Published:Updated:

காட்டன் கலெக்‌ஷன்... செம கூல்!

காட்டன்  கலெக்‌ஷன்... செம கூல்!
பிரீமியம் ஸ்டோரி
News
காட்டன் கலெக்‌ஷன்... செம கூல்!

காட்டன் கலெக்‌ஷன்... செம கூல்!

ந்த வெயில் நேரத்துல ‘அடடா மழைடா... அட மழைடா’னு `பையா’ படத்துல வர்ற தமன்னா போல மழையில நனைஞ்சுக்கிட்டே டான்ஸ் ஆடணும் போல தோணுதா உங்களுக்கு? அப்படின்னா புழுக்கமான மெட்டீரியல் ஆடைகளுக்கு `குட்பை’ சொல்லிவிட்டு கூல்  சம்மர் காட்டன் கலெக்‌ஷனுக்கு இப்பவே மாறிடலாம் வாங்க.!

ஸ்கர்ட் அண்ட் டாப்ஸ்

காட்டன்  கலெக்‌ஷன்... செம கூல்!

ஸ்கர்ட் பிரியர்களுக்காகவே வந்திருக்கு பிரின்டட் மால் காட்டன் ஸ்கர்ட்டும் அதற்குப் பொருத்தமாக பியூர் காட்டன் ஷர்ட்டும்! பல வண்ணங்களில் மயில் தோகையைப் போல விரியும் இந்த ஸ்கர்ட் 1,000 முதல் 2,000 ரூபாய் வரையிலும்... டாப்ஸ் 500 - 1,000 ரூபாய் வரையிலும் பிராண்டை பொறுத்து விலை மாறுபடும்.

சல்வார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காட்டன்  கலெக்‌ஷன்... செம கூல்!

ஜெய்ப்பூர் காட்டன் மெட்டீரியலில் ஆர்ட் வொர்க்குடன் உருவாக்கப்பட்டிருக்கும் சல்வார், பார்க்க ஹோம்லியாகவும் அதே சமயம் ஃபேஷனபிளாகவும் இருக்க நினைக்கும் பெண்களுக்கு பக்காவாக பொருந்தும். எல்லாவிதமான ஹேர் ஸ்டைலுக்கும் கம்ப்ளீட் லுக் கொடுக்கும். 1,000 ரூபாய் முதல் தொடங்கும் இந்த டைப் சல்வார்கள், ஆர்ட் வொர்க்குக்கு ஏற்றவாறு விலை மாறுபடும்.

குர்த்தா

காட்டன்  கலெக்‌ஷன்... செம கூல்!

டெம்பிளேட் உடையாக இருந்தாலும் சம்மர் சமயங்களில் இந்த வகைக்கு டிமாண்ட் இருப்பதால் விதம்விதமான டிசைன்கள் இப்போது மார்க்கெட்டில் குவிந்து கிடக்கின்றன. லெக்கின்ஸ் மற்றும் ஜீன்ஸ் உடன் பொருத்தமாக இருக்கும் இந்த எவர் கிரீன் குர்த்தாவின் விலை 650 - 1,500 ரூபாய் என வண்ணம் மற்றும் நிறத்தைப் பொறுத்து மாறுபடும்.

த்ரீ ஃபோர்த்

காட்டன்  கலெக்‌ஷன்... செம கூல்!

`சும்மா அதிருதுல்ல..’ என சொல்ல வைக் கும் ஸ்டைலிஷ் பெண் களுக்கு ஏற்ற சாய்ஸ் இந்த த்ரீ ஃபோர்த் உடைகள். வெயிட்டான ஆடைகளை அணிய விருப்பமில்லாதவர்களுக்கு இந்த இளமை துள்ளும் த்ரீ ஃபோர்த் ஆடைகள் 300-1,500 ரூபாய் வரை தரத்துக்கு தகுந்த வாறு கிடைக்கும்.

அப்புறம் என்ன? உங்கள் டபுள் டிக் இப்ப பருத்திக்குத்தானே?!

பி.நிர்மல் , படங்கள்: ஜெ.விக்னேஷ், மாடல்: ஸ்ருதி  நன்றி: போத்தீஸ், தி.நகர், சென்னை