செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 7

மிழ்நாட்டில் பலர் வீட்டு ரிமோட்டுக்கும் செல்லம்... `டிடி' என்கிற திவ்யதர்ஷினி. சுவாரஸ்யமான நிகழ்ச்சித் தொகுப்பு, ரசிக்கவைக்கும் முகபாவங்களுடன், வியக்கவைக்கும் காஸ்ட்யூம்ஸும் அவர் பலம். தன் வார்ட்ரோப் கதை சொல்கிறார் இங்கே...

செல்ல டிரெஸ்!

``நான் எட்டு மாச பாப்பாவா இருந்தப்போ, எங்கப்பா எனக்கு வொயிட் வித் சில்வர் கலர்ல ஒரு கவுன் வாங்கித் தந்தாங்களாம். நான் அதுல ரொம்ப க்யூட்டா இருப்பேன்னு, அம்மா அதை எனக்கு அடிக்கடி போட்டுவிடுவாங்களாம். போட்டோகூட இருக்கு. நான் கொஞ்சம் பெரிய பொண்ணானதுக்கு அப்புறம், அம்மா அந்த டிரெஸ்ஸை எங்கிட்ட காட்டி இந்தக் கதையெல்லாம் சொல்ல, ஒரே சந்தோஷம். அதை வாங்கி பத்திரமா என் வார்ட்ரோபில் வெச்சுக்கிட்டேன். இப்போவரைக்கும் அதுதான் என் வார்ட்ரோபுக்கு செல்ல டிரெஸ்!

லோக்கல்... கலக்கல்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 7

விலை உயர்ந்த டிரெஸ்தான் போடுவேங்கிறது எல்லாம் இல்ல. சொல்லப்போனா, டிரெஸ்ஸுக்கு அதிகமா செலவழிக்கிறது எனக்குப் பிடிக்காது. 300 ரூபாய் டிரெஸ்ஸா இருந்தாலும், எனக்குப் பிடிச்சிருந்தா வாங்கிப் போட்டுப்பேன். லோக்கல் அயிட்டம்னாலும், அதை மனசுக்குப் பிடிச்சுப் போடும்போது கிடைக்கிற திருப்தி, எவ்ளோ காஸ்ட்லி டிரெஸ் போட்டாலும் கிடைக்காது!

பாராட்டூஸ்... மெனக்கெடல்ஸ்!

‘டிடி டிரெஸிங் சென்ஸ் சூப்பர்ப்’னு எல்லார்கிட்டயும் பாராட்டு வாங்குறேன். மகிழ்ச்சி! ஆனா, இந்த கமென்ட் ஈஸியா கிடைக்கல பாஸ்... ஒவ்வொரு டிரெஸ்ஸுக்கும் அவ்வளவு மெனக்கெடுவேன்! என் காஸ்ட்யூம் டிசைனர்ஸ்கிட்ட நிறைய ஆலோசனை செய்து, அவங்க சொல்ற டிசைன் `ஓ.கே' இல்லாத மாதிரி தெரிஞ்சா ஆரம்பத்திலேயே கரெக்‌ஷன்ஸ் சொல்லி, மனசுக்குப் பிடிச்ச பேட்டர்ன்ல ஒரு டிரெஸ்ஸை உருவாக்கறதுக்குள்ள... ஸ்ஸப்பா! நாம இன்டர்வியூ செய்ற விருந்தினர்களுக்குப் பொருத்தமா டிரெஸ் செய்ய வேண்டியதும் மிகவும் முக்கியம். அதாவது, ஆர்யா பேட்டினா ஃபேஷனபிளா இருக்கலாம். இளையராஜா பேட்டினா, நம்ம உடையிலும் அவருக்கான மரியாதையை வெளிப்படுத்தணும். இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு பேட்டர்ன்ல காஸ்ட்யூம் ரெடி செய்றது கஷ்டமா இருந்தாலும், அவுட்புட் பார்க்கும்போது அவ்ளோ சந்தோஷமா இருக்கும்! 

ஷாப்பிங்!

சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெருவை சுத்தி சுத்தி வந்து ஷாப்பிங் செய்ய ஆசை. ஆனா, நோ டைம். இப்போவெல்லாம் ஷாப்பிங்குக்காக கிளம்பிப் போறதில்ல. வெளியே எங்கயாச்சும் போகும்போது பிடிச்ச டிரெஸ்ஸை எல்லாம் பில் போட்டுட்டு வந்துடுறேன். டிரெஸ் செலக்ட் பண்ண மணிக்கணக்குல ஆக்குற ஆளெல்லாம் இல்ல இந்த `டிடி'... சில நிமிஷங்கள் போதும். ஒரு டிரெஸ்ஸை அதிகபட்சம் அஞ்சு தடவைதான் போடுவேன். அது நல்ல கண்டிஷன்ல இருக்கும்போதே, யாருக் காவது கொடுத்துடு வேன்!

ஆன்லைன் ஷாப்பிங்குக்கு `நோ'!

நான் இதுவரை ஆன்லைனில் டிரெஸ் எடுத் ததே இல்ல. ஒரு டிரெஸ்ஸை போட்டோ பார்த்து மட்டும் எடுக்கிறதுல எனக்கு விருப்பமில்ல. மேலும், போட்டோல பார்க்கிற மாதிரி நேர்ல இல்லைனு நிறைய கம்ப்ளெய்ன்ட்ஸும் கேள்விப்பட்டிருக்கேன். அதனால, ஆன்லைனுக்கு ஷாப்பிங்குக்கு நான் எப்பவுமே `நோ' சொல்ற பொண்ணு!

ஸ்பெஷல் கிரேஸ்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 7

புடவை மேல எப்பவுமே எனக்கு ஒரு ஸ்பெஷல் கிரேஸ். எப்போவெல்லாம் வாய்ப்புக் கிடைக்குதோ, அப்போவெல்லாம் தவறவிடாம புடவை கட்டிப் பேன். அதுக்கு மேட்சிங்கா, எலிகன்டா நகைகளும் போட்டுக்கும்போது, ‘யூ ஆர் ஸோ பியூட்டிஃபுல்’னு முதலில் என் மிரர் சொல்லும். அப்புறம் எல்லோரும் சொல்வாங்க!

ஷூ ஷூ... சூப்பர்!

நான் அடிக்கடி ஜீன்ஸ், டி-ஷர்ட் போட்டுக்கிறதால அதிகமா ஷூ தேவைப்படும். அதனால எப்போ ஷாப்பிங் போனாலும், ஒரு ஷு வாங்காம வரமாட்டேன்.

ஃபேஷன் அப்டேட்ஸ்!

மீடியாவில் வேலை பார்க்கிறதால, அப்டேட்டா டிரெஸ் பண்ண வேண்டி யது ரொம்ப முக்கியம். வியூவர்ஸும், ‘இந்த வாரம் `டிடி' என்ன டிரெஸ் போட்டு வர்றாங்க, அதுக்கு என்ன அக்சஸரீஸ் போட்டு வர்றாங்க’னு க்ளோஸா கவனிக்கிறதால, ஃபேஷன் பத்திரிகைகளில் இருந்து, நம்ம ஹீரோயின்ஸ் டிரெஸ் ஸிங்வரை தொடர்ந்து கவ னிச்சு, ஃபேஷனில் என்னை அப்டேட் செய்துட்டே இருப்பேன்!''

சு.சூர்யா கோமதி

ராதா, குஷ்பு...  டிரெஸ்ஸிங்  சென்ஸ் சூப்பர் !

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 7

னக்கு ராதா மேடம், குஷ்பு மேடம் டிரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்பப் பிடிக்கும். ரெண்டு பேருமே ஆடை விஷயத்தில் அவ்வளவு மெனக்கெடுவாங்க. அதனாலதான், அவங்க காஸ்ட்யூம்ல ஒரு தனித்துவம் இருக்கும். அந்த விஷயத்தில் ஐ லவ் தெம்!