். இயர் போன்கள் இருந்தால் ரயில்/பேருந்து பயணங்களில் பாடல் கேட்க உதவும். இதைத் தவிர, சிறிய பென்டிரைவ், கார்டு ரீடர் போன்ற உங்களுக்கு தேவையான எலெக்ட்ரிக் அயிட்டம்களையும் வைத்துக்கொள்ளுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• சேஃப்டி பின்கள் அவசரத்துக்கு வைத்திருப்பது நல்லது. அதேபோல் பெப்பர் ஸ்ப்ரே, சிறிய கட்டர்கள், லைட்டர், பேனா, மருந்துப் பொருட்கள் வைத்திருப் பதும் நல்லது.
• போன் நம்பர், அட்ரஸ் கொண்ட சிறிய டைரியை உள்ளே வைத்துக் கொண்டால், ஹேண்ட் பேக் தொலைந்துப் போனால் திரும்பக் கிடைக்க உதவும்.

• என்னதான் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டுகளில் பணம் இருந்தாலும் அவசரத்துக்கு தேவையான அளவுக்குப் பணத்தையும் சில்லறையையும் வைத்துக் கொள்ளவும்.
• ஆரோக்கிய மான ஸ்நாக்ஸ் வகைகளை கொஞ்சமாக வைத்துக்கொண்டால் அவசரத்துக்குப் பசி ஆற்றிக் கொள்ளலாம். இதைவிட தண்ணீர் வைத்துக் கொள்வது ரொம்ப முக்கியம்.
• எது இருக்கிறதோ இல்லையோ... ஃபேஸ் வாஷ், பர்ஃப்யூம் பாட்டில், சீப்பு, ஹேர் கிளிப்ஸ் போன்ற நம்மை புத்துணர்வாக்கும் சில பல சமாசாரங்கள் நமக்கு மட்டுமல்லாமல், நம்மை எதிர்கொள்பவருக்கும் ஃப்ரஷ் ஃபீலை கடத்தும்.
ச.ஆனந்தப்பிரியா, படங்கள்:சூ.நந்தினி மாடல்கள்: சம்யுக்தா, நேத்ரா