Published:Updated:

இன்டர்வியூவை சமாளிக்கலாம், ஈஸியாக!

இன்டர்வியூவை சமாளிக்கலாம், ஈஸியாக!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்டர்வியூவை சமாளிக்கலாம், ஈஸியாக!

வேலைவாய்ப்பு ஸ்பெஷல்

`டெட்எக்ஸ்’ காட்டும் தெளிவான பாதை...

லகில் அதிக நபர்களால் பார்க்கப்படும் யூடியூப் சேனல்களில் ஒன்று, `டெட்எக்ஸ்’ (TEDx). பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்களின் தன்னம்பிக்கை தரும் பேச்சுகள் இந்த சேனலில் காணக்கிடைக்கும். நேர்முகத் தேர்வு வழிகாட்டியாக `டெட்எக்'ஸில் கலக்கிக்கொண்டிருக்கும் நான்கு வீடியோக்களின் தொகுப்பு இங்கே...

ஓவர் கான்ஃபிடன்ஸ்... `ஓகே’தான்!

இன்டர்வியூவை சமாளிக்கலாம், ஈஸியாக!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஓவர் கான்ஃபிடன்ஸ் கூடாது என்பார்கள். ஆனால், ஓவர் கான்ஃபிடன்ஸும் நல்லதுதான் என்கிறார் டில் ஹெச். குரோப். மனிதவள மேம்பாட்டுப் பேச்சாளரான இவர், தன்னம்பிக்கை பெற கூறும் வித்தியாசமான வழிகள்...

‘‘எந்த வேலையாக இருந்தாலும் அதில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் தன்னம்பிக்கை தேவை.    அதை வளர்த்துக்கொள்ள முதலில் நீங்கள் அதிகம் பயப்படக்கூடிய செயலைச் செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் இருட்டுக்கு பயப்பட்டால் தனியாக இருளில் நீண்ட தூரம் நடக்க வேண்டும். பின்னர் இருட்டு பழகிவிடும். அதேபோல, மேடையில் பேச பயம் என்றால், எல்லா மேடைப் பேச்சுகளுக்கும் பெயர் கொடுங்கள். அப்போதுதான் அதன் மீதான பயம் விலகும். இன்னொரு வித்தியாசமான வழி இருக்கிறது. மக்கள் கூட்டம் நிறைந்த சாலை ஒன்றின் ஓரத்தில், வெட்கத்தை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு அமருங்கள். யாருடைய பார்வையைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். இது உங்கள் தன்னம்பிக்கையை வேறு லெவலுக்கு உயர்த்தும்!’’

இன்டர்வியூவை சமாளிக்கலாம், ஈஸியாக!

வீடியோ லிங்க்: http://youtu.be/HtDkg3Xwn7U

தேர்வுகள்... வெற்றி ரகசியங்கள்!

நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறும் முன் நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எளிதாக சமாளிக்க சில வெற்றி ரகசியங்களைச் சொல்கிறார் சைனி. மருத்துவரான இவர், ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி இப்போது இந்தியாவின் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற சிறப்பைப் பெற்றிருப்பவர். சைனி கூறுவதைக் கேளுங்கள்...

இன்டர்வியூவை சமாளிக்கலாம், ஈஸியாக!

‘‘ஒரு செயலை ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் செய்வதன் மூலம் அந்தச் செயலில் நீங்கள் தனித்துவமான திறனைப் பெறுவீர்கள். எடுத்துக்காட்டாக, ஆயிரம் முறை தலைகீழாக நடப்பதற்கு பயிற்சி எடுத்தீர்கள் என்றால், ஆயிரத்து ஒன்றாவது முறை நீங்கள் தலைகீழாக நடப்பதில் வல்லுநர் ஆகிவிடுவீர்கள். இதே முறையை நுழைவுத் தேர்வுக்கும் பயன்படுத்துங்கள். தினமும் ஒரு தேர்வை சுயமாக நீங்களே எழுதிப் பார்க்கும்பட்சத்தில், ஒரு கட்டத்தில் நீங்கள் நுழைவுத் தேர்வில் வல்லுநர் ஆகிவிடுவீர்கள். இவற்றுக்கு எல்லாம் ஆரம்பமாக, முதலில் உங்களது கம்ஃபர்ட் ஸோனைவிட்டு வெளியே வாருங்கள்.’’

இன்டர்வியூவை சமாளிக்கலாம், ஈஸியாக!

வீடியோ லிங்க்: http://youtu.be/Xyikqxmm4W0

உடல்மொழி முக்கியம்!


உடல்மொழி என்றழைக்கப்படும் பாடி லாங்குவேஜ், நம்முடைய நேர்முகத் தேர்வில் எந்த விதத்தில் எல்லாம் உதவும் என்பது குறித்து, உளவியல் நிபுணர் எமி கட்டி பேசிய வீடியோவில், அவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்...

இன்டர்வியூவை சமாளிக்கலாம், ஈஸியாக!

‘‘பேருந்து நிலையத்தில் நிற்பதில் தொடங்கி உங்களது ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்வரை எல்லா தருணங்களிலும் உங்கள் உடல்மொழி முக்கியம். அதன் அடிப்படையில்தான் பிறர் உங்களை முதல் பார்வைக்குக் கணிப்பார்கள். நேர்முகத் தேர்வில் எவ்வளவு குறுகி அமர்ந்திருக்கிறீர்களோ, அந்தளவுக்கு குறுகிய மனப்பான்மை கொண்டவர் என்றும், எவ்வளவு கம்பீரமாக நிமிர்ந்து, கைகளை விரித்து அமர்ந்திருக்கிறீர்களோ அந்தளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்டவர் என்றும் பொருள்கொள்ளப்படும். நிற்கும்போது கால்களை ஒடுக்கி வைக்காமல், ரொம்பவும் விரித்து வைக்காமல் பாதி விரிந்த நிலையில் நிற்க வேண்டும். உடலின் மொத்த எடையையும் இரு கால்களுக்கும் சீராகக் கொடுத்து நிற்க வேண்டும், சாய்ந்தபடி நிற்கக் கூடாது. கைகளைக் கட்டி நிற்பது என்பது மிகவும் மோசமான ஓர் உடல்மொழி. திமிராகவோ, அடக்கமாகவோ எந்த வகையிலும் கைகளைக் கட்டக்கூடாது. பேசும்போது கைகளை விரித்துப் பேசுவது, வெற்றியாளர் தோரணை கொடுக்கும். உதட்டில் இருக்கும் மெல்லிய புன்னகை, நீங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டவர் என்று சொல்லும்!”

இன்டர்வியூவை சமாளிக்கலாம், ஈஸியாக!

வீடியோ லிங்க்: http://youtu.be/Ks-_Mh1QhMc

சுய அறிமுகம்... சூப்பராக அமைய வேண்டும்!


‘‘எந்த நிறுவனத்தின் நேர்முகத் தேர்விலும் முதலில் கேட்கப்படுவது இந்தக் கேள்விதான்... ‘உங்களைப் பற்றி சொல்லுங்கள்.’ மற்றவர்களை எளிதில் கவரும் வண்ணம் எப்படி உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக்கொள்வது? மிகவும் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இந்த வீடியோவில் கூறுகிறார், தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவரும், பேச்சாளருமான கெவின் பெஹ்லர்...

இன்டர்வியூவை சமாளிக்கலாம், ஈஸியாக!

‘‘நீங்கள், உங்கள் நெருங்கிய நண்பன் ஒருவனைப் பற்றி அறிமுகம் செய்யச் சொன்னால் எப்படியெல்லாம் அறிமுகப்படுத்துவீர்கள்? அவனைப் பற்றி சமயங்களில் அவனுக்கே தெரியாத தகவல்களைக்கூட சொல்வீர்கள் இல்லையா? உங்களது நண்பனை அறிமுகப்படுத்தவே உங்களிடம் இவ்வளவு இருக்கும்போது, உங்களைப் பற்றி எப்படியெல்லாம் அறிமுகப்படுத்தலாம்! நீங்கள் உங்களை எப்படி அறிமுகப்படுத்திக்கொள்கிறீர்கள் என்பதில்தான் உங்களது மொத்த நேர்முகத் தேர்வும் அடங்கியிருக்கிறது. முதல் பார்வையில் தேர்வாளர் உங்களைப் பற்றி ஒன்று நினைத்திருப்பார். உங்கள் அறிமுகப் பேச்சின் மூலம், ‘நீங்கள் நினைத்ததுபோல் நான் அல்ல’ என்று தேர்வாளரை ஆச்சர்யப்படுத்தும் பேச்சு சாமர்த்தியம் அவசியம் வேண்டும். நேர்முகத்தேர்வில் பெயரைத் தவிர பெரும்பாலும் எல்லோரும் ஒரே மாதிரியான அறிமுகத்தைத்தான் சொல்வார்கள். நீங்கள் எவ்வளவு வித்தியாசமாக உங்களை அறிமுகம் செய்கிறீர்களோ அதில்தான் நீங்கள் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுவீர்கள்.’’

வீடியோ லிங்க்: http://youtu.be/V1xt7zgnuK0

லோ.சியாம் சுந்தர்