Published:Updated:

இது நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இது நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்?!
இது நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்?!

ஹேஷ்டேக்

பிரீமியம் ஸ்டோரி
இது நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்?!

லகத்தில் என்ன நடந்தாலும், உடனே அதற்கு ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்வதுதான் நம் நெட்டிசன்களின் தலையாய வேலை. ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்பதை ‘#நான்#உன்னை#காதலிக்கிறேன்’ என இப்படி டேக் போட்டு சொன்னால்தான் எந்தப் பொழுதும் விடியும், முடியும் அவர்களுக்கு! தடுக்கிவிழுந்தால்கூட டேக் என்று அவர்கள் உருவாக்கியுள்ள சில கன்னாபின்னா ஹேஷ்டேக்குகளை கொஞ்சம் என்னவென்று பாருங்கள்..!

#எதுனா_சொல்லுவோம்

நீங்கள் நாட்டுக்கு ஏதாவது நல்லது சொல்ல ஆசைப்படுகிறீர்களா? ‘டீ குடிச்ச உடனே ஆறின காபியைக் குடிச்சா ஆரஞ்சு ஜூஸ் குடிச்ச ஃபீல் வரும்’ என அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை இந்த டேக்கில் தாராளமாகச் சொல்லலாம். இந்த டேக்கை கண்டுபிடித்தவர், சொல் வதற்கு எதுவுமே இல்லாமல் கடைசி யாக ‘எதுனா’ சொன்னவராகத்தான் இருப்பார்.

இன்னிக்கு திங்கட் கிழமையா..!

அப்போ நாளைக்கு செவ்வாய்க்கிழமை..!

அப்படின்னா... நேத்து ஞாயிற்றுக் கிழமையா..!

அடடடடா!

#HowToPropose

உங்களுக்குக் காதல் கைகூடவே இல்லையா? கௌதம் மேனன் படம்போல கடைசிவரை எதுவுமே நடக்காது என்ற விரக்தியில் இருக்கிறீர்களா? உங்களுக்கான டேக்தான் இந்த #HowToPropose. எப்படியெல்லாம் விதவிதமாக புரொபோஸ் செய்யலாம் என்பதை உலகுக்குச் சொல்லும் நல்லெண்ணத்துடன் இந்த டேக்கை உருவாக்கியது, ஒரு ‘சிங்கிள்’ நெட்டிசனாகத்தான் இருக்க வேண்டும். இந்த டேக்கில் சென்று பாருங்கள். அங்கு கொட்டிக்கிடக்கிற ஐடியாக்கள் தவிர மற்றபடி எப்படி வேண்டுமானாலும் புரொபோஸ் செய்துகொள்ளுங்கள். அவ்வளவு அலும்பு... அவ்வ்!

எனக்கு என் பொண்டாட்டினாதாங்க பயம்... மத்தபடி ஐ லவ்யூங்க!

#ஒரு_சொல்_கவிதை

பக்கம் பக்கமாக கவிதை படிச்சு போர் அடித்தவர்களுக்காக, அமேசான் காடு களின் அரிய வகை புத்திசாலி யாரோ உருவாக்கிய டேக் இது. இந்த டேக் உருவாக்கியபோது ஆல் இண்டியா லெவலில் ட்ரெண்ட் ஆனது என்பது குறிப் பிடத்தக்கது. இந்த டேக்கில் எழுதுபவை எல்லாம் கவிதை இல்ல பாஸ்... கவித கவித!

பிரியாணி

ஆஹான்

இன்க்ரிமென்ட்

சண்டே

லெக்பீஸ்

#நறுக்குனுநாலுவார்த்தை

உங்களை யாராவது திட்டினாலோ, இல்லை ‘போய் இன்ஜினீயரிங் படிக்க வேண்டியதுதானே?’ என்று அவமானப்படுத்திவிட்டாலோ(!), அவர்களை எல்லாம் பார்த்து நறுக்கென்று நாலு வார்த்தை கேட்கத் துடிக்கும் அல்லவா? அப்படி இந்த டேக்கில் யாரும் யாரையும் நாலு வார்த்தைக்கு மிகாமல் திட்டலாம். படித்துப் ஃபன் பெறவும்!

இஸ்தலக்கடி லாலாசுந்தரி கோலகொப்பர கொய்யா!

படிக்கிற வயசுல என்ன ஃபேஸ்புக்?

#LoveInTamilCinemas

ஒருவருக்கு எப்போது காதல் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், தமிழ் சினிமாவில் எப்போது லவ் ஸ்டார்ட் ஆகும் என்று எல்லோராலும் சொல்லிவிட முடியும். கண்டதும் காதல், கர்ச்சீஃப் எடுத்துக் கொடுத்தால் காதல், இடித்துக்கொண்டால் காதல், ‘ஈஈஈ’ என்று இளித்துக்கொண்டால் காதல் என, தமிழ் சினிமாவில் எந்த ஸீன்களில் எல்லாம் காதல் பிறக்கும் என்பதை எழுதும் டேக் இது. கோலிவுட்டை இங்கு கலகலவென கலாய்த்து எழுதலாம்!

பஸ்ல ஹீரோவுக்கும் சேர்த்து ஹீரோயினே டிக்கெட் எடுப்பாங்க. உடனே செக்கர் வருவார். அப்புறம் பாட்டும் வரும்.

அந்தமாரி இந்தமாரி எந்தமாரி இருந்தாலும் காதல் வரும்!

இதுமாரிலாம் இல்லைன்னாலும் வரும்.

#Word #Emotion :

வாழ்க்கையில் எல்லாமே இரண்டே விஷயங்கள்தான். ஒன்று வேர்டு, மற்றொன்று எமோஷன். புரியவில்லையா? ‘அஜித்’ என்றால் அது வேர்டு. ‘தல’ என்றால் அது எமோஷன். ‘விஜய்’ என்றால் அது வேர்டு. ‘தளபதி’ என்றால் அது எமோஷன். ‘கோழி’ என்றால் அது வேர்டு. ‘லெக்பீஸ்’ என்றால் அது எமோஷன். இப்படித்தான் வாழ்க்கையில் எல்லாமே ரெண்டு வார்த்தைகளுக்குள் அடங்கிவிடும் என்ற அரிய பெரிய தத்துவத்தைச் சொல்லும் டேக் இது!

கோ சேஃப்#Word

மண்டை பத்திரம்#Emotion

தள்ளிப் போகாதே#Word

போய்த்தான் பாரேன்#Emotion

டேக் உருவாக்குங்கள், டேக்கில் எழுதுங்கள், நாட்டை முன்னேற்றுங்கள்!

லோ.சியாம் சுந்தர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு