Published:Updated:

பிரேமா.... வண்ணங்களற்றோர் உலகுக்கு ஒரு வானவில் !

பிரேமா.... வண்ணங்களற்றோர் உலகுக்கு ஒரு வானவில் !

பிரேமா.... வண்ணங்களற்றோர் உலகுக்கு ஒரு வானவில் !

''பார்வையற்றவங்களோட உலகத்துல சின்ன ஒளியா, அவங்க முன்னேற்றத்துக்கான எழுத்தா இருக்கற என்னோட இந்த முயற்சி, ஈடே இல்லாத ஒரு ஆத்ம திருப்தியை எனக்குத் தருது!''

- பக்குவமான வார்த்தைகளில் ஆரம்பிக்கிறார்... மதுரை, செந்தமிழ்க் கல்லூரி மாணவி பிரேமா. இவர், பார்வையற்ற மாணவர்கள் பலருக்கும் பரீட்சை எழுதும் 'ஸ்க்ரைப்’ (sநீக்ஷீவீதீமீ) என்ற பணியை ஒரு சேவையாக செய்து வருகிறார்... நாளைய பாரதத்தின் நம்பிக்கை பிரதிநிதியாக!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ஸ்கூல்ல படிக்கறப்ப, 'கண் பார்வை இல்லாதவங்களும் ஸ்கூல்ல படிக்கறாங்க... அவங்களெல்லாம் எப்படி பரீட்சை எழுதுவாங்கனு?’னு மனசுக்குள்ள கேள்வி குடையும். அப்போதான் ஒரு அக்கா சொன்னாங்க, 'அவங்க படிச்சத எல்லாம் சொல்லச் சொல்ல, அவங்களுக்காக வேற யாராச்சும் பரீட்சை எழுதுவாங்க’னு. எனக்கு ஒரே ஆச்சர்யம்!

'நாமளும் அப்படி யாராச்சும் ஒரு மாற்றுத் திறனாளிக்கு பரீட்சை எழுதணும்’னு மனசு ரொம்பத் தவிச்சது. ஆனா, அப்போ ஸ்கூல் படிச்சிட்டிருந்த எனக்கு, அதுக்கான தளம் அமையல...'' எனும் பிரேமாவுக்கு, அந்த எண்ணம் கல்லூரி மாணவியான பின் கை கூடியிருக்கிறது.

##~##

''பி.ஏ., தமிழ் சேர்ந்தப்போ, எங்க கல்லூரியிலயே பார்வையில்லாத மாணவர்களும் படிச்சாங்க. நார்மலான பசங்களே 'காலேஜ் போயிட்டு வர்றதுக்குள்ள... அப்பப்பா’னு சலிச்சுக்கும்போது, இருட்டாவே இருக்கற தங்களோட உலகத்துக்கு, மலையளவு முயற்சி பூட்டி, வகுப்பறை வரை வந்துட்டுப் போற அவங்களோட நம்பிக்கை, என்னை ஆச்சர்யப்படுத்துச்சு. அன்பும், ஆர்வமும் பெருக்கெடுக்க, அவங்களோட பழகினேன். அவங்க உலகத்தை உள்வாங்கிக்கிட்ட பிறகு, 'உங்களுக்காக நான் பரீட்சை எழுதட்டுமா..?’னு கேட்டேன். சந்தோஷம் அவங்களுக்கு. எங்க கல்லூரியில என்னையும் அந்த மாணவர்களையும் அக்கறையா  ஒருங்கிணைச்சாங்க. அவங்க ஒலியா சொன்னதை, நான் எழுத்தா பதிய... நாங்க நிறைவா பரீட்சை எழுதினோம்! அதுலயிருந்துதான் தொடங்கினது என்னோட இந்த முயற்சி...'' என்பவரின் உதவி வட்டம், கல்லூரியைத் தாண்டியும் விரிந்திருக்கிறது.

'

பிரேமா.... வண்ணங்களற்றோர் உலகுக்கு ஒரு வானவில் !

'பார்வையற்றோர் பள்ளிகள், மத்த கல்லூரியில படிக்கற பார்வையற்ற மாணவர்களுக்கும் பரீட்சை எழுத வாய்ப்பு கேட்டு, சம்பந்தப்பட்டவங்களுக்கு தகவல் கொடுத்தேன். நிறைய பேர் அணுகினாங்க. பலருக்கும் தேர்வு எழுதினேன். 'நல்லபடியா எழுதிட்டோம்’னு அதோட நின்னுட மாட்டேன். அவங்களுக்கு என்னிக்கு ரிசல்ட்னு கேட்டு, அவங்களுக்கு முன்னால நான்தான் ரிசல்ட் பார்க்கப் போவேன். பாஸ் பண்ணின அவங்களோட சந்தோஷத்தை நானும் பகிர்ந்துப்பேன். நான் பரீட்சை எழுதின மாணவர் சரவணபாண்டியன், காமராஜர் பல்கலைக்கழக அளவில முதல் மதிப்பெண் வாங்கினப்போ, நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல.

பிரேமா.... வண்ணங்களற்றோர் உலகுக்கு ஒரு வானவில் !

ஒருவேளை ரிசல்ட் பார்க்க நான் போக முடியாத சந்தர்ப்பங்கள்ல, அந்த மாணவர்களே போன் பண்ணி நன்றி சொல்றதோட, 'அடுத்த பரீட்சையும் நீங்க எழுதித் தரணும்’னு சொல்லுவாங்க. கண்டிப்பா போயிடுவேன். பரீட்சை, செமினார்னு முடியாத சமயங்கள்ல கண்டிப்பா நானே வேற யாரையாச்சும் ஏற்பாடு செஞ்சும் கொடுத்துடுவேன்!'' எனும் பிரேமா, பரீட்சைக்கு முந்தைய தயாரிப்புகளிலும் அந்த மாணவர்களுக்கு உதவுவது, சிறப்பு. பாடப் புத்தகத்தில் உள்ள கருத்துக்களை கேசட்டுகளில் ரெக்கார்ட் செய்து தருவது, சந்தேகங்களை நேரில் களைவது என பல வகைகளிலும் உதவுவதோடு, மாதந்தோறும் தன் தோழிகளுடன் பார்வையற்றோர் பள்ளிக்குச் சென்று நடனம், பாட்டு, ஜோக்குகள் என்று அவர்களை மகிழ வைக்கிறார். இப்போது எம்.ஏ. படிக்கும் பிரேமா... அந்த மாணவர்களின் வண்ணங்களற்ற உலகத்தில் உள்ள வியப்புகளை பகிர்ந்து கொண்டார் நம்மிடம்...

''நாம எல்லாம் படிக்கும்போது சில பக்கங்களை 'ஜஸ்ட் லைக் தட்’ பார்த்துட்டு புரட்டிடுவோம். ஆனா, அவங்கள்லாம் கேட்டுக் கேட்டு படிக்கறதால எந்த ஒரு விஷயத்தையும் ஸ்கிப் பண்ணாம, மூளையில ஏத்திக்குவாங்க. தேர்வு எழுதறப்ப, கொஸ்டீன் பேப்பர்ல இருக்கற கேள்விகளுக்கு அவங்க படிச்சத எல்லாம் அதே ஆர்டர்ல ஒண்ணு விடாம சொல்லுவாங்க. இந்த மூணு வருஷ அனுபவத்துல இதுவரை யாரும் எந்தக் கேள்விக்கும் 'பதில் தெரியலையே’னு முழிச்சதில்ல. நமக்குத்தான் எழுத நேரம் போதாது...'' என்று சிலிர்க்கும் பிரேமா, நம் அனைவருக்கும் ஒரு வைக்கும் வேண்டுகோள் -

''இன்னிக்கும் பார்வையற்றோர் பள்ளிகள் பலதுலயும் அங்க இருக்கற மாணவர்களுக்கு பரீட்சை எழுதி தர ஆள் இல்லாம டீச்சர்களும், அரசு அதிகாரிகளும் எழுதிட்டு இருக்காங்க. நம்ம மாதிரி மாணவர்கள் அவங்களுக்கு கண்டிப்பா உதவலாம். அதுல அதிக சிரமங்கள் ஒண்ணும் இல்ல. பக்கத்துல இருக்கற ஒரு 'ப்ளைண்ட் ஸ்கூலு’க்கு போய், நீங்க 'ஸ்க்ரைப்’ ஆக ஆர்வமா இருக்கறதைச் சொல்லுங்க. தேவைப்படுறப்ப அவங்களே கூப்பிடுவாங்க. உங்களோட அந்த உதவி உங்களுக்கு தரப்போற திருப்தி, உங்களை இன்னும் தரமாக்கும்!''

- மோ.கிஷோர் குமார்
படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்