Published:Updated:

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 8

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 8
பிரீமியம் ஸ்டோரி
News
செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 8

‘‘அலியா பட் ஸ்டைலை ஃபாலோ பண்ணுவேன்!’’

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 8

மாடலிங், சினிமா, ஃபேஷன் ஷோ என்று பல துறைகளில் நம்மைச் சந்திப்பவர், சஞ்ஜிதா ஷெட்டி. ஆரம்பத்தில் பல பத்திரிகைகளின் அட்டைப்படங்களை அலங்கரித்தவர், சினிமாவுக்கு வந்த பின் ஆடைகளில் அசத்தலாக மெருகேறினார். ஃபேஷன் ஷோக்களில் ஷோ டாப்பராக கலக்கிக்கொண்டிருக்கும் இவரின் ஆடைகளுக்கு, மிகுந்த வரவேற்பு. தன் க்யூட் ஹாட் டிரெஸ்ஸிங் சென்ஸ் பற்றிச் சொல்கிறார் சஞ்சிதா...

ஷாப்பிங் திருவிழா!

பொதுவா, பிராண்டட் ஆடைகள்தான் எனக்குப் பிடிக்கும். அதுக்காக விலை அதிகமானதா எடுப்பேன்னு இல்லை. ரேட், அந்த மெட்டீரியலுக்கும் டிசைனுக்கும் நியாயமா இருந்ததுனா, யோசிக்காம எடுத்துடுவேன். முன்னயெல்லாம் பெங்களூரில் மட்டும்தான் ஆடைகள் வாங்குவேன். அதுதான் எனக்கு செட் ஆகும்னு ஒரு நம்பிக்கையில் நான் செட் ஆயிட்டேன். இப்போ சென்னை வந்த பிறகு, இங்க சாதாரண கடைகளில்கூட ஆடைகள் வெரைட்டியா கிடைக்கிறது எனக்கு ஆச்சர்யமா இருக்கு; ரொம்பப் பிடிச்சிருக்கு!

ஷாப்பிங்னா, எனக்குத் திருவிழாவுக்குப் போற சந்தோஷம் வந்துடும். பொதுவா, என் ஃபெரெண்ட்ஸ்கூடதான் ஷாப்பிங் போவேன். ‘இது நல்லாயிருக்கு’, ‘அது உனக்குப் பொருத்தமா இருக்காது’னு அவங்க நிறைய விஷயங்கள் சொல்வாங்க. அதையெல்லாம் அமைதியா கேட்டுப்பேன். ஆனா, கடைசியில எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் எடுப்பேன். ஸாரி டார்லிங்ஸ்!

ஷாப்பிங், எனக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டரும்கூட. ஏதாச்சும் மனசு சரியில்லை, கோபமா, சோகமா இருந்தா ஹேண்ட்பேக் எடுத்துட்டு ஷாப் பண்ணக் கிளம்பிடுவேன். ரெண்டு கையும் கொள்ளாம பைகளைத் தூக்கிட்டு வீடு திரும்பும்போது, நார்மல் மோடுக்குத் திரும்பியிருப்பேன்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 8

லைக்... டிஸ்லைக்!

எனக்கு சிங்கிள் பீஸ் லாங் கவுன் பிடிக்கும். லெகிங்ஸ் அண்ட் குர்தி ரொம்பப் பிடிக்கும். ஹெவி வொர்க் ஆடைகள்னா எனக்கு அலர்ஜி. அவ்வளவு விலைகொடுத்து வாங்கி, அதைத் தூக்க முடியாம தூக்கிட்டு நடந்து... தேவையா சொல்லுங்க?!

கம்மல் கம்பல்ஸரி!

எந்த டிரெஸ் எடுத்தாலும், கையோட அதுக்குப் பொருத்தமா கம்மல் வாங்காம வீடுவந்து சேர மாட்டேன்.

ட்ரெடிஷனல் டிரெஸ்னா ஜிமிக்கி, கற்கள் வெச்ச கம்மல்... மாடர்ன் டிரெஸ்னா ஹூக் கம்மல், லாங் கம்மல்னு பார்த்துப் பார்த்து வாங்குவேன். நான் ஒரு கம்மல் காதலி!

ஆரஞ்சும் நானும்..!

எனக்குப் பிடிச்ச கலர், ஆரஞ்சு. அது எனக்கு லக்கி கலரும்கூட. அலுவல் சம்பந்தமா ஏதாச்சும் முக்கியமான நாள்னா, அன்னிக்கு ஆரஞ்சு கலர் டிரெஸ்தான் போட்டுட்டு போவேன். ரொம்ப கான்ஃபிடன்ட்டா இருக்கும். ஒவ்வொரு முறை ஷாப் செய்யும்போதும், நிச்சயமா ஏதாவது ஒரு ஆரஞ்சு கலர் பொருள் பில்லில் சேர்ந்துடும்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 8

டிசைனர் சஞ்ஜிதா!

எனக்கு காஸ்ட்யூம் டிசைனர்ஸ் இருக்காங்க. இருந்தாலும், பல நேரங்களில் நானே எனக்கு டிரெஸ் டிசைன் பண்ணிப்பேன். எனக்கு எது செட் ஆகும் என்பதைவிட, எது செட் ஆகாது என்பதை நினைவில்வைத்துதான் அதைச் செய்வேன். ஃபேஷன் டிசைனிங்குக்கு கோர்ஸ் முடிக்கணும்னு எல்லாம் இல்ல. அதில் ஆர்வமும் கற்பனைத்திறனும் இருந்தா போதும்!

இன்ஸ்பிரேஷன்!


பாலிவுட் நடிகைகள் எல்லாரோட ஆடைகளையும் தவறாமல் கவனிச்சிட்டு வருவேன். குறிப்பா, அலியா பட். அவங்களோட டிரெஸ்ஸிங் பேட்டர்ன்களை எனக்கு முயற்சி செஞ்சு பார்ப்பேன்.

பிடிச்ச  டிரெஸ்!

என் அம்மாவுக்கு நான் புடவை கட்டினா ரொம்பப் பிடிக்கும். ‘ஜீன்ஸ்தான் உனக்கு நல்லாயிருக்கு’னு சொல்வான் அண்ணன். சல்வார் போட்டா, எங்கப்பாகிட்ட ‘சூப்பர்’னு பாராட்டு வாங்கலாம். யார்கூட வெளிய போறேனோ, அப்போ அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி உடுத்தி சந்தோஷப்படுத்துவேன். எனக்கு ரொம்பப் பிடிச்சது, கவுன்!

மிரண்டுவிட்டேன்!

‘சென்னையில ஷாப்பிங்னாலே தி.நகர்தான்’னு என் ஃப்ரெண்ட் ஒருத்தி சொல்ல, குஷியா கிளம்பிட்டேன். ஆனா, அந்தக் கூட்டத்தைப் பார்த்து மிரண்டு, உடனே திரும்பி வந்துட்டேன். கூட்டத்தில் டிரெஸ் எடுக்கத் தனித்திறமை வேணும்போல பாஸ்!’’

 சு.சூர்யா கோமதி