Published:Updated:

கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!

கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!
பிரீமியம் ஸ்டோரி
கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!

- இளைஞர்களுக்கு இஷ்டமான நொறுக்ஸ்

கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!

- இளைஞர்களுக்கு இஷ்டமான நொறுக்ஸ்

Published:Updated:
கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!
பிரீமியம் ஸ்டோரி
கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!
கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!

மிக்ஸர், காராசேவு, முறுக்கு காலங்கள் மலையேறிவிட்டன. இவ்வளவு ஏன்... இப்போது பீட்சாவே அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகிவிட்டது. இளசுகள் மத்தியில் என்ன நொறுக்குகளுக்கு மவுசு? காலேஜ் கண்மணிகளிடமும் யோயோ ஹீரோக்களிடமும் ஒரு மினி சர்வே எடுத்தோம்.

ஐஸ் கேக்

கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐஸ்க்ரீம் சாப்பிட்டிருப்போம், கேக் சாப்பிட்டிருப்போம். ஐஸ் கேக், இப்போதைய ஸ்பெஷல். ஐஸ்க்ரீம் லேயர்களுடன் கேக் செய்து கொடுக்கிறார்கள். கேக் சாப்பிடும் போது சாக்லேட், வெனிலா, ஸ்ட்ராபெரி ஃப்ளேவர்கள் சில்லென அடிநாக்கில் தித்திக்கும். வாயில் போட்ட உடனே கரைந்துவிடும் இந்த கேக், கொஞ்சம் காஸ்ட்லிதான்!

சமோசா

கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!

இளசுகளின் ஆல்டைம் ஓட்டு, சமோசாவுக்கே! முக்கோண வடிவில் மைதா கோட்டிங். அதனுடன் ஸ்வீட் மின்ட் சாஸ் கலவை அல்லது சன்னா மசாலா கலந்து சாப்பிட்டால் அதுதான் சொர்க்கம்!

ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ்

கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!

இதை ஃபிங்கர் சிப்ஸ் என்றும் செல்லமாக அழைக்கிறார்கள். உருளைக்கிழங்கை மெல்லிசாக வெட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்தால்... உருளைக்கிழங்கு சிப்ஸ்னு சொல்வீங்கதானே? அதுதான் இல்லை. ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் வரும். அது எப்படி என்பது கடைக்காரர் மட்டுமே அறிந்த ரகசியம். ஃப்ரைஸ் மீது பெப்பர் அண்ட் சால்ட் தூவி கெட்சப்பை தொட்டு தொட்டு கடித்தால், ஹேங்கவுட் ஸ்நாக் டைம் பூரணமடையும்!

சாண்ட்விச், பர்கர்

கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!

லேட் நைட் ஸ்டடி, க்ரூப் ப்ராஜெக்ட் நடுவில் ஸ்நாக்ஸ் என்றால், கண்ணை மூடிக்கொண்டு மாணவர்கள் ச்சூஸ் செய்வது சாண்ட்விச் மற்றும் பர்கர். பசி ஆற பெஸ்ட் சாய்ஸ். இரண்டு பிரெட் துண்டுகளின் நடுவில் சீஸ், துருவிய காய்கறிகள், பட்டர், பனீர், கார்ன் என விதம்விதமாக வைத்து டோஸ்ட் செய்து தக்காளி கெச்சப்புடன் கொடுத்தால், சாண்ட்விச் ரெடி. பிரெட்டுக்கு பதிலாக பன் வைத்தால், அது பர்கர்! 

சிப்ஸ்

கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!

பேக் செய்யப்பட்ட பிராண்டட் சிப்ஸ்களுக்கு முன்னைப்போல் இப்போது மவுசு இல்லை என்றாலும் சளைக்காமல் புதிய ஃப்ளேவர்களை கம்பெனிகள் கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றன; ஏதோ ஒரு நேரத்தில் டீன்களும் அதை ட்ரை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

க்ரஷஸ்

கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!

பார்க்க ஜூஸ் போலவே இருக்கும். ஆனால், ஸ்ட்ராவில் உறிஞ்சுவதற்கே எக்ஸ்ட்ரா சாப்பிட வேண்டும்... அவ்வளவு திக்! பழத்தின் பல்ப் (Pulp) அப்படியே இருப்பதால் டேஸ்ட்டுக்கு டேஸ்ட்டும் ஆச்சு, உடம்புக்கு சத்தும் ஆச்சு. ஆரம்பத்தில் பெரிய ரெஸ்டாரன்ட்டுகளில் மட்டுமே கிடைத்த க்ரஷஸ், இப்போது சாதாரண ஜூஸ் கடைகளிலும் கிடைக்கிறது!

கார்ன்

கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!

சோளத்தை உதிர்த்து, வேகவைத்து, மெக்ஸிகன், மின்ட் லெமன், பட்டர், இத்தாலியன் என மசாலா கலவைகளால் ஆடை உடுத்தி ஒரு ஸ்பூன், டிஷ்யு பேப்பருடன் கொடுத்தால்... அது கப் கார்ன். முழு சோளத்தை வேகவைத்து அதன் மேல் மசாலாவால் மேக்கப் போட்டு காலில் ஒரு குச்சியை நட்டு ஃபாயில் பேப்பரில் சுற்றிக் கொடுத் தால்... அது ஸ்டிக் கார்ன்!

பானிபூரி

கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!

ஒருவரை சில பெண்களுக்குப் பிடித்தால் அவர் ஹீரோ. பல பெண்களுக்குப் பிடித்தால் சூப்பர் ஹீரோ. எல்லாப் பெண்களுக்கும் பிடித்தால் அவர்... பானிபூரிவாலா! அழகிகளின் கிரேஸ் இது. பொரித்த சிறிய பூரியில் ஒரு ஓட்டையைப் போட்டு, உருளைக்கிழங்கு, புதினா – புளி தண்ணீரை ஊற்றி அந்த ஓட்டையை அடைத்தால், பானிபூரி ரெடி. அதில் வெங்காயம், ஸ்வீட் சாஸ் ஊற்றி மல்டி சுவையை ஒருகைபார்த்துவிட வேண்டியதுதான். பானிபூரி கொடுக்கிறவர், அடுத்த பூரியை கப்பில் வைப்பதற்குள் சாப்பிட்டு முடிப்பதில் இருக்கிறது உண்மையான ரேஸ்!

பாவ் வகைகள்

கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!

பாவ் என்றால் பெரிதாக ஒன்றும் இல்லை, பன். பன்னை டோஸ்ட் செய்து சீஸ் தடவி நடுவில் நம்ம ஊர் ஓட்டை வடையை வறுத்து வடைகறி ஆக்கி மசாலா போட்டு கொடுத்தால், அதுதான் வடா பாவ். பாவ் தரும் இனிப்பு, பட்டர் தரும் சுவை, மசாலா தரும் ஸ்பைஸ், வடைகறி ஆகியவை சேர்ந்து ஒவ்வொரு `பைட்'டிலும் ஒவ்வொரு சுவை. சாப்பிட்டு முடிக்கும்போது வயிறு ஃபுல். இதே பன்னுடன் வெங்காயம், தக்காளி, உருளை வதக்கல் தொட்டு சாப்பிட்டால் அது பாவ் பாஜி!

கச்சோரி

கறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு!

இது பார்க்க சமோசாவைப் போலேவே இருக்கும். வெளியே அதே மைதா கோட்டிங். ஆனால், சாப்பிடுபவருக்குதான் வித்தியாசம் தெரியும். பனீர், கொத்தமல்லித்தழை, குடமிளகாய், கொஞ்சம் காரம், கொஞ்சம் லெமன் என `மசாலிக்'காக தயார்செய்து மைதா கோட்டிங்கால் ஃபினிஷிங் கொடுத்தால், சுவையான கச்சோரி ரெடி. வட்டமான கச்சோரியின் நடுவே சிறிதாக பள்ளம் தோண்டி, அதில் ஸ்வீட் சாஸ், மின்ட் சாஸ், ஓமப்பொடி, பச்சை வெங்காயம் போட்டுச் சாப்பிட்டால்... யம்மியானோ!

அட, இன்னுமா படித்துக்கொண்டிருக்கிறீர் கள்? இதில் ஏதாவது ஒன்றை ருசிக்க நாக்கு ஊறியிருக்க வேண்டுமே?

எதுக்கு வெயிட்டிங்? ஹேப்பி ஈட்டிங்!

தா.நந்திதா, படங்கள்:க.சர்வின், ச.பிரசாந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism