Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!

‘‘நடிப்புக்காக எந்த ரிஸ்க் எடுக்கவும் தயார்!’’

கேபிள் கலாட்டா!

‘‘நடிப்புக்காக எந்த ரிஸ்க் எடுக்கவும் தயார்!’’

Published:Updated:
கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!

ன் டி.வி ‘வம்சம்’ சீரியலில் ‘பூமிகா’வாக அசத்தி வருகிறார், சந்தியா!

‘‘தெலுங்குப் பொண்ணு நான். கரஸ்ல தான் காலேஜ் படிச்சேன். எதேச்சையா தெலுங்கு சேனலில் ஆங்கரிங் வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து, 15 தெலுங்கு சீரியல்களில் நடிக்கிற அளவுக்கு மீடியாவில் ஐக்கியமாயிட்டேன். அப்போ சன் டி.வி ‘செல்லமடி நீ எனக்கு’ சீரியல் வாய்ப்பு வர, தமிழ் தெரியாதுனாலும் சமாளிச்சிடலாம்னு ஒப்புக்கிட்டேன். ஆனா, சுத்தமா தமிழே வராம, நிறைய டேக் வாங்கினேன். அம்மா உதவியோட தமிழ் கத்துக்கிட்டு, அந்த சீரியல்ல நல்ல பெர்ஃபார்மன்ஸ் கொடுத்தேன். அதில் ஒருமுறை யானை கூட நடிக்கிற ஒரு ஸீன்ல, அந்த யானை என்னை எதிர்பாராதவிதமா தாக்க, உயிர் போய் உயிர் வந்த அளவுக்கு ஒரு விபத்து நடந்திருச்சு. குணமானதுக்கு அப்புறம் தொடர்ந்து நடிச்சேன். பிறகு,  தெலுங்கு சீரியல் வாய்ப்பு கிடச்சதால, ஆந்திரா பக்கம் போயிட்டேன்.சின்ன இடைவெளிக்கு அப்புறம் சன் டி.வி ‘அத்திப்பூக்கள்’ சீரியல். மறுபடியும் பிரேக். இப்போ ‘வம்சம்’. தெலுங்குல ரெண்டு படங்கள் நடிச்சிருக்கேன். தமிழ்ல நான் நடிச்ச ரெண்டு படங்கள் ரிலீஸ் ஆகவிருக்கு. கவனிச்சீங்களா... இப்போ நான் சூப்பரா தமிழ் பேசுறேன்!’’

குட் ஃப்ளாஷ்பேக்!

‘துப்பாக்கி’ வில்லனின் காதலி!

கேபிள் கலாட்டா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோனா சிங்... ஜெயா டி.வி ‘சொன்னது நீதானா’ டப்பிங் சீரியலின் நாயகி (இந்தியில் ‘க்யா ஹுவா தேரா வாதா'). இந்த சண்டிகர் பெண்ணுக்கு இப்போது வயது 34. 2006-ம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜலக் திக்லா தா’ டான்ஸ் ஷோவின் வின்னர். ‘3 இடியட்ஸ்’ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். சீரியலிலும் கலக்கினாலும், ஒரு ரியாலிட்டி ஷோவை தானே இயக்கி, தொகுத்து வழங்குவதே அவரின் ஆசை. அப்படி பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியும் உள்ளார். 2013-ல் ‘துப்பாக்கி’ பட வில்லன் வித்யூத் ஜம்வாலுடன் காதல், விரைவில் திருமணம் என அறிவித்தார். பின்னர் ஏனோ... அது டிராப். ஏக்தா கபூரின் புதிய தொடரான ‘காவச்’ சீரியலில் மோனா சிங்தான் ஹீரோயின். அடிக்கடி கிசுகிசுக்களில் சிக்கினாலும் தனக்கென தனி பாணியில் தைரியமாக எதையும் சமாளிப்பது மோனா சிங் ஸ்பெஷல்!

இந்தி நயன்தாரா!

‘‘நான் இப்போ ஹீரோயின்!’’

கேபிள் கலாட்டா!

‘பீட்ஸா’, ‘காஞ்சனா’, இப்போது ‘களம்’ என தொடர்ந்து ஹாரர் படங்களாக மிரட்டுகிறார் எஸ்.எஸ் மியூஸிக் பூஜா!

‘‘அதானே இப்போ ட்ரெண்ட்... அதனால நடிச்சேன். ஆனா, இனிமே நோ ஹாரர் படம். அடுத்து மூணு படங்களில் நடிச்சிட்டு இருக்கேன். அதில் ரெண்டு படங்களில் கேரக்டர் ரோல், ஒரு படத்தில் ஹீரோயின் ரோல். என்னைப் பொறுத்தவரைக்கும் கதைதான் ஹீரோ, ஹீரோயின் எல்லாம். நான் `விஜே'வா இருந்தப்போ நிறைய ஹீரோயின் சான்ஸ் வந்தது. அப்போ நான் வேண்டாம்னு தவிர்த்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். மிஸ் பண்ணிட்டோமேனு அப்புறம்தான் தோணுச்சு. இருந்தாலும் அப்போ எஸ்.எஸ். மியூஸிக் பூஜாவா இருந்ததும் செம கிரேஸ்தான். சினிமாவும், பயணங்களும்தான் இந்த நிமிஷம் பிடிச்ச விஷயங்களா இருக்கு. தனியா கிளம்பி நாடு நாடா ஜாலி டூர் போயிட்டு இருக்கேன். எல்லா நாட்டுச் சாப்பாட்டையும் சாப்பிட்டு, அதுக்கு ஈடுகொடுக்க ஜிம்ல வொர்க்அவுட் செஞ்சுனு... என்ஜாயிங்!’’

நாடோடிப் பொண்ணு!

``என் டிரெஸ்ஸுக்கு நிறைய ஃபேன்ஸ்!''

கேபிள் கலாட்டா!

சன் டி.வி-யின் `கிச்சன் கலாட்டா' குயின் ஃபரினா பேகம் .. பளிச் சிரிப்பு, கன்னக்குழி என்றிருக்கும்  ஜாலி பொண்ணு.

``சென்னைதான் சொந்த ஊரு. பி.எஸ்ஸி., பயோடெக், எம்.பி.ஏ படிச்சுட்டு, மீடியா ஆர்வத்தால ஒரு லோக்கல் சேனல்ல சேர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து இப்போ சன் டி.வி ‘கிச்சன் கலாட்டா’ மட்டுமில்லாம இன்னும் சில நிகழ்ச்சிகள் செய்துட்டு இருக்கேன். ‘கிச்சன் கலாட்டா’ நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் புடவை, சல்வார்னு சாதாரணமாதான் வந்துட்டு இருந்தேன். அப்புறம்தான் காஸ்ட்யூம்ல கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். இப்போ என் டிரெஸ்ஸுக்கு நிறைய ஃபேன்ஸ். கன்னக்குழி சிரிப்பு என் ப்ளஸ். எல்லார்கிட்டயும் பணிவா இருக்கிறது, சில நேரங்கள்ல மைனஸாகிடுது. `அடுத்து சினிமாவா'னு கேட்காதீங்க. என்னது... அப்படி எல்லாம் எதுவும் கேட்கலையா? ஓ.கே... ஓ.கே!’’

சிரிப்பில் குழிகிறது கன்னம்!

ரிமோட் ரீட்டா, படங்கள்:எம்.உசேன்

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:ரூ 150

பக்தி மணம்!

``வசந்த் டி.வி-யின் 'ஆலய தரிசனம்' என்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்னப்பள்ளியில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயம் பற்றிய சுவையான தகவல்களை அழகு தமிழில் தெளிவாகக் கூறினார்கள். கோயிலுக்கு நேரில் சென்று வந்ததைப் போல இருந்தது. இதுபோன்ற பக்தி மணம் கமழும் நிகழ்ச்சிகளை பிற சேனல்களும் அடிக்கடி ஒளிபரப்ப வேண்டும்!'' என்று கோரிக்கை வைக்கிறார், கிருஷ்ணகிரியில் இருந்து வி.ஜெயலட்சுமி.

வெற்றிக்கு ஒரு வழிகாட்டி!

``பெப்பர்ஸ் டி.வி-யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் காலை 8 மணிக்கு 'பெப்பர்ஸ் மார்னிங்' பகுதியில் இடம்பெறும் 'சம்பவங்கள் சொல்லும் சங்கதிகள்' நிகழ்ச்சியில் சாதனையாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடைபெற்ற சின்னச் சின்ன விஷயங்கள் எவ்வாறு பெரிய வெற்றிகளுக்கு வழிவகுத்தன என்பதை விவரிக்கும் அனுபவங்கள் நமக்கு பாடமாக விளங்குகின்றன. அதோடு அலுவலகத்துக்கு, கல்வி நிலையங்களுக்குச் செல்லும் முன்னதாக இதை பார்த்துவிட்டு செல்வது நல்ல உத்வேகத்தை தருகிறது'' என்று பாராட்டுகிறார், மதுரையில் இருந்து  ராணி மகாலிங்கம்.

ஈடில்லாத இல்லற அன்பு!

``சமீபத்தில் வெளியான ஒரு டி.வி விளம்பரத்தில் மனைவி ஒரு கப்பில் தனக்கு குறைந்த அளவு காபியும், மறு கப்பில் தன் கணவருக்கு அதிக அளவு காபியும் நிரப்பி, அதை கணவரிடம் குடிக்கச் சொல்லி, அவரின் உழைப்பை பெருமையாகக் கூற... கணவரோ, `நீ எனக்காக ஒவ்வொரு தருணத்திலும் இழந்த இழப்புக்கள்தான் பெரியவை. நீதான் முதன்மையானவள்' என மனைவியை உயர்வுபடுத்தி இரு கப்புகளிலும் காபியை சமமாக நிரப்பி குடிக்கக் கொடுக்க, அங்கே ஓர் உண்மையான இல்லற அன்பு வெளிப்படுகிறது. இந்த விளம்பரத்தில் தம்பதிகளின் அந்நியோன்யம் மேலோங்கி நிற்பது, மனதைக் கவர்கிறது'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவிக் கிறார், சென்னையில் இருந்து பி.சந்திரகலா.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism