Published:Updated:

காலையில் ஸ்டூடன்ட்...மாலையில் டீச்சர்!

காலையில் ஸ்டூடன்ட்...மாலையில் டீச்சர்!
பிரீமியம் ஸ்டோரி
News
காலையில் ஸ்டூடன்ட்...மாலையில் டீச்சர்!

வியக்க வைக்கும் வேளாண் மாணவர்கள்

காலையில் ஸ்டூடன்ட்...மாலையில் டீச்சர்!

‘‘எங்க கல்லூரியில, மாணவ - மாணவிகள் கல்லூரி நேரத்துக்கு அப்புறம் மாலை டு இரவு குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் ‘நைட் ஸ்கூல்’ நடத்திட்டு வர்றோம். இது எங்க  கல்லூரி நற்பணி மன்றத்தால கடந்த 62 வருஷமா  கல்லூரி வளாகத்திலேயே நடத்தப்படுற நைட் ஸ்கூல். இளங்கலை முதலாமாண்டு மாணவர்களில் இருந்து முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள் வரை, விருப்பமுள்ள பலர் இந்தக் கல்விச் சேவையில் கைகோத்திருக்கோம்!’’

- பெருமையும் மகிழ்வுமாகச் சொல்கிறார்கள், கோவை, தமிழ்நாடு வேளாண் கல்லூரிப் பெண்கள்.

நல்விதை விழுந்த கதை சொன்னார், தற்போதைய மன்றச் செயலாளர், மூன்றாம்  ஆண்டு மாணவி வசுந்திரா தேவி...

காலையில் ஸ்டூடன்ட்...மாலையில் டீச்சர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘இந்த மன்றம் முதன்முதலா, வேளாண் கல்லூரியில் கீழ்நிலை வேலை செய்யும் ஊழியர்களுக்கு எழுதப் படிக்க கற்பிக்கிற நோக்கத்துல, கல்லூரி மாணவர்களால கல்லூரி வளாகத்துல 1954-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்டது. நாளடைவில் ஊழியர்களோட சேர்த்து அவங்க குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்கப்பட்டு, தொடர்ந்து கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கும் மாலை நேர வகுப்புகள் தொடங்கி, இன்னிக்கு இரவுப் பள்ளிக்கூடமா வளர்ந்து நிக்குது. இப்போ. கல்லூரியைச் சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்தும் பள்ளிக் குழந்தைகள் இங்க வந்து பாடம் கத்துக்கிறாங்க.

ஒன்றாம் வகுப்பில் இருந்து, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறவர்கள் எங்க ஸ்டூடன்ட்ஸா இருக்காங்க. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பும் எடுக்குறோம். 1989-ம் வருஷம் முதல் இங்க நூலக வசதியும் கொண்டுவந்திருக்காங்க. இந்த மன்றம், வேளாண்மைக் கல்லூரி வளாகம், தெலுங்குப்பாளையம்னு இரண்டு இடங்களில் செயல்படுது. கல்லூரிக்கு வெளியில் இயங்கும் தெலுங்குப்பாளையம் மன்றத்துல எங்க மாணவர்கள் பாடம் நடத்துவாங்க. கல்லூரி வளாகத்துக்குள்ள இருக்கிற மன்றத்துல எங்க மாணவிகள் பாடம் நடத்துவோம்’’ என்று தகவல்கள் தந்தார் வசுந்திரா தேவி.

காலையில் ஸ்டூடன்ட்...மாலையில் டீச்சர்!

இந்தப் பள்ளியில் படித்து, இப்போது இதே கல்லூரியில் மாணவிகளாகி இருக்கும் தீபிகா மற்றும் அமுதவல்லியின் வார்த்தைகளில் நன்றி. ‘‘நாங்களும் இந்த இரவுப் பள்ளியில்தான் படிச்சோம். இப்போ இதே கல்லூரியில் படிக்கிறோம். நாங்க படிச்ச இரவுப் பள்ளியில் இப்போ நாங்களே ஸ்டூடன்ட் டீச்சராகி எங்களைப் போன்ற குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறோம். இப்படித்தான் அக்கறையாலும், அன்பாலும் ஆன ஒரு சங்கிலித் தொடரா இயங்கிட்டு இருக்கு இந்த நைட் ஸ்கூல்’’ என்கிறார்கள் பரவசத்துடன்.

காலையில் ஸ்டூடன்ட்...மாலையில் டீச்சர்!

‘‘எங்க உதவிப் பேராசிரியர் முனைவர் வெற்றிவேல் காளை சார், முனைவர் மகேந்திரன் சார், கல்லூரியின் மாணவ மன்ற ஆலோசகர், எங்க வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், முதல்வர்... இவங்க அஞ்சு பேரோட உறுதுணையோடதான் இந்த மன்றம் இவ்வளவு உயிர்ப்பா, சிறப்பா செயல்படுது. `செல்போன், வாட்ஸ்அப், ஃபேஸ்புக்'னு உங்ககிட்ட திட்டு வாங்க மட்டுமில்ல... பாராட்டு வாங்கவும் நாங்க தகுதியானவங்கதானே?!’’

- கோரஸாகக் கேட்கிறார்கள் கேர்ள்ஸ்.

ஷொட்டு செல்லம்ஸ்!

சா.கவியரசன் ,படங்கள்:   ஜி.கே.தினேஷ்