Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா!

அனுஷா... ஆதிரா... இனியா!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷா... ஆதிரா... இனியா!

டிஜிட்டல் கச்சேரி

அனுஷா... ஆதிரா... இனியா!

டிஜிட்டல் கச்சேரி

Published:Updated:
அனுஷா... ஆதிரா... இனியா!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷா... ஆதிரா... இனியா!
அனுஷா... ஆதிரா... இனியா!

ஸ்வீட் சேட்டை கேர்ள்ஸ்... அனுஷா, ஆதிரா, இனியா மூவரும் குரூப் ஸ்டடி என்று இன்று டென்ட் போட்டிருப்பது இனியா வீட்டில்.

‘‘இந்த சம்மர் செம ஹாட்ல அனு..? சீஸன் முடியுறதுக்குள்ள ‘வாட்டக் கருவாடு’ ஆயிடுவோம்போல...’’

‘‘ஆமா ஆதிரா... உலகத்துலயே அதிகமா வெயில் அடிக்கிற நாடுகள் பட்டியல்ல இந்தியா டாப் லிஸ்ட்ல இருக்காம். ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரானு நிறைய இடங்கள்ல தண்ணீர் பஞ்சம் தலைவிரிச்சு ஆடுது. அவ்ளோ ஏன்... குளுகுளுனு இருக்கிற பெங்களுரூவுலகூட இந்த வருஷம் சன் செம ஹாட் கேம் விளையாடுதுனு அங்கயிருக்கிற சொந்தக்காரங்க சொல்றாங்கப்பா. இந்த வெயிலுக்கு மீம்ஸ் மழைதான் என்டர்டெயின்மென்ட். இனியா... நீ ஏதோ செடி, மரம்னு சொல்லிட்டு இருந்தியே...’’

‘‘அது ஒரு குட் நியூஸ். மத்தியப் பிரதேசத்துலகூட சம்மர் செம ஹாட்டாம். அந்த ஸ்டேட்ல கல்யாணம்னா, பொதுவா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கல்யாணப் பொண்ணுக்கு பிடிச்ச கிஃப்ட் கொடுக்கிறது வழக்கமாம். பிரியங்கானு ஒரு பொண்ணு, தன்னோட கல்யாணத்துக்கு மாப்பிள்ளை வீட்டார்கிட்ட பட்டுப்புடவையோ, நகையோ பரிசா கேட்காம அதையெல்லாம்விட சூப்பரான ஒரு விஷயத்தைக் கேட்டிருக்காங்க.’’

‘‘அப்படி என்ன பரிசு?’’

‘‘நிச்சயமா உன்னால கெஸ் பண்ணவே முடியாது அனு. 20 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைக்கணும்னு திருமணப் பரிசா கேட்டிருக்காங்க பிரியங்கா. அவங்க ஆசையும் நிறைவேறிடுச்சு!’’

‘‘அந்தப் பொண்ணு கிரேட்ல... நான்கூட என் கல்யாணத்துக்கு...’’

‘‘ஸ்ஸப்பா... இப்பவே கண்ணைக் கட்டுதே... ஆதிரா நிறுத்திக்கோ!’’

‘‘ஏய், எங்கம்மா நமக்கெல்லாம் ஏதோ கொண்டுவந்திருக்காங்க பாருங்க...’’

‘‘மூணு பேரும் சம்மர் பத்தி ரொம்ப நொந்துபோய் பேசிட்டு இருந்தீங்கள்ல... அதான் கொஞ்சம் கூல் பண்ண ‘சக்க பிரதமன்’ கொண்டு வந்திருக்கேன்.’’

அனுஷா... ஆதிரா... இனியா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘வாவ்.. வெரி டேஸ்ட்டி! அதுவும் இந்த பால்கனி பிரம்பு நாற்காலியில உட்கார்ந்துட்டு இதைச் சாப்பிடுற சுகம் இருக்கே... செம! ஆன்ட்டி, நீங்க க்யூஆர் கோடு பத்தி ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தீங்களே... இன்னிக்கு அது என்னது தெரிஞ்சுக்கலாம் வாங்க!’’

‘‘ஓ... பிரதமனுக்கு தேங்க்ஸ் கிவிங்கா?! ஹப்பாடா... இன்னிக்காச்சும் அது என்னனு சொல்லுங்க.’’

‘‘ஆன்ட்டி, ‘நாம படிக்கிற மேகஸின்ஸ்ல கட்டம் கட்டமா இருக்குதே, அது என்ன?’னு கேட்டீங்கள்ல... அதுக்குப் பேரு க்யூஆர் கோடு (QR CODE). நம்ம  மொபைல்ல க்யூஆர் கோடு ஆப்ஸை டவுன்லோடு பண்ணி வெச்சுக்கிட்டா, இந்த மாதிரி புக்ஸ்ல வர்ற க்யூஆர் கோடுக்கு முன்னால் அந்த ஆப்ஸை ஓபன் பண்ணி காட்டினா, தானாவே போன் அதை ஸ்கேன் செஞ்சுடும். பிறகு, அந்தக் கோடுக்குள்ள இருக்கிற வீடியோ, செய்திகளின் இணையதள பக்க முகவரியை அது நமக்குக் காட்டும். அதை க்ளிக் பண்ணினா, அந்த க்யூஆர் கோடுக்குள்ள அடங்கியிருக்கிற செய்தியை நாம தெரிஞ்சுக்கலாம்.’’

‘‘புரியுற மாதிரி சொன்னம்மா ஆதிரா. சரி... அந்த ஆப்ஸை எப்படி டவுன்லோடு பண்றது?’’

‘‘ஆண்ட்ராய்டு மொபைல்ஸ்ல ஆப்ஸ் டவுன்லோடு பண்ண ‘ப்ளே ஸ்டோர்’ இருக்கும். ஐஃபோனா இருந்தா ‘ஆப் ஸ்டோர்’னு ஒரு சிஸ்டம் இருக்கும். முதல்ல போன்ல நெட்வொர்க் கனெக்ட் செய்துட்டு, அப்புறம் ப்ளே ஸ்டோருக்குள்ள போய் ‘QR Code’ னு டைப் பண்ணி க்யூஆர் கோடு ஆப்ஸை இன்ஸ்டால் பண்ணினா, அந்த ஆப்ஸ் நம்ம மொபைல்ல டவுன்லோடு ஆகிடும். அப்புறம் என்ன? இந்த ஆப்ஸை வெச்சு, புக்ல இருக்கிற க்யூஆர் கோடை ஸ்கேன் பண்ணி, ஆன்லைன்ல நியூஸ் படிக்க வேண்டியதுதான்.’’

‘‘டெக்னாலஜி எவ்ளோ ஸ்மார்ட் ஆயிடுச்சுல்ல?! சரி நீங்க படிங்க, நான் கிச்சனுக்குப் போறேன்... சமையல் பாதியில நிக்குது.’’

‘‘இனியா, நாம படிக்கிறோம்னு இன்னுமா உங்கம்மா நம்புறாங்க? குரூப் ஸ்டடினு சொல்லிட்டு இங்க நாம ‘தெறி’ பார்த்தது மட்டும் எங்க வீட்டுல தெரிஞ்சது... அவ்வ்வ்!’’

‘‘ஆதிரா... ஓவரா பம்மாதே. ‘நான் எப்படிப்பட்ட ஃப்ரெண்ட்’னு கேட்டு நீ போட்ட போஸ்ட்டை உங்க அம்மா இந்நேரம் பார்த்திருப்பாங்க!’’

