Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா!

அனுஷா... ஆதிரா... இனியா!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷா... ஆதிரா... இனியா!

ரெண்டாவது கல்யாணம் உஷார்!டிஜிட்டல் கச்சேரி

அனுஷா... ஆதிரா... இனியா!

ரெண்டாவது கல்யாணம் உஷார்!டிஜிட்டல் கச்சேரி

Published:Updated:
அனுஷா... ஆதிரா... இனியா!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷா... ஆதிரா... இனியா!
அனுஷா... ஆதிரா... இனியா!

கோடை மழை திடீர்னு வரும், அப்புறம் காணாமல் போயிடும். ஆனா... நம்ம அனுஷா, ஆதிரா, இனியா இவங்க மூணு பேருக்கும் செமஸ்டர் ஹாலிடேஸ் முழுக்க ஷாப்பிங் மழைதான்!

சம்மருக்கு ஏற்ற காட்டன் கலெக்‌ஷன்ஸ், `காலேஜ் வேர்'-க்கு விதம்விதமா ஆடைகள், இருக்கிறதுலயே குட்டி சைஸ் லஞ்ச் பாக்ஸ், பெரிய பெரிய  அக்சஸரீஸ்னு மூணு பேரும் டயர்ட் ஆகிற அளவுக்கு ஷாப் செய்து, பைகளைத் தூக்க முடியாமல் தூக்கிக்கிட்டு வீடு வந்து சேர்ந்தாங்க.

‘‘ஸ்ஸப்பா... வெயில் தாங்கலை. போன வாரம் துணை ராணுவம் படகோட வந்து காத்திருக்கிற அளவுக்கு மழை பெஞ்சது. இப்ப என்னடான்னா இப்படி வெயில் கொளுத்துதே...’’ - சோபாவில் சாய்ந்தபடி ஒரு பாட்டில் தண்ணீரை `மடக் மடக்'கென்று குடித்தாள் அனுஷா.

‘‘அனு... யாருக்குத் தெரியும்.. இப்ப திடீர்னு மழை பெஞ்சாலும் பெய்யும். சொல்றதுக்கு இல்ல!''

`‘ஏதோ வானிலை மாறுதே...’’

‘‘ஆதிரா... மழைனா பாட்டு தானா வருதுபோல! சென்னையில மழை வெள்ளம் வந்து அஞ்சு மாசம் ஆகியும், மழைன்னா மனசுக்குள்ள கொஞ்சம் பயம் வரத்தான் செய்யுது. இந்த முறை இலங்கையை மழை ரொம்பவே பாதிச்சிடுச்சு. 5 லட்சம் பேர் தங்க இடம் இல்லாமல் இடம்பெயர்ந்திருக்காங்க. பலர் நிலச்சரிவுல புதைஞ்சதாவும் சொல்றாங்க.’’

‘‘ஆமாம்பா... அந்த மக்கள் மீண்டு வர `பிரே' பண்றதோட, நம்மால முடிஞ்ச அளவுக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ணணும் இனியா.’’

‘‘நிச்சயமா! தேர்தல் முடிவில் இந்த முறையும் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வரா தேர்வாகி இருக்காங்கல்ல... அடுத்த அஞ்சு வருஷங்களுக்கு மக்களுக்கு அவங்க நல்ல திட்டங்களை கொண்டு வரணும்னு, அவங்களை வாழ்த்தி ஒரு கடிதம் எழுதி போஸ்ட் பண்ணேன் அனு...’’

‘‘சூப்பர் ஆதிரா! இந்த அரசியல் ஆர்வமும், பார்வையும் நிச்சயமா நமக்கு வேணும். ‘டாக்டராகப் போறேன்’, ‘இன்ஜினீயராகப் போறேன்’னு சொல்ற மாணவர்கள்ல ஒரு சதவிகிதமாச்சும் ‘நான் அரசியல்வாதி ஆகப்போறேன்’னு சொல்லணும். அதுதான் நிஜமான மாற்றம்னு நினைக்கிறேன்.’’

‘‘பாலிடிக்ஸ் அப்புறம் பேசலாம். எனக்கு இப்ப பிரெட் ஆம்லெட் சாப்பிடணும்போல இருக்கு. பக்கத்து கடைக்குப் போகலாமா?''

‘‘அச்சச்்சோ... பிரெட்டா?! நூடுல்ஸ்ல ரசாயனம்னு கலந்திருக் குனு தேசத்தையே அலற வெச்ச நியூஸ் மாதிரி, இப்போ பிரெட், பீட்சா, பர்கர்னு எல்லாத்துலயும் ரசாயனம் கலந்திருக்குனு வந்த சர்ச்சை பத்தி நீ படிக்கலையா இனியா?’’

‘‘படிச்சேன்ப்பா. பிரெட்ல பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட்  போன்ற வேதிப்பொருட்கள் கலந்திருக்காம். இது தைராய்டு பிரச்னை முதல் புற்றுநோய்வரை பாதிப்புகளை ஏற்படுத்தும்னு ஆய்வுகள் சொல்லுது.’’

‘‘எல்லாமே ரசாயனமயம் ஆயிடுச்சு. நாம எதைத்தான் நம்பி சாப்பிடுறதுனு தெரியலை.’’

‘‘இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தணும். நம்ம பாரம்பர்ய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். எங்க வீட்டுக்குப் பக்கத்துல, அரசுப் பள்ளியில எட்டாவது படிக்கிற ஒரு பொண்ணு, விவசாயத்தின் சிறப்புகளைப் பத்தி ஒரு லோக்கல் சேனல் பட்டிமன்றத்துல பேசி அசத்திட்டா!’’

‘‘இப்போ தனியார் பள்ளிகளுக்கு இணையா அரசுப் பள்ளி மாணவர்களும் நிறைய சாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களுக் கான தேவை... அவங்களோட திறமையை வெளிக்கொண்டு வர்ற, ஊக்குவிக்கிற ஆசிரியர்கள்தான்.’’

‘‘இனியா... நான் ஒரு வீடியோ பார்த்தேன். அரசுப் பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்குப் பிடிக்கிற மாதிரி, மாறுவேஷத்துல எல்லாம் வந்து பாடம் நடத்துறார். ரியலி கிரேட்! அந்த வீடியோவை அனுப்புறேன் பாரேன்!’’

‘‘ஏய் அனு... நீ என்ன ஹெட்செட் போட்டுட்டு விடாம தலையாட்டிக்கிட்டே இருக்க?’’

‘‘மராத்தியில ‘சைரஹத்’னு ஒரு படம் லேட்டஸ்டா ரிலீஸ் ஆகி இருக்கு. ஆணவக் கொலைகளோட தாக்கத்தை கண்முன்னாடி கொண்டு வந்து நிறுத்துற இந்தப் படத்தை, நாகராஜ் மஞ்சுலே இயக்கி இருக்கார். மும்பையில இருக்கிற எங்க அங்கிள் ‘மிஸ் பண்ணிடாம பாரு அனு!’னு சொன்னார். இந்த படம் தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆகட்டும்னு வெயிட் பண்றேன். இந்த படம் மட்டுமில்ல, பாட்டும் செம ஹிட். அதான் ரிபீட் மோடுல கேட்டுட்டு இருக்கேன்.’’

‘‘நாங்க ‘ஷேர் இட்’ ஆன் பண்றோம்... எங்களுக்கும் அனுப்பு செல்லம்!’’

‘‘ஹேய்... நான் சொல்ல மறந்துட்டேன். எங்க ரிலேட்டிவ் பொண்ணு மஞ்சுவுக்கு நாளைக்கு செகண்ட் மேரேஜ். அவளுக்கு ஏதாச்சும் கிஃப்ட் வாங்கப் போகணும்... கிளம்புங்க டியூட்ஸ்!’’

‘ஏய்... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கோயம்புத்தூருக்கு இந்த அக்கா கல்யாணத்துக்குதானே போயிட்டு வந்த? என்னாச்சும்மா அவங்களுக்கு?’’

‘‘யெஸ்... அவங்களேதான். அந்தக் கல்யாணத்துல பொறுத்துக்க, சகிச்சுக்க முடியாத அளவுக்கு நிறைய பிரச்னைகள். டைவர்ஸ் வாங்கி, இப்போதான் கொஞ்சம் `ஓ.கே' ஆனாங்க. அதான் வீட்டுல செகண்ட் மேரேஜுக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்க.’’

‘‘கல்யாண விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கணும்னு சொல்வாங்க. அதுவும், ஏற்கெனவே அடிபட்டதால செகண்ட் மேரேஜ்ல பல மடங்கு கவனமா இருக்கணும். ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க தெரிஞ்சுக்க வேண்டிய, தெளிவுபடுத்திக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. 2009-ல கொண்டுவரப்பட்ட சட்டப்படி ரெண்டாவது திருமணத்தையும் கண்டிப்பா பதிவு செய்யணும்னு நான் படிச்சிருக்கேன்.’’

‘‘இதையெல்லாம் நான் நிச்சயமா என் கஸினுக்கு சொல்றேன். இப்போ கல்யாணத்துக்கு கிஃப்ட் வாங்கப் போகலாமா?!’’

ஷாப்பிங் என்றால் கசக்குமா? மீண்டும் டச் அப் செய்துகொண்டு கிளம்பினார்கள் மூவரும்!

- கச்சேரி களைகட்டும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுஷா... ஆதிரா... இனியா!

பிரெட்டில் என்ன ஆபத்து இருக்கிறது? http://bit.ly/1syxjfY

அனுஷா... ஆதிரா... இனியா!

இதுதாண்டா அரசு பள்ளி! வீடியோவைப் பாருங்க: http://bit.ly/1sAw3sG

அனுஷா... ஆதிரா... இனியா!

`சைரஹத்' பாடல்களைக் கேட்டு மகிழ, http://bit.ly/1TIZyyK

அனுஷா... ஆதிரா... இனியா!

இரண்டாவது திருமணம் செய்வோர் தெரிந்துகொள்ள வேண்டிய 8 விஷயங்கள்! http://bit.ly/22q3UkN

அனுஷா... ஆதிரா... இனியா!

இலங்கை மழையில் நடந்தது என்ன? http://bit.ly/1WHZSVh

அனுஷா... ஆதிரா... இனியா!

அசத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணைய தள முகவரியை  தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism