Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

Published:Updated:
நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

`கல்யாணத்துக்கு அத்தை கட்டிட்டு வந்த மாதிரி, ரோஜாப்பூ கலர்ல ஒரு புடவை எடுக்கணும்னு ரொம்ப நாளா ஆசை’, `எனக்கு வைர மூக்குத்தி ஒண்ணு வாங்கிப் போட்டுக்கணும்னு ஆசை’ - இப்படி ஒவ்வொருவருக்கும் செல்போன், லேப்டாப், கார், வீடு என்று ஏகப்பட்ட ஆசைகள் இருக்கும்.

நமக்குள்ளே!

இந்த மாதிரியான நம்முடைய கனவுகள், ஆசைகள் நிறைவேறும் நாள் வரும்போது, கண்ணை கட்டிக்கொண்டு கேட்கும் காசை கொடுத்து வாங்கிடுவோமா என்ன? ஒரு டி.வி வாங்க விரும்பினால்கூட, அதைத் தயாரிக்கும் கம்பெனியின் நம்பகத்தன்மை துவங்கி, குறிப்பிட்ட டி.வி-யில் இருக்கக்கூடிய அம்சங்கள், ஆயுள், மதிப்பு, விற்பனை செய்யும் நிறுவனம், ஆஃப்டர் சேல்ஸ் சர்வீஸ்... என்று சகல தகவல்களையும் ஒன்று

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே!

திரட்டி, ஒன்றுக்கு பலபேரிடம் கலந்துபேசி, தெளிவுபிறந்த பிறகுதான் முடிவு செய்கிறோம்.

சில ஆயிரங்கள் மதிப்பு கொண்ட டி.வி-யைத் தேர்ந்தெடுக்கவே இத்தனை பிரயத்தனப்படும் நாம், நம்முடைய மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் புதிய ஆட்சியைத் தேர்ந்தெடுக்க எந்த அளவுக்கு பிரயத்தனப்பட வேண்டும்?

இதோ நெருங்கிவிட்டது மே 16. இந்தத் தேர்தலில் கட்டாயம் வாக்களிப்பதோடு, விழிப்பு உணர்வோடும் வாக்களிக்க முடிவெடுத்துவிட்டீர்கள்தானே தோழிகளே!

“அட போங்கம்மா... அரிசி, பருப்புல இருந்து கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலைனு யார் வந்தாலும் நம்ம தலையில மிளகாய் அரைச்சு காசு சம்பாதிக்கிற வேலையைத்தான் பாப்பாங்க” என்று எங்கெங்கும் விரக்திக் குரல்கள் எதிரொலிப்பது உண்மைதான். அதற்காக, நம்முடைய உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுத்துவிட முடியாதுதானே!

அதேபோல, போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி, நேர்மை, கொடுக்கும் வாக்குறுதி என்று சகலமானவற்றைப் பற்றியும் முன்கூட்டியே தெரிந்துகொண்டு வாக்களித்தால், எதிர்காலத்தில் விரக்தி குரல்களுக்கு வாய்ப்பிருக்காதுதானே!

தெளிவாக முடிவெடுப்போம்.... அதை நம் விரலால் பதிய வைப்போம்!

உரிமையுடன்,

நமக்குள்ளே!

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism