Published:Updated:

முத்துப்பல் சிரிப்புக்கு... முழுமையான வழிகாட்டி!

முத்துப்பல் சிரிப்புக்கு... முழுமையான வழிகாட்டி!
பிரீமியம் ஸ்டோரி
முத்துப்பல் சிரிப்புக்கு... முழுமையான வழிகாட்டி!

பியூட்டி அண்ட் ஹெல்த் ஸ்பெஷல்

முத்துப்பல் சிரிப்புக்கு... முழுமையான வழிகாட்டி!

பியூட்டி அண்ட் ஹெல்த் ஸ்பெஷல்

Published:Updated:
முத்துப்பல் சிரிப்புக்கு... முழுமையான வழிகாட்டி!
பிரீமியம் ஸ்டோரி
முத்துப்பல் சிரிப்புக்கு... முழுமையான வழிகாட்டி!
முத்துப்பல் சிரிப்புக்கு... முழுமையான வழிகாட்டி!

வாய், நம் உடலின் வாசல். ஆரோக்கியம் என்பது, அங்கிருந்துதான் தொடங்கு கிறது. அதற்கான முறையான பராமரிப்பு வழிகள் மற்றும் பற்களின் நலனுக்கான ஆலோசனைகளைச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பல் சிறப்பு மருத்துவர், டாக்டர் உமாராணி ராமேஸ்வரன்.

‘‘பற்களில் ஏதாவது பிரச்னை வரும் வரை, அதுக்கு யாரும் கவனம் கொடுப்பதில்லை. ஆனால், பல் துலக்குவதில் இருந்து அது சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் அக்கறையெடுத்துச் செய்தால், பல் பிரச்னை களே அண்டாமல் செய்யலாம்.

எப்படிப் பல்துலக்க வேண்டும்?

சாஃப்ட், மீடியம், ஹார்டு என டூத் பிரஷ் மூன்று வகைகளில் கிடைக்கும். அதுபற்றி பிரஷ்ஷின் அட்டையின் பின்பக்கம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் சாஃப்ட் பிரஷ்ஷாக பார்த்து வாங்குவது சிறந்தது. பிரஷ்ஷை பல்லின் மீது 45 டிகிரி கோணத்தில் வைத்து, ஒவ்வொரு பல்லையும் சில விநாடிகள் மேலும் கீழுமாகவும், பின்னர் பற்களின் உட்பக்கமாகவும் துலக்க வேண்டும். பல் துலக்கும்போது, `சரியாகத் துலக்கியிருக்கிறோமா’ என்று கண்ணாடியில் பார்த்துக்கொள்வது நல்லது.

பற்களுக்கு இடையே, பிரஷ் போக முடியாத பகுதிகளில் இருக்கும் கிருமிகள் மற்றும் அழுக்கு களை, மெல்லிய நூல் வடிவில் கிடைக்கும் டென்டல் ஃப்ளாஸ் (dental floss) கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் மவுத்வாஷ் செய்ய வேண்டும். இந்த மூன்று கோல்டன் ரூல்களையும் தினமும் இரண்டு வேளை கடைப்பிடித்தால், பற்களின் ஆரோக்கியத்துக்கு கியாரன்டி.

தவிர, பிரஷ்ஷால் மென்மையாகவோ, டங்க் க்ளீனர் கொண்டோ நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். டங்க் க்ளீனரை வேகம் இல்லாமல், பொறுமையாகப் பயன்படுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.  பற்கள் மட்டுமல்லாமல், வாய் முழுவதையும் ஆரோக்கியமாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக, பற்களைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். 

இதை எல்லாம் செய்யாதீர்கள்..!

கடினமான பொருட்களைக் கடிப்பது, அதிக சூடான, அதிக குளிர்ச்சியான உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடுவது, பற்களை நறநறவென்று கடிப்பது போன்ற பழக்கங்களால் எனாமல் பாதிக்கப்பட்டு, பற்கள் பலவீனமடையும் என்பதால் இவற்றை செய்யக் கூடாது. சாக்லேட் கேக், க்ரீம் கேக், குளிர்பானங்கள், மிக குளிர்ச்சியான உணவுகள், மிக சூடான உணவுகள், ஸ்நாக்ஸ் ஆகியவற்றை முடிந்தவரையில் தவிர்க்கவும். இவற்றைச் சாப்பிட்டபின் கட்டாயம் பல் துலக்க வேண்டும். அதிக நேரம், நன்றாக அழுத்தி பற்களை துலக்க வேண்டும் என்பதில்லை. அவ்வாறு செய்தால் ஈறுகள் பலவீனமடைந்து பல் கூச்சம், ஈறுகளில் ரத்தம் வருவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். பல் மற்றும் ஈறுகளுக்கு இடையில் பிளாக் (plaque) எனப்படும் மஞ்சள்நிறக் காரை படிந்து, பல் துலக்கும்போது அவற்றில் இருந்து ரத்தம் வரும். பற்களில் எந்த ஒரு பாதிப்பு வந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பல்சொத்தை!

சரியாகப் பல் துலக்காதது போன்ற காரணங்களால் சொத்தை பல் பிரச்னைகள் ஏற்படும். அதற்கு ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுகி அதனை சரிசெய்து, ஃபில்லிங் மெட்டீரியலைக் கொண்டு அடைப்பதோ அல்லது `ஆர்சிடி’ (Root Canal Treatment) எனப்படும் வேர் சிகிச்சையோ எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை பல் சொத்தை அதிகமாக இருந்தால், அந்த பல்லை அகற்றி அடுத்த பல்லுக்குப் சொத்தைபரவாமல் தடுக்க வேண்டும். தேவைப்பட்டால் செயற்கை பற்கள் பொருத்திக்கொள்ளலாம்.

இனிப்பு சாப்பிட்டால் சொத்தை ஏற்படும் என்பதில்லை. இனிப்பும் சாப்பிடலாம். சாப் பிட்ட பின்னர் அந்த உணவுத் துகள்கள் பற் களில் படியாதவாறு வாய் கொப்பளித்து, பல் துலக்கி நீக்கிவிட்டால் பல்சொத்தை வராது.

பல் கறைகள்!

புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்து வது, அவற்றை வாயில் அதக்கிக்கொள்வது, மதுப்பழக்கம், டீ, காபி அதிகமாக குடிப்பது, சரியாகப் பல் துலக்காதது போன்ற தெரிந்தே செய்யக்கூடிய தவறுகளாலும் (intrinsic),  சமயங்களில் சிலருக்கு இயல்பாகவேயும் (extrinsic) பல் கறைகள் ஏற்படும். மேலும், வாய்க்குள் புகையிலைப் பொருட்களை அடைத்து வைத்திருப்பதால் ‘ஓரல் கேன்சர்’ போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.

பல்லை பலப்படுத்தும் உணவுகள்!

தயிர், கீரை வகைகள், நட்ஸ், தேங்காய் போன்றவற்றை சாப்பிடுவதும், கேரட், ஆப்பிளை நறுக்காமல் கடித்துச் சாப்பிடுவதும் பற்களுக்கு பலம் தரும். கரும்பை நன்றாகக் கடித்துச் சாப்பிட்டுவிட்டு, கட்டாயம் பல் துலக்கிவிடவும். சுகர் ஃப்ரீ சூயிங்கம் அடிக்கடி மெல்லும்போது, வாயில் எச்சில் அதிகம் ஊறுவதோடு, பற்களுக்கு நல்ல பயிற்சியையும் கொடுக்கும்’’ என்று  தகவல்கள் தந்த டாக்டர்,

‘‘பல் வலி வந்தால்தான் பல் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்பது தவறான வழக்கம்.

பிரச்னைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று பற்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்வது, உங்கள் புன்னகையை எப்போதும் அழகாக மட்டுமல்லாமல், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்’’ என்றார் நிறைவாக.

தன்னம்பிக்கைப் புன்னகை பூக்கட்டும்!

கு.ஆனந்தராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தைகளின் பற்களுக்கு கூடுதல் கவனம்!

முத்துப்பல் சிரிப்புக்கு... முழுமையான வழிகாட்டி!

• சில குழந்தைகளை பால் புட்டியை வாயில்வைத்தபடியே தூங்கவைப்பார்கள் பெற்றோர். அப்போது பாலின் இனிப்பு பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து, அவர்களுக்கு பால் பற்களிலேயே பல் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும் என்பதால், இது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம்.

• குழந்தைகளின் 7 - 12 வயதில் பால் பற்கள் விழுந்து, நிரந்தரப் பற்கள் முளைக்கும். அப்போது அவர்கள் கை சூப்பினால், சீரற்ற பல்வரிசை ஏற்படும்.

• குழந்தைகளுக்கு விவரம் தெரியும்வரை பெற்றோர்கள் காலை, இரவு வேளைகளில் அவர்களுக்குப் பல்துலக்கி விடவேண்டும். பின்னர் அவர்களையே துலக்கச் செய்ய வேண்டும்.

• குழந்தைகளின் பற்களை அவ்வப்போது கவனித்துக்கொள்வது சிறந்தது. 12 வயதுவரை பால் பற்கள் விழாமல் இருந்தால், மருத்துவ ஆலோசனையும், பல் பரிசோதனையும் அவசியம்.

கர்ப்பிணிகளுக்கு!

ஹார்மோனல் மாற்றங்களால் கர்ப்பிணிகளுக்கு ஈறுகள் வீங்கி அடிக்கடி ரத்தமும், பல்வேறு பல் பாதிப்புகளும் ஏற்படும். கர்ப்பகாலத்தில் பல் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்.

க்ளிப் அணியும்போது... கவனிக்க!

முத்துப்பல் சிரிப்புக்கு... முழுமையான வழிகாட்டி!

• சீரற்ற பல் வரிசையை சீர்செய்ய க்ளிப் அணிந்திருக்கும் காலகட்டத்தில் பல்லை சிறப்பு கவனத்துடன் பராமரிக்க வேண்டும். க்ளிப் அணிந்திருக்கும் பற்களுக்கான பிரத்யேக ஆர்த்தோ பிரஷ்களைப் பயன்படுத்த வேண்டும். க்ளிப்புகளுக்கு இடையே சிக்கியிருக்கும் சிறிய உணவுத் துகள்களை கவனத்துடன் நீக்க வேண்டும். கடினமான உணவுகளைத் தவிர்ப்பதுடன், மென்மையான உணவுகளையும் சிறு துண்டுகளாக்கிச் சாப்பிடுவது நலம்.

• ‘ரிமூவபிள்’, ‘ஃபிக்ஸட்’ என இரண்டு வகையான க்ளிப்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிறு வயதில் இருந்தே குழந்தைகளின் பல் வரிசையை கவனித்து, நிரந்தர பற்கள் முளைத்த பிறகு, மருத்துவரிடம் ஆலோசித்து, தேவைப்பட்டால் அந்த வயதிலேயே  க்ளிப் அணிவிப்பது சிறந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism