Published:Updated:

"டெய்லர் பொண்ணு, ஸ்டேட் செகண்ட்னு ஊரே கொண்டாடுது!"

"டெய்லர் பொண்ணு, ஸ்டேட் செகண்ட்னு ஊரே கொண்டாடுது!"

நம்பிக்கை நட்சத்திரங்கள்

"டெய்லர் பொண்ணு, ஸ்டேட் செகண்ட்னு ஊரே கொண்டாடுது!"

நம்பிக்கை நட்சத்திரங்கள்

Published:Updated:
"டெய்லர் பொண்ணு, ஸ்டேட் செகண்ட்னு ஊரே கொண்டாடுது!"
"டெய்லர் பொண்ணு, ஸ்டேட் செகண்ட்னு ஊரே கொண்டாடுது!"

‘கூலி வேலை செய்யும் அப்பா, அம்மாதான். வறுமையான குடும்பம்தான். அரசுப் பள்ளியில தான் படிச்சோம்... ஆனாலும் அசத்தலா மார்க் வாங்கியிருக்கோம்!’

- சமீபத்தில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில், ஏழ்மை நிலையிலும் ஏராளமான  மதிப்பெண்களை குவித்துள்ள மாணவிகளின் சாதனை மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. அவர்களில் சிலரைப் பற்றி இங்கே...

‘‘டீச்சர்ஸ் நிறைய அக்கறை எடுத்துப்பாங்க!’’

ஜனனி, 498/500, அரசு மேல்நிலைப் பள்ளி, மலையாண்டி பட்டணம், பொள்ளாச்சி மாவட்டம்

‘‘எங்கப்பா தையல் தொழிலாளி. நானும் என் அண்ணனும் எங்க வீட்டுக்குக்குப் பக்கத்துல இருக்குற அரசுப் பள்ளியில படிச்சோம். வீட்டுல பணக் கஷ்டம் இருந்தாலும், ‘நீங்க நல்லா படிக்கணும்’னு அப்பா சொல்லிட்டே இருப்பார். தனியார் பள்ளியிலதான் நல்லா சொல்லிக்கொடுப்பாங்கனு யார் சொன்னா? எங்க பள்ளிக்கூடத்துல எல்லா டீச்சர்ஸும் சூப்பரா சொல்லிக்கொடுப்பாங்க. ஸ்பெஷல் கிளாஸ், ரிவிஷன் டெஸ்ட், மாடல் எக்ஸாம்னு ரொம்ப அக்கறை எடுத்துப்பாங்க. ‘ஸ்டேட் ரேங்க் வாங்கணும்’னு எங்களையெல்லாம் ஊக்கப் படுத்திட்டே இருப்பாங்க. நான் 498 (தமிழ், ஆங்கிலத்தில் 99, மற்ற மூன்று பாடங்களில் 100) மார்க் எடுத்து மாநில அளவில் அரசுப் பள்ளிகளில் முதலிடமும், தனியார் பள்ளிகளும் சேர்ந்த தரவரிசையில் ரெண்டாவது இடமும் வந்திருக்கேன். என் சந்தோஷத்தைவிட, எங்க அப்பா, அம்மாவுக்கும் டீச்சர்ஸுக்கும் எவ்வளவு பெருமையா இருக்கும்னு நினைச்சுப் பார்க்கும்போதுதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘ஒட்டுமொத்த அரசுப் பள்ளி களுக்கும் நீ முகமா இருந்து கௌர வம் தேடிக்கொடுத்துட்டே’னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி பலரும் பாராட்டும்போது, பெருமையா இருக்கு.

‘டெய்லர் பொண்ணு ஸ்டேட் செகண்ட் வந்திருக்கு’னு எல்லோரும் கொண்டாடுறாங்க. தொடர்ந்து நல்லா படிச்சு, ‘டெய்லர் பொண்ணு ஐ.ஏ.எஸ் ஆயிடுச்சு’னு சொல்ல வைக்கணும்!’’ 

‘‘எங்க வீட்ல ஒரே ரூம்தான்!’’

பத்மாவதி, 463/500, அரசு உயர்நிலைப் பள்ளி, திருவாமூர், கடலூர் மாவட்டம்

‘‘எங்கப்பா மளிகைக்கடையில தினக்கூலியா வேலை பார்க் கிறார். எங்க வீட்டுல அஞ்சு பிள்ளைங்க. அண்ணனுங்க மூணு பேரும் கல்யாணமாகி தனிக்குடித்தனம் போயிட்டாங்க. அவங்கள்லாம் சரியா படிக்க முடியாததால கூலி

"டெய்லர் பொண்ணு, ஸ்டேட் செகண்ட்னு ஊரே கொண்டாடுது!"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலைக்குதான் போயிட்டு இருக் காங்க. ‘நீங்களாச்சும் ஒழுங்கா படிச்சு நல்ல வேலைக்குப் போக ணும்’னு என்னையும், ப்ளஸ் ஒன் படிக்கிற என் அண்ணனையும் அப்பா சொல்லிட்டே இருப்பார். இப்போ நான் நல்ல மார்க் எடுத்து ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்ததும் அவருக்கு ரொம்பவே பெருமை!

பள்ளிக்கூடத்துல டீச்சர்ஸ் ரொம்ப நல்லா சொல்லிக் கொடுத்தாங்க. ஒவ்வொரு பாட ஆசிரியர்களும் அவங்கவங்க பாடத்துல எங்களை சென்டம் வாங்கவைக்க ரொம்ப மெனக்கெடுவாங்க. மாதிரித் தேர்வு வெச்சு ஒவ்வொரு முறை விடைத்தாள் கொடுக்கும்போது, அதுல என்னவெல்லாம் தப்பு செஞ்சிருக்கோம், இன்னும் எப்படியெல்லாம் திருத்தி, தெளிவா எழுதணும்னு கிளாஸ்ல ஒவ்வொருத்தருக்கும் சொல்லிக்கொடுத்து ஊக்கப் படுத்துவாங்க.

வீட்டுல எனக்கு எந்த வேலையும் சொல்ல மாட்டாங்க. ராத்திரி நான் 11 மணி வரைக்கும் படிப்பேன். வீட்டுல ஒரு ரூம்தான் இருக்கு. அவங்க தூங்கறதைப் பார்த்தா எனக்கும் தூக்கம் வந்துடும்னு, நான் படிச்சு முடிக்கிறவரை, அவங்களும் எனக்காக முழிச்சிருப்பாங்க. இப்போ என் மார்க்கால ஸ்கூல்ல, வீட்டுலனு எல்லாரையும் சந்தோஷப்படுத்தினது திருப்தியா இருக்கு. 

எனக்கு டாக்டர் ஆகணும்னு ஆசை. அதுக்கு பன்னிரண் டாவதுலயும் நல்ல மார்க் எடுக்கணும், இதுக்கும்கூட எனக்கு தனியார் பள்ளியும் வேண்டாம், ஆயிரங்கள் கொட்டிப் படிக்கிற டியூஷனும் வேண்டாம். எங்க வீடும், இதே ஸ்கூலும் மட்டுமே போதும்!’’

‘‘ப்ளஸ் ஒன் சேர்க்க அப்பாகிட்ட காசு இல்ல!’’   

மதுமிதா, 423/500, அருள்நெறி உயர்நிலைப் பள்ளி, அம்மன்பேட்டை, தஞ்சாவூர்

"டெய்லர் பொண்ணு, ஸ்டேட் செகண்ட்னு ஊரே கொண்டாடுது!"

‘‘எங்க அப்பாவும் அம்மாவும் ஹாலோ பிளாக் கல் செய்யுற கூலி வேலைக்குப் போறாங்க. அதிகாலையிலேயே எங்கம்மா சமைச்சு வெச்சிட்டுப் போயிடுவாங்க. பாத்திரம் கழுவ, வீடு கூட்டனு மத்த வேலைகளை நான் முடிச்சுட்டு ஸ்கூலுக்குக் கிளம்பிடுவேன். கல்லு தூக்கி காய்ச்சுப் போயிருக்கிற எங்கம்மா கையைப் பார்க்கும்போ தெல்லாம் பாவமா இருக்கும். நாமளாச்சும் ஒழுங்கா படிச்சு நல்ல வேலைக்குப் போகணும்னு, வீட்டு வேலைகள் செஞ்சதுபோக, மத்த நேரமெல்லாம் டிவி, அரட்டைனு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாம படிப்பேன். டீச்சர்ஸ் நடத்துற பாடங்களை அன்னன் னிக்கே முடிச்சுடுவேன். டியூஷனுக்குப் போகவெல்லாம் வசதியில்ல. அதனால, ஏதாச்சும் சந்தேகம்னா, பாடம் புரியலைன்னா கிளாஸ் முடிஞ்சதும் டீச்சர்ஸ்கிட்ட கேட்பேன்; பொறுமையா சொல்லிக் கொடுப்பாங்க. இப்போ நல்ல மார்க்னு வீட்டுல பாராட்டினாலும், இன்னும் கொஞ்சம் மார்க் எடுத்திருக்கலாம்னு எனக்குதான் வருத்தமா இருக்கு. ‘நாங்க படினு கூட ஒருநாளும் உன்னை சொன்னதில்ல. உன்னோட முயற்சியால மட்டும் நீ இவ்வளவு மார்க் எடுத்திருக்கிறதே சந்தோஷம்தான்’னு அம்மா சமாதானப்படுத்துறாங்க.

நான் படிச்ச ஸ்கூல்ல டென்த் வரைக்கும்தான் இருக்கு. இப்போ வேற ஸ்கூல்ல சேர்க்கணும். ஃபீஸ், புக்ஸ், நோட்ஸ்னு சில நூறு ரூபாய்தான் ஆகும்னாலும், அப்பாவுக்கு அதுவே பெரிய செலவுதான். பணத்துக்காக அலஞ்சுட்டு இருக்கார். நல்லா படிச்சு, என் குடும்பக் கஷ்டத்தை எல்லாம் போக்கணும்!’’

கல்விச் செல்வம், மற்ற அனைத்துச் செல்வங்களும் தரும் கண்மணிகளே!

கே.குணசீலன், ச.ஜெ.ரவி, க.பூபாலன், படங்கள்:தி.விஜய், தே.சிலம்பரசன், ரமேஷ் கந்தசாமி

பார்வை பறிபோனாலும் தளராத தன்னம்பிக்கை!

"டெய்லர் பொண்ணு, ஸ்டேட் செகண்ட்னு ஊரே கொண்டாடுது!"

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரையடுத்த சொக்கனூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவி கோகுலப்பிரியா, ப்ளஸ் டூ-வில் 1167/1200 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்திருக்கிறார். இந்த மதிப்பெண்கள் சாதனையாகக் காரணம்... கோகுலப்பிரியா பார்வையிழந்த மாணவி.

“எங்கப்பா கூலித் தொழிலாளி. அம்மா வீட்டில்தான் இருக்காங்க. அக்காவுக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சு. நான் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பக்கத்துல இருக்கிற நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளியில படிச்சேன். பத்தாவது படிக்கிறவரை எனக்கு கண்பார்வை நல்லாயிருந்துச்சு. பதினோராம் வகுப்புல கொஞ்சம் கொஞ்சமா மங்க ஆரம்பிச்சு, ஒருகட்டத்துல மொத்தப் பார்வையும் பறிபோயிடுச்சு. ஆனாலும், படிப்பை மட்டும் விட்டுடாம தொடர்ந்தேன்.

"டெய்லர் பொண்ணு, ஸ்டேட் செகண்ட்னு ஊரே கொண்டாடுது!"

வீட்டுல அப்பா, அம்மா ரெண்டு பேரும் படிக்காதவங்க. அதனால ஸ்கூல்ல என் ஃப்ரெண்டு சிவபார்வதிதான் சத்தம்போட்டு படிச்சு, நான் படிக்க உதவி பண்ணினா. அவ சத்தமா படிக்கிறதைக் கேட்டுக் கேட்டே நான் மனப்பாடம் பண்ணிக்குவேன். சில சமயம் சித்தப்பா பொண்ணுகிட்ட போய் படிப்பேன். அவங்க ஹோம்வொர்க் எல்லாம் முடிக்கிறவரைக்கும் காத்திருந்து படிச்சுட்டு வருவேன்.

1175 மார்க்ஸ் வாங்கணும், ரெண்டு பாடத்துலயாவது சென்டம் வரும்னு எதிர்பார்த்தேன். அதனால ரீவேல்யூஷன் போட்டிருக்கேன். பி.ஏ படிச்சுட்டு ஐ.ஏ.எஸ் ஆகணும்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism