தன்னம்பிக்கை
Published:Updated:

குழந்தைகள் சங்கீதத்தில் சிறக்க வேண்டுமா?

குழந்தைகள் சங்கீதத்தில் சிறக்க வேண்டுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைகள் சங்கீதத்தில் சிறக்க வேண்டுமா?

- சுதா ரகுநாதன் தரும் சூப்பர் டிப்ஸ்சங்கீதம்

குழந்தைகள் சங்கீதத்தில் சிறக்க வேண்டுமா?

குழந்தைகளை, சங்கீத துறையில் செலுத்துவதற்கான ஆரம்பநிலை வழிகாட்டல் களைச் சொல்கிறார், கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன்.

 குழந்தைகள் ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து ஒரு விஷயத்தைக் கற்க பொறுமையும் கவனமும் அவசியம். எனவே, 4 அல்லது 5 வயதில் இருந்து குழந்தை களுக்கு பாடல் பயிற்சியை தர ஆரம்பிக்கலாம்.

 குரலை வளப்படுத்து வதற்கான அடிப்படை பயிற்சிகளை அவர்கள் கற்றுத்தெளிய மூன்று வருடங்கள் ஆகும்.

 அலங்கார வரிசை என்று சொல்லப்படும் அடிப்படைப் பயிற்சி, குழந்தைகளுக்கு போர் அடிப்பதுபோல இருக்கும் என்பதால், பாரதியார் பாடல்கள் போன்று சிறிய பாடல்கள் கற்றுக் கொடுக்கப்படும். இசையை எதிர்காலமாகக்கொள்ள, இந்த அடிப்படைப் பயிற்சி மிகமுக்கியம் என்பதால், பொறுமையுடன் கற்க வேண்டும். 

 அடிப்படைப் பயிற்சி முடிந்தவுடன் வர்ணம் தொடங்கும். இந்தப் பயிற்சியில் குரல்வளம் வலுப்படும். தாளமும் சரியாக நிற்கும். அதன் பின்னர்தான் கீர்த்தனைப் பயிற்சிகள் தொடங்கும். தமிழ் பாடல்கள், தியாகராயர் பாடல்கள், தேவாரம், திவ்யபிரபந்த பாடல்கள் கற்றுக்கொடுக்கப்படும். கீர்த்தனைகள் வரை கற்றுக் கொள்ள ஐந்து ஆண்டுகள் ஆகும்.

 சங்கீதம் பயிலும் குழந்தைகளுக்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம்.அதிக புளிப்பு, காரம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. அதிகம் கத்திப் பேசக் கூடாது.

 பயிற்சி வகுப்புகள் தவிர்த்து, வீட்டிலேயே இசைக் கருவிகள் வைத்து பயிற்சிசெய்ய வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்கு பிரம்மமுகூர்த்த நேரத்தில் பாடல் பயிற்சிகளை தொடர்ந்து சிரத்தையாக செய்துவர வேண்டும்.

  - கே.பாலசுப்பிரமணி

இசை ஆசிரியர்களுக்கு..!

‘‘ஸ்ருதி என்றும், குரல்கட்டை என்றும் சொல்லப்படுவதில் குழந்தைகள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை, இசை ஆசிரியர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். நல்ல குரல்வளம் உள்ள குழந்தைகள் 6 கட்டையில் பாடுவார்கள். குரல் உடையும்போது அரை கட்டை குறைய ஆரம்பிக்கும். சில ஆண் குழந்தைகளுக்கு குரல் உடையும் முன்பு பெண் குரல்போல இருக்கும். குரல் உடையும்போது 2 கட்டைவரை குறையும். ஆசிரியர்கள், இந்தக் குரல்கட்டையை கவனித்து, குழந்தைக்கு எந்தக் கட்டை இயல்பாக வருகிறதோ அதில் பாட அனுமதிக்க வேண்டும். சக்தியை மீறிப் பாடவைக்கும்போது, தொண்டையில் புண் வருவதோடு, குரல்வளை, குரல்கட்டை மற்றும் குரல்வளமும் பாதிக்கப்படும்!’’