‘‘ஆமா... இந்த சமந்தா அந்தப் படத்துல ‘நான் எப்படிப்பட்ட வொய்ஃப்?’னு கேட்டாலும் கேட்டாங்க... ஃபேஸ்புக்ல எல்லோரும் ‘நான் எப்படிப்பட்ட ஃப்ரெண்ட்/தங்கச்சி/அக்கா/அம்மா..?’னு வரிசையா கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

‘‘இந்தப் படத்துல விஜயகாந்த்தோட ‘சத்ரியன்’ பட ஃப்ளேவர் ஓவரா தூக்குதுல்ல..? ஏதோ விஜய்க்காக பார்க்கலாம்.’’

‘‘குட்டிப் பொண்ணு நைனிகாவுக்காகவும்!’’

‘‘குட்டிப்பொண்ணுனு சொன்னதும் ஞாபகம் வருது. வாட்ஸ்அப்ல ஒரு வீடியோ வந்தது. அதைப் பத்தி சொல்றதுக்கு முன்னாடி, நான் ஒரு நம்பரை எழுதுறேன். அதை இலக்க ஸ்தானத்தோட சொல்லு பார்க்கலாம்.

876,946,351,798,345,601,801.’’

‘‘அனு... மேத்ஸ்னாலே நான் அழுதுடுவேன்னு தெரியாதா உனக்கு. அதுவும் இந்த நம்பரை..? ஆளைவிடும்மா!’’

அனுஷா... ஆதிரா... இனியா!

‘‘லிட்டில் பிக் ஷாட்ஸ்னு ஒரு வெளிநாட்டு சேனல் ஷோவில் கலந்துகிட்ட 5 வயசு குட்டிப் பையன் லூயிஸ், இது என்ன நம்பர்னு டக்குனு சொல்லிட்டான்ப்பா. இன்னும் பல மேத்ஸ் மேஜிக்ஸை அவன் அந்த நிகழ்ச்சியில் செய்ய... அந்த புரோகிராம் மொத்தம் 54 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்காம்.’’

‘‘இந்தக் காலத்துப் பிள்ளைங்க செம ஷார்ப்.’’

`சரி...மேத்ஸ் புலியா ஆக முடியாட்டாலும், நம்ம பங்குக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கிற மாதிரி ஏதாச்சும் செய்வோமா?’’

‘‘எங்க வீட்டுல இடம் இல்ல, ஹவுஸ் ஓனர் திட்டுவாங்க... போன்ற காரணங்களையெல்லாம் விட்டுட்டு, அட்லீஸ்ட் வீட்டுக்கொரு தொட்டிச் செடியாவது வளர்ப்போம். மாடித்தோட்டம் போட்ட ஒருத்தர், எட்டு வருஷமா தன் வீட்டுக்கான காய்கறிகளை அதில்தான் விளைவிச்சுக்கிறாராம், கடையில வாங்கினதே இல்லையாம். அதைப் பார்த்துட்டு நான் ரொம்ப இன்ஸ்பயர் ஆகிட்டேன். அனு... நீ என்ன பார்த்துட்டு இருக்கிற மொபைல்ல?’’

‘‘ம்ம்ம்... ஃப்ரென்ட் கேமரா பார்த்து என் ஹேரை சரிசெஞ்சுட்டு இருக்கேன்...’’

‘‘ஏய்... அப்போ அனு செல்ஃபி எடுக்கப் போறானு அர்த்தம். வா நாமளும் ஜாயின் பண்ணிக்கலாம். சீஸ்... க்ளிக்!’’

‘‘நானும் கிச்சன்ல சமையலையே முடிச்சுட்டேன். நீங்க குரூப் ஸ்டடியை ஆரம்பிச்ச மாதிரியே தெரியலையே..!’’

த்ரீ கேர்ள்ஸ் ட்யூன்டு டு சைலன்ட் மோடு!

- கச்சேரி களைகட்டும்...

அனுஷா... ஆதிரா... இனியா!
அனுஷா... ஆதிரா... இனியா!
அனுஷா... ஆதிரா... இனியா!
அனுஷா... ஆதிரா... இனியா!
அனுஷா... ஆதிரா... இனியா!

அசத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணைய தள முகவரியை  தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism