Published:Updated:

``சுதந்திரம் ஊக்கமும் சாதிக்க வைக்கும்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``சுதந்திரம் ஊக்கமும் சாதிக்க வைக்கும்!’’
``சுதந்திரம் ஊக்கமும் சாதிக்க வைக்கும்!’’

- ஐ.ஏ.எஸ் தேர்வில் அசத்திய ஷரண்யாசாதனை

பிரீமியம் ஸ்டோரி
``சுதந்திரம் ஊக்கமும் சாதிக்க வைக்கும்!’’

மீபத்தில் வெளியான  சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில், தென்னிந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்... சென்னை, கிழக்குத் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஷரண்யா அறி. இவர், இந்திய அளவில் 7-ம் இடம் பிடித்துள்ளார். ஷரண்யாவைச் சந்தித்தோம்...

“அப்பா அறிவழகன் விமானப்படை அதிகாரி. அம்மா சத்யபிரியா கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சர். படிப்பை முடிச்சுட்டு வெளிநாட்டுல செட்டில் ஆகணும்தான் ஆசைப்பட்டேன். `மக்களுக்கு உதவும் வகையில நீ ஐ.ஏ.எஸ் ஆகணும்’னு அப்பாவும் அம்மாவும் சொல்லிட்டே இருந்தாங்க. எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் ராஜேந்திர சோழன், மணிவண்ணன் ரெண்டுபேரும் கர்நாடகா மாநிலத்துல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். அவங்க, ‘ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சமுதாயத்துல எப்படி மாற்றத்தைக் கொண்டுவர முடியும்’ என்பது பற்றி நிறைய சொன்னாங்க. அதுக்கப்புறம்தான், நான் ஐ.ஏ.எஸ் படிக்கலாம்னு முடிவெடுத்தேன்.

2011-ம் வருஷம் காலேஜ் முடிச்சுட்டு, உடனே ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராக ஆரம்பிச்சேன். 2012-ம் வருஷம் தேர்வு எழுதினேன். அப்போ, மெயின் எக்ஸாம்வரை போனேன். அடுத்து ரெண்டு வருஷம் தொடர்ச்சியாக முதல்நிலை தேர்வுவரை மட்டுமே போக முடிஞ்சது.
போன வருஷம், நாலாவது முறையா தேர்வெழுதிதான் தேர்வாயிருக்கேன்” - படபடவெனப் பேசிய ஷரண்யா தொடர்ந்தார்...

``சுதந்திரம் ஊக்கமும் சாதிக்க வைக்கும்!’’

“முதல்முறை வெற்றி வாய்ப்பு தவறிப் போனப்போ அடுத்தமுறை செலக்ட் ஆகிடலாம்னு நினைச்சேன். அடுத்த முறையும் வெற்றி கிடைக்காம போனப்போ, கொஞ்சம் துவண்டுட்டேன். அப்போல்லாம், பேரன்ட்ஸ் ஊக்கம் கொடுத்தாங்க. என் தாத்தா, ‘தமிழ்நாட்டுலயே முதல் மாணவியா நீ செலக்ட் ஆகிடுவே’னு சொல்வார். அது உண்மையாகிடுச்சு. இதுக்கு இடையில் எனக்கு கல்யாணமும் நிச்சயமாகிடுச்சு. அடுத்த மாசம் கல்யாணம். அவர் சிவில் சர்வீஸ் துறையில வேலை செய்றார்’’ என்ற ஷரண்யா நேர்முகத் தேர்வு அனுபவங்களைச் சொன்னார்...

“நேர்முகத் தேர்வுல ‘சிக்கல்கள் நிறைந்த சிவில் சர்வீஸ் பணியில் ஒரு பெண்ணா இந்த சமூகத்துல சுதந்திரமா உங்களால பணியாற்ற முடியுமா?’னு கேள்வி கேட்டாங்க. ‘இதுவரைக்கும் என் பெற்றோர் எனக்கு சுதந்திரமும், ஊக்கமும் கொடுத்தாங்க. நான் திருமணம்
செய்துகொள்ளவிருப்பவர் குடும்பத்திலும் அவை கிடைக்கும். அதனால, நான் அஞ்சாமல் பணியாற்றுவேன்’னு சொன்னேன்’’ என்ற ஷரண்யா ஜூனியர்களுக்கு கொடுத்த டிப்ஸ்...

“ஐ.ஏ.எஸ் எக்ஸாமுக்கு தயார் ஆகுறவங்க, எப்போதும் நம்மைச் சுற்றி நடக்கிற விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சுக் கணும். தினமும் நியூஸ் பேப்பர் படிக்கணும். ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்ப இருந்தே தேர்வுக்கு தயாராகுறது நல்லது.

படிக்கிற காலகட்டத்துல, கண் முன்னாடி நடக்குற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில ஈடுபடணும். இந்த முயற்சி, நேர்முகத்தேர்வுல பெரிய அளவுல கைகொடுக்கும்!”

 கு.ஆனந்தராஜ், படங்கள்:   எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு