லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

பெண்கள் பாதுகாப்பு... அதிரடியாக உதவும் கேட்ஜட்கள்!

பெண்கள் பாதுகாப்பு...  அதிரடியாக உதவும் கேட்ஜட்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள் பாதுகாப்பு... அதிரடியாக உதவும் கேட்ஜட்கள்!

விழிப்பு உணர்வு

ந்தியப் பெண்களின் பாதுகாப்பு, இருபத்தியோராம் நூற்றாண்டிலும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய... ஆபத்து காலங்களில் அவர்களுக்கு உதவக்கூடிய கேட்ஜட்களின் பரிந்துரை இங்கே... (சென்னை, மும்பை போன்ற முக்கிய பெருநகரங்களில் இப்பொருட்கள் சந்தையில் விற்கப்படுகின்றன.)

ஸ்டன் துப்பாக்கி (stun gun)

பெண்கள் பாதுகாப்பு...  அதிரடியாக உதவும் கேட்ஜட்கள்!

சிறிய அளவிலான ஷாக் தரும் துப்பாக்கி இது. எதிராளி தாக்கவரும்போது, இந்தத் துப்பாக்கியில் இருக்கும் பட்டனை அழுத்த, சில வோல்ட்ஸ் மின்சாரம் அவன் மீது பாய்ந்து ஷாக் கொடுத்து நிலைகுலைய வைக்கும் கணத்தில் பெண்கள் தப்பித்துவிடலாம். இதற்குத் தேவையான மின்சப்ளை, அதில் பயன்படுத்தும் லித்தியம் பேட்டரியின் மூலம் பெறப்படுகிறது. ஹேண்ட் பேக்கிலோ, பெல்ட்டிலோ வைத்துக்கொள்ளும் அளவுக்கு காம்பாக்ட் ஆனது.

செக்யூரிட்டி பெர்சனல் அலாரம் (Security personal alarm)

பெண்கள் பாதுகாப்பு...  அதிரடியாக உதவும் கேட்ஜட்கள்!

ஆபத்தான சூழலில், அருகில் உள்ளவர்களை மிகுந்த சத்தத்துடன் உதவிக்கு அழைக்கும் ஹை டெசிபல் அலாரம் இது. அந்தப் பேரிரைச்சலில் எதிராளி நிலைகுலைந்து போவான். அப்போது சமயோசிதமாக தப்பித்து விடலாம் என்பதுடன், உதவிக்கு ஆட்கள்வர... எதிராளியும் விலகி ஓடிவிடுவான்.

டேசர் கருவி (The TASER device)

பெண்கள் பாதுகாப்பு...  அதிரடியாக உதவும் கேட்ஜட்கள்!

ஸ்டன் துப்பாக்கியை விட இரண்டு மடங்கு வலிமை வாய்ந்த சாதனம் இது. இதிலிருந்து வெளிப்படும் ஷாக் வயரினால் சில அடி தூரம் வரை எதிராளி தள்ளிவிடப்படுவார்.

ம.மாரிமுத்து