மங்குஸ்தான் பழம், குளிர்ச்சியைத் தந்து உடல் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், மாதவிடாயின்போது ஏற்படக்கூடிய அதிக ரத்தப்போக்கு, குடல், இரைப்பையில் வரக்கூடிய புண் மற்றும் வயிற்றுப்புண் (அல்சர்) போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது. வெள்ளைப்படுதல், வெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மங்குஸ்தான் மரப்பட்டையை நீர்விட்டுக் காய்ச்சி ஆறவைத்து, பொறுக்கும் சூட்டில் கழுவி வர... நல்ல பலன் கிடைக்கும்.

மூலநோயின் உச்சகட்டமாக மலத்துடன் சீழும், ரத்தமும், கொழுப்பும் வெளியேறி தாங்கமுடியாத எரிச்சலை உண்டாக்கும் வேளையில்கூட கைகொடுக்கவல்லது, மங்குஸ்தான். இந்தப் பழத்தின் சதையை தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர, மூலத்தில் இருந்து முழுமையான நிவாரணம் பெறலாம். மங்குஸ்தான் பழத்தின் தோலைக் காயவைத்து தூளாக்கி, ரத்தக்கசிவுடன் மலம் போகும்போது சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

மங்குஸ்தான் பழத்தை வேகவைத்து, பிறகு பிழிந்து சாறு எடுத்து, சட்டியில் ஊற்றி கொதிக்கவைத்து, கொஞ்சம் நீர் வற்றியதும் சர்க்கரை கலந்து பாகுபோல செய்து வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட வயிற்றுப்போக்கு சரியாகும். இதேபோல், மங்குஸ்தான் பழச்சதையுடன் சிறிது கொத்தமல்லி (தனியா), பெருஞ்சீரகம், கடுக்காய் போன்றவற்றின் பொடியைக் கலந்து, சர்க்கரை சேர்த்துக் கொடுத்துவந்தால், குழந்தைகளை சிரமப்படுத்தும் நாள்பட்ட சீதக்கழிச்சல் சரியாகும்.

எம்.மரிய பெல்சின், படங்கள்:எல்.ராஜேந்திரன்