Published:Updated:

“துணிந்து இறங்கினோம்... தூள் கிளப்பினோம்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“துணிந்து இறங்கினோம்... தூள் கிளப்பினோம்!’’
“துணிந்து இறங்கினோம்... தூள் கிளப்பினோம்!’’

சக்சஸ் ஸ்டோரி

பிரீமியம் ஸ்டோரி
“துணிந்து இறங்கினோம்... தூள் கிளப்பினோம்!’’

`படிச்சும் வேலை கிடைக்கல... படிப்புக்கேற்ற சம்பளம் கிடைக்கல’ என புலம்பும் இளைஞர்களுக்கு மத்தியில் பல போராட்டங்களை எதிர்கொண்டு ஜூட் அண்ட் காட்டன் பேக் தொழிலில் சாதித் துள்ளனர், `ஜுகாலிக்’ நிறுவன உரிமையாளர்களான, 27 வயது தோழிகள்... காயத்ரி - ஷோபனா காமாட்சி.

``படிக்கும்போதே எதிர் காலத்தில் நான் இந்தப் பணியில்தான் இருப்பேன் என திட்டமிட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்கள் நூத்துக்கு பத்து பேர்தான் இருப்பாங்க. மத்்தவங்க எல்லாருக்கும் ஏதாவது ஒரு சூழலில் ஒரு ஸ்பார்க் தோன்றும். அதுக்கு அப்புறம் ஓடி ஜெயிக்க ஆரம்பிப்பாங்க... நாங்களும் இந்த செகண்ட் கேட்டகிரிதான்!'' என்று தொடங்கிய ஷோபனா, ``காயத்ரியும் நானும் பி.காம் பட்டதாரிகள். சென்னை எத்திராஜ் கல்லூரியில் படிச் சோம். கல்லூரி இறுதி ஆண்டு முடிக்கும்போதுதான் `அடுத்து என்ன பண்ணப்போறோம்?’னு என் மைண்ட்ல ஓடுச்சு. எந்த வேலைக்குப் போனாலும் பணம் சம்பாதிப்பதைத் தாண்டி என்னை நான் நிரூபிக்கணும் என்பது என் லட்சியமா இருந்துச்சு. கல்லூரியில் என் பெஸ்ட் ஃப்ரெண்ட்... இதோ, இந்த காயத்ரிதான்! நாங்க இரண்டு பேரும் ஒருநாள் எக்ஸிபிஷன் போனப்போ அழகழகான ஜூட் பேக்குகளை பார்த்தோம். உடனே இம்ப்ரஸ் ஆகி ஒரு பேக் வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். அந்த பேக் என் அம்மாவில் இருந்து என் தங்கச்சி வரை எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. அதைப் பத்தி யோசிச்சேன்.  `ஜூட் பேக் எல்லா வயதினரையும் இம்ப்ரஸ் பண்ணுது. நாம அதை ஒரு பிசினஸா ஆரம்பிச்சா என்ன?’னு காயத்ரிகிட்ட கேட்டதும்... `நல்லா ஐடியாதான்... செயல்படுத்துவோம்’னு சொன்னா!'' என்று கூறிய ஷோபனாவிடம், ``ஹேய், நம்மள பற்றி போதும்ப்பா... நம்ம பிசினஸ் பற்றி பேசுவோம்’ என்ற காயத்ரி, தொடர்ந்தார்...

``பிசினஸ் ஆரம்பிக்கணும்னா, அதுபற்றி எல்லாத் தையும் தெரிந்து முதலீடு செய்தால்தான் ஜெயிக்க முடியும். மேலும் அப்போதான் நாங்க படிப்பை முடிச்சோம். வீட்டில்தான் பணம் கேட்கணும். பிசினஸ் பண்ணப்போறோம்னு சொன்னா, வீட்டில் ஆயிரம் கேள்வி கேட்பாங்க. எல்லாத்துக்கும் தயார்படுத்திக்கணும்ல... ஸோ, நிறைய இடங்களுக்கு டிராவல் பண்ணோம்; நிறைய கத்துக்கிட்டோம். அதுக்கு அப்புறம் வீட்டில் பேசினோம். அவங்களும் சப்போர்ட் பண்ணாங்க. ஒரு வழியா பிசினஸ் ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில் கொல்கத்தா போன்ற இடங்களில் இருந்து பேக்குகள் வாங்கி வந்து விற்றோம். எங்க முதல் ஆர்டர் எங்க கல்லூரியின் கல்ச்சுரல் புரோகிராமுக்குதான். முதல் ஆர்டரிலே நிறைய கத்துக்கிட்டோம். அடுத்து பிசினஸ் கொஞ்சம் டெவலப் ஆகியது.

எதிர்பாராத சூழலில் திடீர்னு ஆர்டர்கள் குறையத் தொடங்கிச்சு. போகிற இடமெல்லாம் பெண்கள்தானேனு கொஞ்சம் அசால்ட்டா டீல் பண்ணுவாங்க. அப்ப ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா, நாங்க மனசை தளரவிடல. விடாம கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கினோம். திரும்பவும் ஆர்டர்கள் குவியத் தொடங்கிச்சு. பேக் வாங்கி வியாபாரம் செய்த நாங்க, நிறைய மேனுஃபேக்சரிங் கம்பெனிகளுடன் டை-அப் வெச்சு, மேனுஃபாக்சரிங்   பண்ண ஆரம்பிச்சோம். அதுமட்டுமில்ல, நிறைய பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தோம். நாங்களே நிறைய புது டிசைன்கள் பண்றோம். ரிட்டன் கிஃப்ட்ஸ் பண்றோம். பல பெரிய நிறுவனங்களுக்கு இப்போ பேக் சப்ளை பண்றோம்.

பிசினஸ்ல நிறைய போட்டி இருந்தாலும், குவாலிட்டியில் எந்த காம்ப்ரமைஸும் செய்யாததுதான் எங்க வெற்றிக்கான காரணம். ஒவ்வொரு ஆர்டரையும் எங்க முதல் ஆர்டர் மாதிரிதான் பார்த்துப் பார்த்து பண்ணுவோம். அதுமட்டுமில்ல... இந்த பிசினஸ் எங்க ஃப்ரெண்ட்ஷிப்பையும் எந்த வகையிலும் பாதிக்காதபடி  வேலைகளை பங்கிட்டு செய்றோம். சொன்னா நம்பமாட்டீங்க... இப்போ மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறோம். எங்களை நிரூபிச்சுட்டோம். வேலை கிடைக்கலைன்னே சொல்லிட்டிருக் காம... உங்களுக்குப் பிடிச்ச பிசினஸை கொஞ்சம் புதுமை கலந்து செய்தால், வாழ்க்கையில் ஜொலிக்கலாம்!”

- எனர்ஜெடிக் யோசனை வழங்கினார் காயத்ரி.

- சு.சூர்யா கோமதி, படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு