அனுஷா... ஆதிரா... இனியா!

தேர்வு முடிந்த குஷியில் இருக்கிறார்கள் அனுஷா, ஆதிரா, இனியா.

‘`எக்ஸாம்ல இருந்துகூட ஒருவழியா தப்பிச்சுட்டோம். ஆனா, இந்த வெயில்ல இருந்து தப்பிக்க முடியாது போலிருக்கே...’'

``சரி அனு, லேட்டஸ்ட்டா ‘24’ படம் பாத்தேனு கேள்விப்பட்டேன். நாம மூணு பேரும் சேர்ந்துதானே படம் பாக்குறது வழக்கம்... இதென்ன புதுசா நீ மட்டும் தனியா பாத்திருக்கே?''

`‘இல்லப்பா... அது வந்து கஸின்ஸ் கூப்ட்டாங்களா, அதான்!’'

``சரி சரி... ஓவரா பம்மாத... படம் எப்படி இருக்கு?''

``காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காதுல்ல... காலத்தை நிறுத்தி வைக்க முடியும்னா என்ன நடக்கும்னு ஒரு கற்பனைக் கதைதான்... ‘24’. இந்தப் படத்துல மழையை நிக்க வெச்ச மொமென்ட் இருக்கே... வாவ்! சூர்யா- சமந்தா ரொமான்ஸ் சொல்லவே வேணாம்!’'

`‘போதும்... போதும்... ஏதோ எக்ஸாம்னு நாங்க நல்ல பிள்ளைங் களா படம் பாக்கலை. அதுக்காக வெறுப்பேத்தாத ஓவரா!''

`‘ஜிஷா ரொம்ப பாவம்ல...’'

`‘டைவர்ட் பண்றாங்களாமாம்.’'

``நான் சீரியஸாதான் பேசுறேன். கேரளத்து பொண்ணு ஜிஷாவைப் பத்தி ஹேஷ்டேக் எதுவும் பாக்கலையா நீ?''

``ஆமா... ஸாரிப்பா... பாவம்தான் ஜிஷா. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அநியாயமா கொல்லப்பட்டிருக்கா...’'

`‘அந்தப் பொண்ணோட மரணத்துக்கு நிச்சயமா நியாயம் கிடைக்கணும்!''

`‘அதுக்காகத்தான் சோஷியல் மீடியாவுல #JusticeForJishaனு ஒரு ஹேஷ்டேக் கிரியேட் பண்ணி ட்ரெண்ட் பண்ணி இருக்காங்க பாத்தியா?''

`‘சரி... இந்த  ஹேஷ்டேக் எல்லாம் எப்படி ட்ரெண்ட் ஆகுதுனு சொல்லிக் குடு அனு!''

`‘ஹேஷ்டேக்னா ஒண்ணும் இல்லை ஹேஷ் சிம்பல் (#) இருக் குல்ல, அது கூட எந்த வார்த்தைய சேர்த்து எழுதினாலும் அதுக்குப் பெயர்தான் ஹேஷ்டேக்.''

“ பழைய நோக்கியா மொபைல்ல ஜீரோவுக்குப் பக்கத்துல இருக்குமே  (#) அந்த சிம்பல்தான?''

அனுஷா... ஆதிரா... இனியா!

“ஆமா ஆமா... அதே சிம்பல்தான்.''

“அனு, இன்னும் கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு!''

“இப்ப உனக்கு `24' படத்தோட ரிவ்யூ படிக்கணும்னா... #24 அப்படின்னு டிவிட்டர், ஃபேஸ் புக்ல தேடிப் பார்த்தா, அந்தப் படம் பத்தி உலகத்துல யார்யார் எல்லாம் என்ன பேசியிருக்காங்கனு தெரிஞ்சிக்கலாம்... நீயும் ஈஸியா ரிவ்யூ படிக்கலாம். அதேபோலதான் ஜிஷாவுக்கு நடந்த கொடுமைக்கும் இணையப் போராளிகள் ஹேஷ்டேக் உருவாக்கி அதை ட்ரெண்டிங் ஆக்கினாங்க.''

“ஹேஷ்டேக் புரியுது. அதை வெச்சு எப்படி ட்ரெண்ட் ஆகும்னு புரியலையே.''

“கரெக்ட்டா கேட்ட! அதாவது,  ஒரே மாதிரியான ஹேஷ்டேக்கை பலரும் பயன்படுத்தி அதுல ஒரே செய்தியை பத்தி பகிர்ந்திருக்காங்கன்னா... அது ட்ரெண்டிங்ல காட்டும்.''

“ஓ... இப்ப புரியுது. ஹேஷ்டேக்ல பேசுறவங்க எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அது ட்ரெண்ட் ஆகும். கரெக்டா..?''

“ம்...  இப்படித்தான் விகடன் வெப்சைட்ல #Where

IsMyGreenWorld அப்படின்னு இயற்கை சம்பந்தமான ஒரு ஹேஷ்டேக் பரவலா பேசப்பட்டுச்சு...”

“ஆமா, நானும் பார்த்தேன் அனுஷா.''

“நாம இயற்கையை எந்த

மாதிரியெல்லாம் அழிச்சிருக் கோம், இனி எதிர்காலத்துல எவ்வளவு கஷ்டப்படுவோம் அப்படின்னு நிறைய விவாதங்கள் பண்ணாங்க. ஒரு விஷயத்தப் பத்தி மக்கள்கிட்ட விழிப்பு உணர்வை ஏற்படுத் தணும்னா இந்த மாதிரி ஹேஷ்டேக் ரொம்ப உதவும்.''

``சரி... சப்ஜெக்ட் சீரியஸா போகுதோ...''

`‘ஆதிரா... `இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்’னு நீ கேள்விப் பட்டது இல்லையா?''

``இப்ப ஜாலியா பேச லாம். ரஜினியோட `கபாலி' டீசர் வந்தப்ப அந்த டீசர்ல

நெருப்புடான்னும், மகிழ்ச் சினும் ரெண்டு வார்த்தைகள் வந்தாலும் வந்துச்சு... ‘#நெருப்புடா #மகிழ்ச்சி’ங்கிற   வார்த்தைகள் ட்ரெண்ட்  ஆச்சு. அதனாலதான் அந்தப் படத்தோட டீசர் ரொம்ப ஃபேமஸ் ஆனது.''

`‘ஆமா, அதை வெச்சு மீம்ஸ்கூட வந்துச்சு.''

`‘சரி, உருப்படியா இந்த சம்மர் லீவுக்கு நான் டிரைவிங் கத்துக்கப் போறேன்.''

`‘என்ன ஆதிரா, அப்ப நாங்கள்லாம் வெட்டியா பேசிட்டு இருக்கோமா?’'

`‘மூணு வயசு குட்டிப் பொண்ணு கார் ஓட்டுற வீடியோவை பாத்தேன். அதான் இந்த முடிவு!''

``இனியா... இவ எந்த உலகத் துல இருக்கானு தெரியல. 3 வயசுல கார் ஓட்டுறதெல்லாம் தப்பு தெரியுமா? அந்த வீடி யோவை நானும் பாத்தேன். அதுல வர்ற மாதிரி அந்த குட்டிப் பொண்ணு கார் ஓட்டலை. அது ரிமோட் கார்னு நினைக்குறேன்.''

`‘எதுக்கு கன்ஃபியூஸ் பண்றீங்க. லின்க் அனுப்புங்க.''

`‘அனுப்பியாச்சு...''

`‘அனுப்புறதுக்குள்ள எதுக்குடி கெக்கேபிக்கேனு சிரிக்குற?''

`‘என்னோட போனை நைட் முழுக்க சார்ஜ்ல போட்டு வெச்சுட்டு, காலைல எழுந்து பாக்குறேன்... சார்ஜே ஆகல. அப்புறம்தான் தெரிஞ்சது நான் ஸ்விட்ச்சே போடலைனு! இது மாதிரி நாம வாங்குன பல்பையெல்லாம் சேர்த்து வெச்சு ஒரு ஆர்ட்டிகிள் வந்திருக்கு. அதைப் படிச்சேன்... சிரிச்சேன்!''

`‘ஷேரிங் நல்லது அனுஷா!''

`‘லின்கை வாட்ஸ்அப்ல அனுப்பியிருக்கேன்.''

``சூப்பரு! இப்டியே பேசிட்டு இருக்காம, வெளிய போயி ஏதாவது கூலா குடிச்சிட்டு வருவோம்.''

வாட்டர்மெலன், ஐஸ்க்ரீம், இளநீர் என மூன்று பேரும் இப்ப மவுத் டைட் ஆனதால், அடுத்த வாரம் அவர்கள் அரட்டையைக் கேட்கலாமே!

- கச்சேரி களைகட்டும்...

ஸ்யாம்

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணைய தள முகவரியை  தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா!

மூன்று வயது டிரைவரின் கார் வீடியோ http://bit.ly/1mSG6Vf

அனுஷா... ஆதிரா... இனியா!

பல்பு வாங்கலாமா பல்பு http://bit.ly/1TCuCjo

அனுஷா... ஆதிரா... இனியா!

ஜிஷாவுக்கு நடந்த கொடுமை என்ன? http://bit.ly/1q3oFEv

அனுஷா... ஆதிரா... இனியா!

#Whereismygreenworld இந்த ஹேஷ்டேக்ல என்ன இருக்கு? cbit.ly/1salm0t

அனுஷா... ஆதிரா... இனியா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு