தன்னம்பிக்கை
Published:Updated:

நீரிழிவை நீக்கும் நித்ய கல்யாணி!

நீரிழிவை நீக்கும்  நித்ய கல்யாணி!
பிரீமியம் ஸ்டோரி
News
நீரிழிவை நீக்கும் நித்ய கல்யாணி!

வைத்தியம்

நீரிழிவை நீக்கும்  நித்ய கல்யாணி!

ல்வேறு இடங்களில் தானாக வளரும் தாவரங்களில் ஒன்று நித்ய கல்யாணி. இதை பலர் அழகு தாவரமாக தோட்டங்களில் வளர்க்கிறார்கள். ஆனால், இதில் நிறைய மருத்துவக் குணங்கள் இருப்பது நம்மில் பலருக்கு தெரியவில்லை. நித்ய கல்யாணி பெரும்பாலும் சுடுகாட்டில் காணப்படுவதால்... இதை சுடுகாட்டு மல்லி, கல்லறைப் பூ உள்ளிட்ட பல வேறு பெயர்களில் அழைக்கின்றனர். நித்ய கல்யாணியில் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் என அனைத்தும் மருத்துவப் பயனுள்ளவை..

நித்ய கல்யாணி ரத்த அழுத்தத்தை குணப்படுத்தக் கூடியது. 5 அல்லது 6 நித்ய கல்யாணி பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி ஒரு நாளைக்கு 4 தடவை குடித்து வந்தால் அதிக தாகம், அதிக சிறுநீர்ப்போக்கு மற்றும் அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அத்துடன் பசியின்மையும் விலகும்.

இதன் வேரை உலர்த்தி பொடித்து ஒரு தேக்கரண்டி அளவு வாயில் போட்டு வெந்நீர் குடித்து வர... நீரிழிவு நோய் குணமாகும். வேர்த்தண்டுகளில் இருந்து ரத்தப் புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.

இதன் பூக்களில் இருந்து தோல் நோய்களுக்கான மருந்து கள் தயாரிக்கப்படுகின்றன. நித்ய கல்யாணி பூவின் கஷாயத்தை தினமும் 4 வேளை 25 மில்லி அளவு குடித்து வந்தால்... சிறுநீரகக் கோளாறுகள் நாளடைவில் குணமாகும்.

- எம்.மரிய பெல்சின்