செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 6

கொஞ்சம் பேச்சு... நிறைய எக்ஸ்பிரஷன்ஸ் என தன்னுடைய க்யூட் மேனரிசத்தால் ரசிகர்களைக் கட்டிப்போட்டிருக்கும் ‘டார்லிங்’ திரைப்பட நாயகி நிக்கி கல்ராணியின் செம க்யூட் டிரெஸ்ஸிங் சென்ஸ் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க...

ஷாப்பிங் பாலிசி!

ஃப்ரெண்ட்ஸ் கூட ஷாப்பிங் போகும்போது அவங்க சொல்ற ஐடியாக்களை அப்படியே கேட்டுக்காம, எனக்குப் பிடிச்சிருந்தா மட்டுமே செலக்ட் பண்ணுவேன். டிரெஸ் எடுக்க அரை மணி நேரத்துக்கு மேல செலவு பண்ணோம்னா நமக்கே குழப்பமாயிடும். அதனால, ஃபாஸ்ட் ஷாப்பிங்

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 6

ரொம்பவே பெஸ்ட்! பொருந்தாத டிரெஸ்ஸை வாங்கி பணத்தை வேஸ்ட் செய்யறது எனக்கு சுத்தமா பிடிக்காது. டிரெஸ் மெட்டீரியலை  க்ளைமேட்டுக்கு ஏத்த மாதிரி வாங்குறதோட ஸ்கின் ரேஷஸ் ஏற்படுத்தாத டிரெஸ்னா, `டக்’குனு பில் போட்டுட்டு  வாங்கிட்டு வந்துருவேன்.

தனி ஸ்டைல்!

மற்றவர்களின் டிரெஸ்ஸிங் ஸ்டைலை ரசிப்பேன். ஆனா, எப்பவும் மத்தவங்க மாதிரி டிரஸ் பண்ணிக்க மாட்டேன். நமக்குன்னுன்னு தனி ஸ்டைல் இருக்கணும். பாலிவுட் ஆக்ட்ரஸ் கரினா கபூர் டிரெஸ்ஸிங் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும். அவங்களை வியந்து பார்ப்பேன். ஆனா, அவங்கள மாதிரி டிரெஸ்ஸிங் பண்ணிக்கணும்னு நினைச்சது இல்ல. ஏன்னா, அவங்களோட உடல் அமைப்பு வேற... என்னோட உடல் அமைப்பு வேற! நமக்கு எது செட் ஆகுமோ, அதுலதான் நாம பெஸ்ட்டா இருப்போம். மற்றவர்களை காப்பி அடிச்சா, கடைசியில பல்புதான் வாங்கணும்.

சினிமா செய்த மாயம்!

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 6

நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடி மாடலிங் ஃபீல்டில் இருந்தேன்; நிறைய விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். அப்போவெல்லாம் ஷாப்பிங் போனா `யாரோ ஒரு அழகான பொண்ணுடா’னு பார்த்தவங்க, இன்னிக்கு `நம்ம டார்லிங்டா’னு செஃல்பி எடுத்துக்க வர்றாங்க. சினிமா எனக்கு அன்பை சம்பாதிச்சு குடுத்துருச்சு. இப்பல்லாம் ஷாப்பிங் போனாலே எதாவது ஒரு புது எக்ஸ்பீரியன்ஸோடதான் வீட்டுக்கு வர்றேன்.

ஸ்வீட் மெமரி!

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 6

இன்னிக்கு என்னோட வார்ட்ரோப்பில் எத்தனையோ டிரெஸ் இருக்கு. ஆனா, நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது என் தாத்தா வாங்கி கொடுத்த ஸ்வெட்டருக்குதான் எப்பவும் முதலிடம். அது ரொம்ப அழகா இருக்கும். அதில் அனிமல்ஸ் போட்டோஸ் பிரின்ட் செய்யப்பட்டு இருக்கும். இன்னிக்கு என் தாத்தா என் கூட இல்லைன்னானும் அந்த ஸ்வெட்டர் என் கூட இருக்கு. என்னோட லைஃப் டைம் ஸ்வீட் மெமரி... மறக்க முடியாதுல்ல!

வாட்ரோப் சாய்ஸ்!

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 6

ஜீன்ஸ் அண்ட் டி-ஷர்ட்டில்தான் நான் ரொம்ப கேஷுவலா ஃபீல் பண்ணுவேன். என்னோட ஃபேவரைட்னா எப்பவும் புடவைகள்தான். என்னதான் மாடர்னா, டிரெஸ் பண்ணிக்கிட்டாலும் புடவை தருகிற அழகை வேற எந்த டிரெஸ்ஸும் தராது. ஒரு உண்மையை சொல்லவா... புடவையில நான் ஏஞ்சல் மாதிரி இருக்கேன்னு நிறைய பேர் சொல்லியிருக்காங்க.

ஐ லவ் டைமண்ட்ஸ்!

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 6

டைமண்ட்ஸ்தான் என்னோட டார்லிங். எந்த ஃபேக் ஜுவல்லரியையும் போட மாட்டேன். என் ஸ்கின் டோனுக்கு டைமண்ட்தான் செட் ஆகும். செலக்ட் பண்ற டிரெஸ்ஸுக்கு மேட்ச்சா லைட் வெயிட் டைமண்ட் ஜுவல்லரி சிம்பிள் அண்ட் க்யூட் லுக் கொடுக்கும்.

எல்லா கலரிலும் ஷூக்கள்!

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 6

எனக்கு ஷூஸ்னா ரொம்ப பிடிக்கும். என் வீட்டில் டிரெஸ்ஸை விட ஷூதான் அதிகம். எல்லா கலரிலும் டிரெஸ்ஸுக்கு மேட்சிங்கா ஷூஸ் இருக்கு. ஷூ போடும் போது, எனக்கு எப்பவுமே ஒரு தனி கான்ஃபிடன்ஸ் கிடைக்கும்.

கைஸ்.. ப்ளீஸ் பீ கூல்!

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 6

பொண்ணுங்கன்னாலே எப்பவும் ஷாப்பிங்தான்னு கிண்டல் பண்ணாதீங்க பசங்களா..! இப்போவெல்லாம் ஷாப்பிங் மால் போனோம்னா, கேர்ள்ஸுக்கு இணையா பாய்ஸும் வர்றாங்க. அதனால ப்ளீஸ் கூல் கைஸ்.

ஓகே... பை பை டு ஆல்!

சு.சூர்யா கோமதி